Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று தமிழர்களின் வாழ்நிலை அறிய ஜ.நா பார்வையாளர் குழுவினை அனுப்ப வேண்டும்-ஜயா நாதன்.

Featured Replies

போர் நடந்த பகுதிகளில் தமிழ்மக்களின் வாழ்நிலையினை அறிய ஜ.நா ஒருபன்னாட்டு பார்வையளார் குழுவினை அனுப்ப வேண்டும் என்று கூறி பன்னாட்டு அளவில் ஒரு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் போருக்கு பின்னாலும் தமிழினத்தை அழிக்ககூடிய முயற்சிகளில் சிங்கள அரசு எவ்வாறு ஈடுபட்டு வருகின்றது என்பதும் அதற்கு ஒத்தாசையாக போரில் அதற்கு துணைநின்ற தெற்காசிய வல்லாதிக்கங்கள் இன்றளவிலும் துணைநிக்கின்றார்கள் என்பது அப்போது தெரியவரும் என்று தமிழக ஊடகவியலாளர் ஜயாநாதன் முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கருத்தில்இதனை தெரிவித்துள்ளார்.

மே.18 தமிழ்மக்களின் அரசியில் விடுதலைப்போராட்டத்தில் மறக்கமுடியாத மிகப்பெரிய வடுவினை இதயத்தில் ஏற்படுத்திய ஓருநாள் 2009 ஆம்ஆண்டு மே 18 ஆம் நாள் அன்று அதிகாலையில் தம்மோடு இருந்த மக்களை காக்க விடுதலைக்காக ஏந்திய அந்த ஆயுதங்கள் மௌனிக்கின்றோம் என்று கூறிய அந்த மாவீரர்கள் வெள்ளைக்கொடியுடன் சென்ற போது ஈவிரக்கமற்று சுட்டுக்கொன்றதோடு மட்டும் நிக்காமல் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் வெட்டுவாகல் இரண்டு கிராமங்களில் போரின் கை கால்களை இழந்து குற்றுயிரும் குறையுயிருமாக பதுங்கு குளிகளில் இருந்து வெளிவரமுடியாத நிலையில் கிடந்த சொந்தங்;ளை குண்டுகள் வீசி கொல்லப்பட்டு மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்.

ஒரு நீண்ட நெடிய தமிழர்களின் அரசியல் விடுதலைப்போராட்டம் என்பது ஈழத்தந்தை செல்வா அவர்கள் முன்னெடுத்த காலத்தில் சாத்வீக வளியில் முன்னெடுத்தபோது அது சிங்கள அரசால் ஒடுக்கப்பட்ட நிலையில் அது ஒரு ஆயுத போராட்டமாக உருவாகி பலமாக நடந்துகொண்டிருந்த நிலையில் தமிழர்களுக்கு என்ற தமிழீழ தேசம் என்று உலகிற்கு அடையாளம் காட்டப்பட்ட நிலையில் அந்த தேசத்ததை அழிக்கவும் அந்த தேசத்தை நிர்மானிக்க உயிரர்கொடை செய்துகொண்டிருந்த விடுதலைப்போராளிகளை அழிக்கவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி தெற்காசிய வல்லவாதிக்கவாதிகளான இந்தியா,சீனா,ரஷ;யா உள்ளிட்ட இருபது நாடுகளின் துணையுடன் ஒரு மாபெரும் போரட்டத்தை மாவிலாற்றில் இருந்து முன்னெடுத்தது சிங்கள அரசு. தமிழர்களின் நியாயத்தினை புரிந்து தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தினை புரிந்து இலங்கையில் இருக்கின்ற தமிழர்களின் அரசயில் உரிமை போராட்டம் என்பது நியாயமானது என்று ஏற்கனவே கூறிய அரசுகள்தான் இந்தபோரில் தமிழர்களை அழித்தொழிக்க முற்பட்ட நீண்ட நெடுங்காலமாக தமிழினத்தை திட்டமிட்டு அழித்து வந்த சிங்கள அரசிற்கு துணையாக இருந்தது.ஒரு மூன்று ஆண்டுகள் தமிழ்மக்கள் துரத்தி அடிக்கப்பட்டு இறுதியில் ஒரு இடத்தில் குவிந்ததும் அதுவே உங்ககளுக்கு பாதுகாப்பு வலயம் அங்கு வாருங்கள் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று அழைத்து அவர்கள் மீது கனராக பீரங்கிகளின் தாக்குதல்களை தொடுத்தார்கள் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசியும் தாக்குதல்கள் நடத்தி அழித்தொழித்தது சிங்களபடைகள்போரின் போது பாவிக்ககூடாத கொத்தணிகுண்டுகள்,கிளஸ்ரர்குண்டுகள்,வெப்பக்குண்டுகள்,பொஸ்பரஸ்குண்டுகள்,இரசாயன குண்டுகள் என எல்லாவற்றையும் பாதுகாப்பு என வந்து தஞ்சமடைந்த மக்கள் மீது தாக்கியது சிங்கள அரசு,அங்கு பள்ளிக்கூடங்கள்மீது தாக்கியது,மருத்துவமனைகள் மீதும்,உணவுக்காக நின்ற குளந்தைகள் பெண்கள் மீதும் குறிவைத்து சிங்கள படையினர் தாக்குதல் நடத்தியபோதும் பன்னாடுகளுக்கு அப்போதும் கூறிக்கொண்டிருந்தன இது பயங்கரவாதிளுக்கெதிரான போர்,நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் குறிவைக்கின்றோம் என்று.

