Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கல்பட்டு தமிழர்களை விடுதலை செய்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துக்கொடுக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்

Featured Replies

போர்ச்சூழல் காரணமாக தமிழகம் வந்த எம் ஈழத்தமிழர்களில் சிலரை மூன்று வருடங்களாக அவர்கள் தங்கள் வழக்குகளைக் கூட எடுத்து நடாத்த முடியாத வகையில் தொடர்ந்தும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வேதனையுடன் பார்க்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி மனவிரக்தியுடன் அவல வாழ்வு வாழும் இவர்களை மனிதநேயத்தோடு விடுதலை செய்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துக்கொடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினஅல் புலம்பெயர்வாழ் தமிழர்கள் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தின் விபரம் கீழ்வருமாறு!

28.04.2012

மாண்புமிகு செல்வி. ஜெயலலிதா

தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாடு

அன்புடையீர்

தமிழக மக்களின் பேரன்பையும் பேராதரவையும் பெற்று தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற தாங்கள் தொடர்ந்தும் திறந்த மனதுடன் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வருவது மகிழ்வையும் உத்வேகத்தையும் தருகின்றது.

கடந்த வாரம் இலங்கை சென்று திரும்பிய இந்திய பாராளுமன்றக் குழுவில் இருந்து தங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் முதலில் விலக்கியதோடு தங்களின் ஆளுமையூடாக சிறீலங்கா அரசினதும் இந்திய மத்திய அரசினதும் உண்மை நிலையை சரியாகப் புரிந்து செயற்பட்டமையானது தங்கள் மேல் உள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கொடிய போரின் பின் உறவுகளையும் உடமைகளையும் இழந்து சாவிலிருந்து மீண்டவர்களாய் ஏக்கத்தோடு வாழும் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் உங்களின் இந்த கரிசனைக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

அதேவேளை போர்ச்சூழல் காரணமாக தமிழகம் வந்த எம் ஈழத்தமிழர்களில் சிலரை மூன்று வருடங்களாக தொடர்ந்தும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில்; அவர்கள் தங்கள் வழக்குகளைக் கூட எடுத்து நடாத்த முடியாத வகையில் தடுத்து வைத்திருப்பது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வேதனையுடன் பார்க்கப்படுகிறது.

தங்களின் விடுதலைக்காக மூன்று தடவைகளுக்கும் மேல் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டும் விடுதலைசெய்வதாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் இன்றுவரை விடுதலை செய்யாது ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்ற மனவிரக்தியுடன் அவல வாழ்வு வாழும் இவர்கள் விடையத்திலும் நீங்கள் மனிதநேயத்தோடு செயற்பட்டு தொடரும் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தி அவர்களை விடுதலை செய்து இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பில் வேண்டிநிற்கின்றோம்.

நன்றி

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

British Tamils Union (BTU)

On behalf of Tamils

United Kingdom

Tel: 0044 (0) 208 733 8268

E-mail: britishtamilsunion@gmail.com

http://www.seithy.com/breifNews.php?newsID=59323&category=TamilNews&language=tamil

540548_442139545812744_100000501084795_1718355_1166906709_n.jpg

380652_442129632480402_100000501084795_1718316_506346287_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.