Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுபட்டு விட்டது.

6. கே.ரி. பாடசாலை படிப்பு முடிய இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெற்றோர்களால் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அதனால் ஆங்கில அறிவை பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு. இவ்விதம் கேரி வெளி நாடு எதற்கும் பெற்றோரால் அனுப்பி வைக்கப்படவில்லை.

கருணா குழுவின் வரலாறு முடிவுக்கு வருகிறது!

அஸ்வதன்

Saturday, 06 May 2006

பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தின் காசம் குளம் என்னுமிடத்தில் முகாமிட்டிருந்த கருணா குழு முகாம்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்ட செய்தி மூலம் விடுதலைப் புலிகள் பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

01) எங்கும் எப்போதும் சென்று தாக்கும் திறன். விடுதலைப் புலிகளுக்கு உண்டு.

02) போர் நிறுத்த உடன்பாட்டின்படி அரசு செய்யாத ஒட்டுக் குழுக்களின் ஆயுதக் களைவை விடுதலைப் புலிகள் செய்தமை.

03) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் மூலம் கருணா குழுதான். தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை கடத்தியது என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

04) கருணா குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் படையினரால் வழங்கப்பட்டமை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

05) படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் கருணாகுழு இயங்கி வருவதற்கான ஆதாரங்கள்.

06) கருணா குழு முகாம் மீது விடுதலைப் புலிகளின் சிறப்புப்படையணி தாக்குதல் நடத்திய போது படையினர் கருணா குழுவுக்கு உதவியதிலிருந்து கருணா குழுவினருக்கு இராணுவம் உதவுவது போன்ற பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து போர் நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைக்கும் வகையில் கருணா குழு உட்பட இதர ஆயுதக் குழுக்களை கையகப்படுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அதிலும் குறிப்பாக கருணா குழுவை விடுதலைப்புலிகளுக்கு நிகரான ஒரு அமைப்பாக தென்னிலங்கை பேரினவாத ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின் படைத் தரப்பினரும் கருணா கும்பலின் உதவியுடன் கிழக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்கலாம் என்ற கற்பனாவாதத்தில் மிதந்தனர். எனினும், பொலநறுவை காசம்குளம் பகுதியில் கருணா கும்பலின் முகாம் மீதான தாக்குதலின் மூலம் 'எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்' என்பதை போராளிகள் மீளவும் நிலைநிறுத்திக் காட்டியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமான பொலநறுவை மாவட்டத்தின் எல்லைப் புறமான ஓர் இடமே காசங்குளம். இது வெலிக்கந்தையிலிருந்து கிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

பொலநறுவை வெலிக்கந்தைக்கு வடக்கே ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள திபுலானை என்ற இடத்திற்கும். காண்டக்காடு என்ற இராணுவ முகாமிற்கும் இடையிலுள்ள பிரதேசத்தில் கருணா குழுவின் முகாம் இருந்;துள்ளது.

இவர்களே தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் உட்பட பல்வேறு கடத்தல் கொலை, கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தனர். சம்பவ தினமான சனிக்கிழமை நள்ளிரவு ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர்.

இத்தாக்குதலின் போது கருணா குழுவைச் சேர்ந்த 31 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்துப் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களைப் படையினர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஐவரை விடுதலைப் புலிகள் உயிருடன் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விடுதலைப் புலிகளால் கருணா குழுவிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பி.கே.எல்.எம்.ஜி - 02,

ஆர்.பி.ஜி- 01,

81 மில்லிமீற்றர் மோட்டார்- 01,

ஏ.கே.எல். எம்.ஜி.கள் - 06,

தன்னியக்க றைபிள்- 16, கைத்துப்பாக்கிகள் - 02,

தகவல் தொடர்பு சாதனம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

முகாம் தாக்கியழிக்கப்பட்ட போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரிடமிருந்து கடத்தப்பட்ட இருவாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தின் போது கருணா குழுவுக்கு உதவி செய்யும் வகையில் படையினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி முகாம் திரும்பிய பின்னர் படுகாயமடைந்த கருணா கும்பலை படையினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கருத்து தெரிவிக்கையில்:-

ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்த உடன்படிக்கையில் பிரகாரம் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை அரசு களையவில்லை. இத்தகைய சூழலில் தான் நாம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டோம். எதிர்காலத்திலும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படாது தொடர்ந்து அரசு இயங்கி வந்தால் நாம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும் என தயாமோகன் குறிப்பிட்;டிருந்தார்.

இதேவேளை கருணாகுழு முகாம் தாக்கி அழிக்கப்பட்டபோது கருணா குழுவின் முக்கிய நபர்களான சின்னத்தம்பி - மார்க்கன், றியசீலன் உள்ளிட்ட பலர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி முகாமிலிருந்த கருணா கும்பலையே திருமலை, வாகரை மற்றும், வாழைச்சேனை பகுதிகளில் பல்வேறு தேசவிரோத நடவடிக்கைகளுக்கு படையினர் பயன்படுத்தி வந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் எந்த ஒரு ஒட்டுக்குழுவும் விடுதலைப் புலிகளின் இராணுவ ஆற்றலுக்கும், வலிமைக்கும் முகம் கொடுத்து தாக்குப்பிடிக்க முடியாது என்பதுடன் எங்கு சென்றாவது தமிழ்த் தேசியத்துக்கு துரோகமிழைக்கும் சக்திகளை அழிக்கும் ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கு உண்டு என்பதை மீளவும் நிருபித்துள்ளனர்.

அடுத்ததாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமைவாக ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்தியபோது விடுதலைப் புலிகளுக்கு கருணா கும்பல் ஒரு சவாலான சக்தி என கற்பனைவாதத்தி;ல் மிதந்த பேரினவாத சக்திகளுக்கு அதனை காசங்குளம் தாக்குதல் மூலம் யார் சவாலான சக்தி என்பதை வெளிப்படுத்தி விட்டனர்.

அடுத்ததாக வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா அரசு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கொலையாளிகளை, கடத்தல்காரர்களை முகாமுக்குள்ளும் முகாம்களுக்கு அருகிலும் வைத்துக் கொண்டு பொலிசார் கண் துடைப்பிற்கு வெலிக்கந்தைப் பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் மாத்திரம் தேடுதல் நடத்தப்பட்டது.

ஆனால் காசங்குளம் கருணா முகாம் தாக்குதல் மூலம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குச் சொந்தமான வாகனம் மீட்கப்பட்டதிலிருந்து தமிழர் புனர் வாழ்வுக்கழகப் பணியாளர்களை கருணா குழுதான் கடத்தியுள்ளனர் என்ற விடயத்தை விடுதலைப் புலிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர்.

எனவே, சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதுடன் கடத்தப்பட்ட தமிழர் புனர் வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஏழு பேரின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே பதிலளிக்க வேண்டும்.

இதேவேளை கருணா குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மூலம் படையினருடன் இந்த ஒட்டுக் குழுக்கள் இயங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சிறிலங்கா படைத்தரப்பும் சிறிலங்கா அரசும் இராணுவத்துடன் ஒட்டுக் குழுக்கள் இயங்கவில்லை என திரும்பத் திரும்பத் தெரிவித்தாலும். விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் சிறிலங்காப் படையினரால் வழங்கப்பட்டமைக்கு சான்று பொருளாக அமைந்துள்ளது.

அடுத்ததாக இந்தத் தாக்குதல் சம்பவம் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் படையினர் இது வரை தாக்குதல் தங்களது கட்டுப்பாட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளதை ஒத்துக் கொள்ளவில்லை. அதேவேளை தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறும் படையினர் எவ்வாறு சடலங்களை மீட்டு காயப்பட்டவர்களை வைத்தியசாலையில் சேர்க்க முடிந்தது என்ற கேள்வி எழுகின்றது.