தியாக மறவர்கள் தங்களுடைய மண்ணுக்காகவும் மக்களின் எதிர்காலத்திற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த மறவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி நியாயப்படுத்தி வந்தனஆனால் போரின் முடிவில் எந்தெந்த நாடுகள் எல்லாம் இதை ஆதரித்தனவோ அவற்றுக்கெல்லாம் அதிர்சியான வகையில் தான் முள்ளிவாய்காலிலும் வெட்டுவாகலிலும் அந்த படுகொலைகள் நடந்தேறின.அதுவரை அந்த படுகொலை நடந்த களத்தில் இருந்து எந்த செய்திகளும் வெளியேறா வண்ணம் தடுத்து நிறுத்தியது சிங்கள பௌத்த இனவாத அரசு. இறுதிக்கட்டத்தில் நடந்த அந்த கொடூரங்களை தடுத்து நிறுத்த இயலாமல் போன காரணத்தில்தான் அங்குநடந்த படுகொலை வெட்டவெளிச்சமானது.

அதன் விளைவுதான் இந்த மூன்று அண்டுகளில் உலகநாடுகளின் போக்கும் தமிழ்மக்களது விடுதலையினை நோக்கியும் அந்த மக்கள் செய்த தியாகத்தினை நோக்கியும் சிங்கள இனவாத படுகொலையின் எதிர்ப்பாக நமக்கு ஆதரவாக பிரணமித்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் நாளினை தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவுதினமாக நாம் பாத்தாலும் அது ஏற்படுத்திய வடு இன்னமும் எங்கள் இதயங்களில் இருந்து குருதியினை கசியசெய்கின்றது என்றாலும் கூட இந்த நாளினை தமிழர்களின் அரசியல் திருப்பு முனைக்கான ஒரு முக்கிய நாளாக கருதுகின்றோம் மே 18 ற்கு பிறகுதான் நமது போராளிகளின் கையில் அதுவரை முன்னெடுத்து வந்த விடுதலை போராட்டம் பன்னாட்டு அளவில் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்டது சர்வதேச அளவில் இராயதந்திர அளவில் நாங்கள் முன்னெடுக்கின்றோம்ஒருபக்கத்தில் நமது பிள்ளைகள் நமது சொந்தங்கள்,இளைஞர்கள் எல்லோரும் உலக நாடுகளின் கவனத்தினை ஈர்க்க ஒவ்வொரு பக்கத்திலும் ஏதாவது ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும்.தாய்தமிழகத்திலும் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் திராவிட சக்திகளின் திட்டமிட்ட அரசியல் போக்கினால் தேர்தலினைத்தான் பெரிதாக நேசித்தனேரே ஒளிய தமிழினத்தின் நலனினை பாக்கவில்லை அதன் விளைவுதான் அந்த போரினை அரசியல் ஆக்கி அரசியல் களத்தில் ஈடுபட்டார்கள் போரினை நிறுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் அதன் காரணமாகத்தான் தமிழினம் முள்ளிவாய்காலில் படுகொலையில் சென்று முடிந்தது.அப்படிப்பட்ட சூழலிற்கு பிறகு தமிழகத்தில் இருந்த புதிய அரசியல் எழுச்சிதான் இந்த தமிழன அழிப்பு போருக்கு, சோனியா அரசிற்கு உறுதுணையாக நின்ற திராவிட முன்னேற்ற கழகத்தினை தோற்கடித்தது.இப்போது பன்னாட்டு ரீயில் சிங்கள அரசிற்கு எதிரான மிகப்பெரிய ஒரு முன்னெடுப்பு மேற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட ஓரு சூழலில் இன்று சிங்கள அரசிற்கு எதிரான பன்னாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உறுதியாக பின்னிற்க வேண்டிய கட்டாயமான நிலையில் நாங்கள் நிக்கின்றோம். அமெரிக்காவின் தீர்மானம் முழுமையாக நமக்கு சாதகமான உண்மை முடிவினை அதாவது அங்கு தமிழன படுகொலை நடந்தது என்று நிரூபிக்ககூடிய அளவிற்கான விசாரணையினை ஏற்படுத்தவல்லதாக அமையும் என்று நாம் நம்ப முடியாது.

