Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரனும் சோனியா காந்தியும்: சேரன் எழுதுவது

Featured Replies

பாலச்சந்திரனும் சோனியா காந்தியும்

30 ஏப்ரல் 2012

cheran-ezhuthuvathu2_CI.jpg

----------------------------------------------------

சூரியனைக் கொன்றது சிங்கம்

.............

சினத்துடன் சிங்கம்

சிறுநிலாவையும் கொன்றபோது

முகில்களின் திரையைக் கிழித்து

உள்ளே ஒளிந்தது நிலா

பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள்

...............

நிலா சூரியனாக மாறுகிற

ஒருநாள் வரும்

அப்போது

எங்களுக்கு ஒளிவதற்கும்

இடம் கிடையாது......

சிங்களக் கவிஞரும் நாவலாசிரியருமான நண்பர் மஞ்சுள வெடிவர்த்தன. ஜுலை மாதம் 2009 எழுதிய இந்தக் கவிதையின் தலைப்பு: பாலச்சந்திரன்.

கொல்லப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனின் படம் அப்போதே பல இணையத் தளங்களில் வெளியாகி விட்டது. மிக அருகில் நின்று பலம் பொருந்திய துப்பாக்கியால் படையினர் அந்தச் சிறுவனைக் கொலை செய்தமை இப்போது சனல் - 4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் உரிய ஆதாரங்களுடனும் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கொலை நிகழ்வும் அது போன்ற ஏராளம் நிகழ்வுகளும் கவிஞர் மஞ்சுளவையும் அவர் போன்ற பல கவிஞர்களையும் உலுக்கி விட்டமை வியப்புக்குரிய ஒன்றல்ல. மஞ்சுள வெடிவர்த்தன இப்போது நாட்டில் இல்லை. ஐரோப்பிய நாடு ஒன்றில், பல்லாயிரக் கணக்கான தமிழர்களைப் போல அரசியல் தஞ்சம் பெற்றுவிட்ட சில சிங்கள முற்போக்கர்களில் அவரும் ஒருவர் . அவருடைய புதிய கவிதைத் தொகுதியில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக அவர் எழுதிய பல கவிதைகள் உள்ளன. சரி கவிதையை இப்போதைக்கு விட்டு விடுவோம் படுகொலைகள், அவற்றைக் கைத்தொலைபேசிக் கமராவால் படம் எடுத்து வைத்திருக்கிற படையாடகள், இந்தப் படங்கள் எற்படுத்துகிற அதிர்வுகள் என்பன நவீன ஊடகத் துறையிலும் ஊடக அறங்களிலும் செய்தி சேகரிப்பு, விநியோகம், போன்ற அடிப்படையான ஊடகத் தொழிநுட்பங்களிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன. பல்வேறு பட்ட நலன்களுக்காகப் பலரும் இத்தகைய அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் படங்களையும் -சிலவேளைகளில் பொறுப்போடும் பெரும்பாலும் பொறுப்பற்றும்-பாவிக்க முற்படுகிறார்கள்.

படுகொலை செய்யப்பட்ட பாலகனான, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்தைப் பார்த்து ‘உள்ளமும் கண்களும் கலங்கிய சோனியா காந்தி, ஐ.நா. அவையில் இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உத்தரவிட்டதாக ஒரு செய்தி பல தமிழ் இணையத் தளங்களிலும் தமிழ்ப் பத்திரிகைகளிலும் முக்கியத்துவம் பெற்றுப் பிரசுரிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். தமிழ் இணையத் தளங்களைப் பெரும்பாலும் முற்று முழுதாக நம்ப முடியாது. சில விதிவிலக்குகளைத் தவிர்த்து விட்டால் இணையத் தளச் செய்திகளும் இலங்கை-இந்தியச் செய்தித்தாள் செய்திகளும் யாரிடமிருந்து யார் கடன் வாங்குகிறார்கள் அல்லது பெற்றுக் கொள்கிறார்கள் அல்லது திருடுகிறார்கள் என்பது குறித்து ஒரு தெளிவான விளக்கம் நமக்கு எப்போதும் கிடைப்பதில்லை. ‘அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்’, ‘நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன’, ‘பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி தெரிவித்தார்’ போன்ற தொடர்கள் இன்றைய ஊடகச் சூழலில் எவ்வளவு தூரம் மலினப்படுத்தப்பட்டு விட்டன என்பதை நாம் அறிவோம். இது போலவே, ‘ஒரு ஆங்கில ஊடகம் சொல்கிறது’, ‘ஒரு கொழும்பு ஊடகம் தெரிவித்தது’ போன்ற தொடர்களும் இணைய ஊடக உலகில் பெரும் அவமானம் மிக்க தொடர்களாக மாறிவிட்டன. இந்தப் பின்னணியில், சோனியா அம்மையார் கண்ணீர் மல்கிய சேதியின் மூலத்தைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டேன்.