எனவே, ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து சிறிலங்கா அரசும், சிறிலங்கா படையினரும் கருணா குழுவுக்கு ஆயுதங்கள் வழங்கி அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கியமை நன்கு தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக போர்நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என விடுதலைப் புலிகள் ஜெனீவா பேச்சிலும் அதன் பின்னரும் கூட வலியுறுத்திய போதும் எந்தவொரு ஒட்டுப்படையும் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை என்று கூறிவந்த அரசு மாறாக ஒட்டுக் குழுக்களின் வன்முறைகள் அதிகரித்துச் சென்றன.

குறிப்பாக ஜெனீவாப் பேச்சுக்கு பின்னிருந்து ஏப்ரல் 27ம் வரை 103 தமிழர்கள் படுகொலை இடம் பெற்றதாக விடுதலைப்புலிகளின் அறிக்கையில் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னரும் கூட தமிழினப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் தான் விடுதலைப் புலிகள் கருணா குழுவின் ஆயுதக் களைவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து சிங்களப் புலனாய்வுத்துறை பேரதிர்ச்சியடைந்துள்ளது. ஒட்டுக்குழுக்களை வைத்து தமிழ் தேசியத்துக்கு எதிரான தேசவிரோத நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்த சிங்களப் புலனாய்வுத்துறை இப்போ கருணா குழுவின் முதுகு எலும்பு உடைக்கப்பட்ட கதையாக போய்விட்;ட நிலையில் எஞ்சிய கருணா குழுவினருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

இனி கருணா கும்பலிக் செயற்பாடுகள் முடக்கப்பபடும் சூழல் உருவாகியிருக்கிறது. ஏனெனில், கருணா கும்பலின் முழுத்தொகையில் அரைவாசிப் பேர் வெலிக்கந்தை தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் எஞ்சிய கருணா கும்பலை வைத்து மீளவும் அரச படைகள் நிழல் யுத்தத்தைத் தீவிரப்படுத்த நினைத்தால் அவர்களது ஆயுதங்களை களையும் நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்படலாம். இவை மாத்திரமின்றி இந்த கருணா குழு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டதன் மூலம் ஒரு தெளிவான செய்தியும் உலகத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது.

அதாவது ஈழவிடுதலை வரலாற்றில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்த ஒரு மாற்று ஆயுத அமைப்பும் உருவாக முடியாது. தமிழ் தேசியத்துக்கு துரோகமிழைக்கும் வகையில் உருவான சக்திகள் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறே ஈழவிடுதலைப் போராட்டத்தில் நடந்துள்ளது.

அந்த அடிப்படையில் கருணா குழுவின் செயற்பாடுகள் சிலவேளைகளில் நெருக்கடிகளை விடுதலைப்புலிகளுக்கு ஏற்படுத்தியிருந்தாலும் அதனால் எத்தகைய பின்னடைவோ அல்;லது பலவீன நிலைக்கோ தள்ளப்படவில்லை. எனவே, கருணா குழுவின் வரலாறு முடிவுக்குவரும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது மட்டுமே உண்மை.

http://www.battieelanatham.com/newsite/ind...id=130&Itemid=1

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி கருணாவின் மறுபக்கம்.-9

// A.M.T.KUDDY

06-05-2006

இச் செய்தியையறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்..... கொக்கட்டிச்சோலையும் பளுகாமத்தையும் ஒரே நேரத்தில் வெற்றியிட்டிருக்கலாம். ஏன் அவசரப்பட்டீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு முகாம் அம்பாறையில் வெற்றி கொண்டோம். ஆறு போராளிகளை ஏன் வீணாக சாவு கொடுத்தீர்கள். அன்ரனி இல்லாமல் செய்து காட்டவேண்டும் என்றா இப்படி செய்தீர்கள் என்று அன்ரனி கருணாவிடம் கேட்னான். இதனால் கருணாவுக்கும் அன்ரனிக்கும் கடும் வாக்குவாதம் கூட ஏற்பட்டது.