என்றாலும் மறுபக்கத்தில் பார்ப்போமானால் இந்த திறந்திருக்கும் இந்த வளியின் மூலம் ஆதாரபூர்வமான சாட்சிகளின் ஊடாக நிச்சயமாக நிருபிக்கமுடியும் என்கின்ற எண்ணமுள்ளது.ஜ.நாவின் இந்த தீர்மானத்தினை அவர்கள் நிறைவேற்ற தவறினால் அதற்கு பிறகு அவர்கள் மிகப்பெரிய ஒரு பன்னாட்டு நெருக்கடியினை சந்திக்கவேண்டி இருக்கும் ஏன்என்றால் இன்று பொஸ்னியாவி;ல் நடந்த அந்த படுகொலைக்கு காரணமானவர்கள் இன்று சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் நிறுத்தப்பட்டடுள்ளார்கள் அதேபோல் பன்னாட்டு தீர்ப்பாயத்தின் முன் சிங்கள அரசினை கொண்டுவரகூடிய வாய்ப்பும் இருக்கின்றது இவ்வாறான நிலையில் போரில் நடந்த அந்த திட்டமிட்ட இன அழிப்பினை நாங்கள் எப்படி எல்லாம் வெளிக்கொண்டுவந்து உலகத்தின் பார்வைக்கு கொண்டுவந்து சிங்கள அரசின் மீதான அந்த அளுத்தத்தினை மேலும் மேலும் அதிகரிக்கின்ற செயற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறுத்தில் தாயகத்தில் நமது சொந்தங்கள் இன்றுவரை அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க நாம் மிகப்பெரிய போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் உண்மையான எமது மக்களின் அவலங்களை ஒருவரும் எடுத்துகூறவில்லை எனவே நாங்கள் இன்று வைக்ககூடிய ஒரு முக்கியமான கோரிக்கை என்னவென்றால் போர் நடந்த பகுதிகளில் தமிழ்மக்களின் வாழ்நிலையினை அறிய ஜ.நா ஒருபன்னாட்டு பார்வையளார் குழுவினை அனுப்ப வேண்டும் என்று கூறி பன்னாட்டு அளவில் ஒரு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் அங்கு ஒரு குழுசென்று வந்தாலும் போருக்கு பின்னாலும் தமிழினத்தை அழிக்ககூடிய முயற்சிகளில் சிங்கள அரசு எவ்வாறு ஈடுபட்டு வருகின்றது என்பதும் அதற்கு ஒத்தாசையாக போரில் அதற்கு துணைநின்ற தெற்காசிய வல்லாதிக்கங்கள் இன்றளவிலும் துணைநிக்கின்றார்கள் என்பது தெரிய வரும் எனவே எங்களது அடுத்த கட்ட முயற்சி என்பது சிறீலங்காவிற்கு பன்னாட்டு மனித உரிமையாளர்கைள கொண்ட பார்வையாளர்களையும் பத்திரிகையாளர்களையும் அனுப்ப வேண்டும் என்று கோரி நாங்கள் போராடவேண்டும்.என்றும் நாம்தமிழர் கட்சியின் ஊடகவியலாளர் ஜயாநாதன் அவர்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூன்றாம் ஆண்டுநினைவு கருத்தில் தெரிவித்துள்ளார்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.