அந்தச் செய்தி இந்தியாவில் எந்தச் செய்தித்தாளிலும் வரவில்லை. ‘Times od India’ வின் Blogsபகுதியில் மார்ச் மாதம் 30ம் தேதி ஜோதி மல்ஹோத்ரா என்ற ஒரு நிருபர் தன்னுடைய பத்தியில் மூலம் குறிப்பிடாமல், ‘உள் வீட்டுத் தகவல்கள்’ சொல்வதாக அதனை எழுதியிருந்தார். (பார்க்க:
http://blogs.timesofindia.indiatimes.com/ist/entry/sonia_told_pm_to_vote_against_sri_lanka
). இந்தச் சேதி Times o India வின் எந்த அச்சுப்பதிப்பிலும் வெளிவரவில்லை. நாளிதழ்களின் Blogs என்று அழைக்கப்படுபவை ஒருவகையில் டயரிக் குறிப்புக்கள் மாதிரி. கேள்விச் செவியர்கள், விடுப்பு விரும்பிகள், ஆம் செய்தியாளர்கள் (அதாவது அவர் சொன்னாராம். இவர் எழுதினராம் என ஆம் விகுதியில் உயிர்வாழும் செய்தியாளர்கள்) போன்ற பலர் இத்தகைய Blogs இல் எழுதுவது வழமை என்னும் இந்தத் தகவல் பிற்பாடு பல தமிழ் இணையத்தளங்களிலும் தமிழ் செய்தித்தாள்களிலும் இடம்பெற்றிருந்தது.இலங்கையில் ஆங்கிலப் பத்திரிகை– Sunday Times இந்தச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. வேறு எந்த ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இலங்கையில் இச்சேதி வெளியானதாகத் தெரியவில்லை.

இந்தச் செய்தியின் அபத்தம் எனக்கு மிகத் தெளிவாகவே இருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சியின் அதிகார மையங்கள் பற்றிய பல்வேறு குழப்பங்கள் அடிக்கடி வெளியாவதால் இச்சேதி உண்மையாயிருப்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டல்லவா? எனவே இந்தியாவின் ஆங்கிலச் செய்தித் துறையில் இருக்கும் பல ஊடக நண்பர்களைத் துருவித் துருவி விசாரித்தேன். Times of India வின் கேரளப் பதிப்புகளுக்குப் பொறுப்பாக இருக்கும் என் நண்பரும் அவர்களில் ஒருவர். எனக்குக் கிடைத்த தகவல்களைத் தொகுத்துப் பார்க்கிறபோது தெரியவருவது இதுதான்:

ஜோதி மல்ஹோத்ரா எனும் நிருபர் பல காலமாக வெளியுறவு அமைச்சரகத்தின் செய்திகளைச் சேகரித்து வெளியிடுபவராகப் பணியாற்றியவர். இத்தகைய செய்திகளை கட்சியினதும் அரசியல் நலம் கருதியும் இந்தியாவின் ‘தேசிய நலன்’ களைப் பேணவும் அவ்வப்போது செய்தித் தாள்களிலும் வேறு ஊடகங்களிலும் சுற்றுக்கு விடுவது (spin!) எல்லா நாடுகளிலும் வழமை. எனவே இந்தியா மட்டும் எப்படி விதி விலக்காகலாம்? இத்தகைய ‘சுற்றுக்குவிடுதலும்’, ‘சுத்துமாத்து’ச் செ;யதிகளும் 1986 இலிருந்து இலங்கைப் பத்திரிகைகளிலும் இந்திய அரசு மூலமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் உத்தரபிரதேசம் உட்பட வேறும்பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்ற சூழ்நிலையில் “மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகளுக்காகவும் சோனியா காந்தி கண்ணீர் சிந்தினார் எனத் செய்தி வெளியாகி இருந்தது.

எவ்வளவு இலகுவாக நமது தமிழ் ஊடகங்கள் பல இத்தகைய செய்திகளைத் துருவித் தேடாமலும், மூலங்களைத் தேடி உறுதிப்படுத்தாமலும் வெளியிடுகின்றன என்பதை அவதானிக்கிற போது ஊடகச் சூழல் தொடர்பான அவநம்பிக்கை ஏற்படுகிறது கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், எல்லாம் பல்வேறு திசைகளிலிருந்தும் எல்லா வகையான அரசுகளிடமிருந்தும் நெருக்கடிகளையும் தாக்குதல்களையும் சந்திக்கிற காலகட்டம் இது. தாராள ஜனநாயகத்தை (Liberal Democracy) உரத்து முழங்குகிற அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு நாடகளிலம்கூட இணையத்தளத் தணிக்கை, கண்காணிப்பு, உரிமம் தொடர்பான கட்டுப்பாடுகள், சிக்கல்கள் எல்லாம் மேலெழ ஆரம்பிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய உறுதியான, துணிவு மிக்க பலனும் பயனும்விளைவிக்கக் கூடிய ஒரேயொரு ஆயுதம். எங்களுடைய ஊடக அறமும், ஊடகத் துறையிலும் அதன் பயிற்சி, பயன்பாடு திறன் தொடர்பான தளர்வற்ற, நுணுக்கமான ஆற்றலும் கடப்பாடும்தான். இவற்றை நாம் கைகழுவி விடுவதென்பது மக்களையும் கைகழுவி விடுவதாகும். எழுத்தறிவிப்பவர்கள் இறைவர்களாக இருக்கட்டும். ஆனால் எழுத்துக்களை உண்மையோடும் நேர்மையோடும் மக்களிடம் சேர்ப்பவர்கள் மனிதர்களாக இருக்கட்டும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76820/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.