உன்னிச்சையிருந்த ராசிக்குழுவினரின் முகாமை அழிக்க அன்ரனியின் உதவியை நாடக்கூடாது என்று கருதிய கருணா அன்ரனியை கரடியனாற்றில் நிறுத்தி விட்டு தானும் செல்லாமல் படையனியை அனுப்பினான். ஆனால் ராசிக்குழுவினரின் எதிர்தாக்குதலை சாமாளிக்க முடியாத படையனிகள் கருணாவிடம் இது பற்றி என்ன செய்லாம் எனக் கேட்டனர். ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் அவர்கள் சிக்கியிருந்தனர்.

பிரச்சைனையாகவுள்ளது அன்ரனி நீ போ என கருணா கெஞ்சுவது போல அன்ரனியிடம் கூறினான். அன்ரனியின் வேகமான தாக்குதலால் நிலை குலைந்த ராசிக்குழுவினர் உயிர் தப்பினால் போது என்று சிதறி ஓடினர். இதனால் சக போராளிகள் அன்ரனியை மிகவும் பாரட்டினர். போராளிகளிடத்தில் மட்டுமல்ல மக்கள் இடத்திலும் அன்ரனியின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.

மட்டக்களப்பு அம்பாறையில் நடந்த ராசிக்குழு மற்றும் இந்திய படை மீதான சன்டைகளை தானே முன்னின்று நடத்தி வெற்றி வாகை சுடியதாக கயவன் கருணா பெயர் வாங்கினான். பல சந்தர்ப்பங்களை பயன் படுத்தி அன்ரனி மீது பொய் பிரச்சாரங்களை நடத்தி தலைமையிடம் தான் நல்ல மனிதன் போல பெயர் வாங்கிக் கொண்டான். ஆனால் அன்ரனியுடன் நின்று செயல் பட்டவர்களுக்கும் அவனின் போர் திறனை நேரடியாக கண்டவர்களுக்கும் அவனின் வீரம் புரியும்.

ஏன்! ராசிக் என்ற துரோகி உயிருடன் இருந்திருந்தால் அன்ரனியின் அதிரடித்தாக்குதல்கள் பற்றி அடிக்கடி நினைத்திருப்பான்.

யாழ் மண்ணதும் அன்ரனியவனின் வீரமறியும். யாழ் கோட்டை மற்றும் பலாலிப்பகுதிகளிலும் அன்ரனியின் தாக்குல் வியுகங்கள் அமைந்தன. ஒரு தடவை பலாலியிருந்து முன்னேறிய சிறிலங்கா படைகளை தனது புPஆபு இயந்திர துப்பாக்கியால் தனித்து நின்று தனக்கு உதவி கிடைக்கும் வரை இராணுவத்தினர் மீண்டும் முன்னேற முடியாமல் தடுத்த பெருமை அன்ரனியை சாரும் என பலரும் போசிக் கொன்டனர். மேஜர் அன்ரனியுடன் யாழில் நின்று செயற்பட்ட போராளிகள் அன்ரனியின் இனிமையான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்வர்;.

1990 காலப்ப்பகுதிகளில் அன்ரனி மட்டக்களப்பிலிருந்திருந்தா

ராஜசிங்கத்தாலும், அவருடைய சீடர்களாலும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னும் மௌனமாக இருந்து வருகிறார்கள். இவர்களால் போதைப் பொருட்களுடன் பிடிபட்டு, பல வருடங்களாக ரஸ்யா மற்றும் ஐரோப்பிய சிறையில் வாடும் தமிழ் பெண்கள் பற்றிய செய்திகள் பலர் அறியாத அதிர்ச்சிகரமான உண்மைகளாக இருக்கின்றன.

இதை விட கொடுமை என்னவெனில், இவர்களால் பாதிப்பிற்கு உள்ளான சில பெண்களே, ஐரோப்பிய நாடுகளிற்கு வந்து சங்கங்கள் அமைத்து பெண்ணியவாதம் என்று பிதற்றித் திரிவதுதான். இந்தத் துரோகிகளால் சிறையில் வாடும் பெண்களுக்காகவும், பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட பெண்களுக்காகவும் இந்தப் பெண்ணியவாதிகள் இதுவரை குரல் கொடுத்ததாக தெரியவில்லை. இந்த துரோகிகளில் பெரும்பாலானோரும் பாதிக்கப்பட்ட பெண்களும் ஐரோப்பாவில்தான் இருக்கின்றார்கள். சங்கம் அமைத்து பெண்ணியம் பேசுபவர்கள் இந்தத் துரோகிகளை கூண்டில் ஏற்ற முன்வருவார்களா என்று நான் இவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.

இவ்வாறு பல சமூக விரோத செயல்களைப் புரிந்த ராஜசிங்கம் பணத்தில் புரளத் தொடங்கினார். அத்தோடு பல நாடுகளின் உளவுப்பிரிவினருடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். நீலன் திருச்செல்வத்திற்கு ஊடாக இவரது தொடர்பு சிஐஏ வரை வளர்ந்திருந்தது. சிஐஏயும் இவரை முழுமையாக ஏற்றுக் கொண்டது. சிஐஏ இவரை சில ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பி தமது உளவு வேலைக்கு பயன்படுத்தவும் செய்தது. இதில் இருந்தே ராஜசிங்கத்தின் உளவுத்திறமை அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அதே நேரம் பாங்கொக்கில் தொடர்ந்து இருப்பதற்காக அங்குள்ள இராணுவ உளவுப் பிரிவினருடனும் நெருக்கமாக இருந்து கொண்டார். அத்துடன் இந்திய உளவுத்துறையான றோவுடனும் இணைந்து வேலை செய்தார். ஆரம்பத்தில் இவரது இந்தியத் தொடர்பு பலர் அறியாத ஒன்றாக இருந்தது. நரசிம்மராவ் காலத்தில் ஏற்பட்ட ஊழல்கள், சந்திரசுவாமியின் கைது ஆகியவற்றின் மூலம், இவரது இந்தியத் தொடர்பு ஓரளவு வெளிச்சத்திற்கு வந்தது. சந்திரசுவாமியின் வெளிநாட்டுப் பின்னணிகள் குறித்து விசாரிப்பதற்காக ராஜசிங்கத்தை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர சிபிஐ முயற்சி செய்தது. ஆனால் றோவினது அழுத்தம் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது. சந்திரசுவாமியும் விடுதலையானார்.

கன்னடத்து நடிகர் ரஜனிகாந்த் இமயமலைக்கு சென்று தியானத்தில் ஈடுபடுவதாகச் சொல்லிவிட்டு, பாங்கொங்கிற்கு சென்று இளைப்பாறிக் கொள்வார். அப்பொழுது ரஜனிகாந்தின் "தேவைகளை" ராஜசிங்கமே செய்து கொடுப்பார். சந்திரசுவாமி, ரஜனிகாந்த் போன்றவர்கள் தமது அரசியல் குறித்த ஆலோசனைகளையும், தமது மற்றைய விடயங்களையும் ராஜசிங்கத்தின் அலுவலகத்திலேயே வைத்தே நடத்திக்கொள்வார்கள். அந்த அலுவலகத்தின் முகவரி House No 8/6, Muban Amoropan Nakorn, Sukapibal Road 2, Suan Siam, Bangok -10230, Thailand. இந்த முகவரியை யாரும் அணுக முடியாதபடி தாய்லந்து உளவுத்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜசிங்கம் என்கின்ற இந்த சர்வதேச உளவாளியின் பலத்தை அறிந்த டக்ளஸ் தேவானந்தா, இவரோடு ஒட்டிக்கொண்டார். போராளியாக இருந்த டக்ளஸிற்கு அனைத்து விதமான கெட்ட பழக்கங்களையும் கற்று கொடுத்தது இந்த ராஜசிங்கம்தான். அத்துடன் அரசின் பின்னணியோடு "AsianTribune" என்ற இணையத் தளத்தை ராஜசிங்கம் நடத்திக் கொண்டு இருக்கிறார். இதற்காக ராஜசிங்கத்திற்கு 12 மில்லியன் டொலர் வழங்கப்பட்டதாகவும், இந்த பணத்தில் டக்ளஸ் தேவாநந்தாவும் பங்கு போட்டதாகவும் செய்தி கசிந்துள்ளது.

கருணா வரலாற்றுத் துரோகம் இழைத்த பொழுது, இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவர் இந்த ராஜசிங்கம்தான். அப்பொழுது ராஜசிங்கம் எழுதிக் கொடுத்ததை வாசித்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. கருணாவையும் ராஜசிங்கத்தையும் ஒன்று சேர்த்த பெருமை டக்ளஸையே சாரும். இந்த மூவர் கூட்டணியை இயக்குவது இந்திய உளவுத்துறையான றோ என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கருணாவின் பின்னணியில் ராஜசிங்கம் இருக்கிறார் என்பதை காட்டுவதற்கு, ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

கருணா இந்தியா செல்வதற்கு கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரியாமலே விசா அனுமதி எடுத்து கோவா சென்று ஒளித்திருந்தார். இதற்கு உதவியவர்கள் ராஜசிங்கமும் டக்ளஸ் தேவாநந்தாவுமே ஆகும். விசா எடுப்பதற்கு உதவியவர் சுவிஸ் எயர் விக்கி எனப்படும் விக்னேஸ்வரன். இவர் ராஜசிங்கத்தின் முன்னாள் முகவர் ஆவார். இவரும் பருத்தித்துறையை சேர்ந்தவர்தான். இவர் பிரபலமான பிரயாண ஒழுங்கு நிறுவனம் ஒன்றை கொழும்பு கலடறி ஹோட்டலில் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பு ஒன்றில் விக்னேஸ்வரன் சிறு காயங்களுக்கு உள்ளாகி உயிர் தப்பியவர். இந்தக் குணடு வெடிப்பின் பி;ன்னர் இவர் தனது மனைவி பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பிவிட்டார். விக்கி மட்டும் கொழும்பில் இருந்து கொண்டு ராஜசிங்கத்தின் கையாளாக வேலை செய்கிறார்.

கருணா கோவாவில் ஒளித்துக்கொண்டிருந்த பொழுது, கருணாவின் மனைவிக்காக விசா எடுக்க முயன்ற போதுதான், இந்திய தூதரகத்திற்கு தங்களை மீறி நடந்த இந்த சம்பவம் தெரிய வந்தது. கருணாவின் மனைவிக்கு விசா அனுமதி தர இந்திய தூதரகம் மறுத்த போது, அவர் கிலியில் அனைத்து விடயத்தையும் போட்டு உடைத்துவிட்டார். ஆனால் பல மாதங்கள் கழிந்து அண்மையில்தான் இந்த செய்தி வெளியே கசிந்தது. ஆனால் கருணா புலிகளை விட்டு பிரிந்த ஆரம்ப காலத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது.

கருணா கோவாவிற்கு சென்றதும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்தது ராஜசிங்கத்தின் பழைய கூட்டாளி ஒருவரே. அவர் வேறு யாரும் அல்ல. ராஜசிங்கத்தின் நெருங்கிய நண்பரும், சென்னை திருச்சி முகவராக இருந்தவரும், பல காரணங்களால் சுவிஸ் பொலிஸாரால் தெடப்பட்டு தற்பொழுது சிறையில் வாடும் ரிபிசி ராமராஜனே அவர். இவரது வானொலி கருணாவின் பேட்டிகளை பல முறை நேரடியாக ஒலிபரப்பியதையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ளுங்கள். இந்த வானொலி பல வருடங்களாக பணத் தட்டுப்பாடின்றி இயங்குவதற்கு ராஜசிங்கத்தின் உளவுத் தொடர்புகளே மிகவும் உதவின.

ஆரம்பத்தில் கருணா மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. காரணம், கருணா பெண்கள் விடயத்தில் மிகவும் பலவீனமானவர் என்பது உலகு அறிந்த ஒரு விடயம். விடுதலைப்புலிகளால் கருணா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் பெண்கள் சம்பந்தமான குற்றச்சாட்டும் அடங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அன்ரன் பாலசிங்கமும் இந்த விடயத்தை தனது உரையொன்றில் சுவையாக புட்டு புட்டு வைத்திருந்தார்.

கருணாவின் இத்தகைய பலவீனத்தை பயன்படுத்திய ராஜசிங்கம், இதன் மூலம் கருணாவை வளைத்துப் போட்டார். பின்பு ராஜசிங்கம் கருணாவை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். அங்கு கருணாவிற்கு அனைத்துவிதமான உதவிகளையும் ராஜசிங்கத்தின் மகள் செய்து கொடுத்தார். இதனால் கருணா தனது மனைவியின் சிந்தனை இன்றி இருக்க, கருணாவின் மனைவியோ டக்ளஸ் மற்றும் முக்கிய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக ராஜசிங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து சிங்கப்பூரை வந்தடைந்தார். கருணாவின் தலைமறைவு வாழ்க்கை ராஜசிங்கத்தின் உதவியுடன் தொடர்கிறது. அத்துடன் ராஜசிங்கமும் சுவீடன் நாட்டில் குடும்பத்தினருடன் தலைமறைவு வாழ்க்கையை நடத்திக் கொண்டு, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பல நாடுகளுக்குச் சென்று, றோவுக்கு ஆள் பிடிப்பதிலும், தமிழ் துரோகிகள் டக்ளஸ் மற்றும் கருணாவிற்கு உதவுவதிலும், இலங்கை, இந்தியா, அமெரிக்கா அகிய நாடுகளுக்கு உளவு புரிவதிலும் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டு இருக்கிறார்.

ஆனால் இந்த எட்டப்பர்கள் எப்படித்தான் தலைமறைவு வாழ்க்கை நடத்தினாலும், எத்தகயை பாதுகாப்போடு இருந்தாலும் காலம் இவர்களின் துரோகத்திற்கான தண்டனையை வழங்கியே தீரும். எம்மவர்கள் காற்று புக முடியாத இடத்திலும் புகுவார்கள் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தக் கட்டுரைய முடிக்கின்ற இந்த நேரத்தில் வாசகர்களிடம் சில வார்த்தைகள். இந்த துரோகக் கும்பல் பற்றி முற்று முழுதாக எழுதுவதாயின், அது மிகவும் ஆபாசமாகத்தான் இருக்கும். நாகரீகம் கருதி பெரும்பாலான விடயங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் சிலவற்றை தவிர்க்க முடியமால் குறிப்பிட்டிருக்கிறேன். வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இங்கு நான் குறிப்பிட்ட அனைத்து விடயங்களிற்கு தகுந்த ஆதரங்கள் வைத்திருக்கிறேன் என்பதையும் என்னால் இவைகளை நிரூபிக்க முடியும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

முற்றும்

- வன்னியிலிருந்து புலோலியூரான்

நன்றி www.webeelam.com

மேலே உள்ள கட்டுரை

"கருணாவை இயக்கும் அரசியல் ஆலோசகர்! (பாகம் 3)"

ஆகும்

பதிவில் தலையங்கத்தை இணைக்க தவறிவிட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.