Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்யவேண்டும் – வீரகேசரி மக்கள் மதிப்பீட்டின் முடிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA000-100x89.jpg

இறுதியாகத் தேர்தல் திணைக்களத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழரசுக்கட்சி ஒப்புதல் கடிதம் கொடுக்காமையே இந் நிராகரிப்பிற்கான காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்திருந்த அதேவேளை தமிழரசுக்கட்சி தனியான பாதையை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் வீரகேசரியின் வாரவெளியீடு மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் என்ன கருத்து நிலவுகின்றது என்பது பற்றி கேட்டிருந்தது. இதன் போது முன்வந்து கருத்தரைத்தவர்களது கருத்துக்கள் பின்வருமாறு:

“கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு செய்யப்படுவது நன்று“ – வைத்திய கலாநிதி ஜமுனானந்தன், யாழ்ப்பாணம்

jamunanantha-150x150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஓர் கட்சியாகப் பதிவு செய்வது சிறந்தது எனக் கருதுகின்றோம். காரணம் உட்கட்சி ஜனநாயகத்தினைச் சிறப்பாகப் பேணுவதற்கு பல்வேறு கட்சிகள் என திக்குத் திக்காகக் காணப்படும் நிலைமையில் இருந்து பதிவுபெற்ற ஓர் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிணமிப்பது நன்றாக அமையும் எனச் சிந்திக்கின்றோம். தமிழ் மக்கள் நீண்டகால அபிலாசைகளுடன் காணப்படுகையில், அவ் அபிலாசைகளைப் பிரதிபலிக்கத்தக்கதாகவும் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமானால் அமையலாம் எனக் கருதுகின்றோம். கட்சிகள் ஒரு சிலரின் ஆதிக்கத்தின் கீழ் இல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் வருவது பொருத்தமானதாக அமையும் எனவும் இத் தருணத்தில் கூறுகின்றோம்.

“கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவது உள்ளக உடைவுகளைத் தவிர்க்கும்” – திருநாவுக்கரசு விக்னேஸ்வரன், அரசறிவியல்துறை யாழ்.பல்கலைக்கழகம்

vikneshwaran-150x150.jpg

ஜனநாயக ரீதியில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட பல கட்சிகள் இருப்பது ஆரோக்கியமானது. ஆனால் இங்கிருக்கக் கூடிய சூழ்நிலையில, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரே கொள்கையினைக் கொண்ட கட்சிகளின் கூட்டாகும். இவ்வாறாக ஒரே கொள்கையினைக் கொண்டவர்கள் வேவ்வேறு காலப்பகுதியில் தோற்றம் பெற்றவர்கள் என்றாலும் ஒரே தீர்வைக் கொண்டவர்கவே கூட்டமைப்பில் உள்ளடங்கும் கட்சிகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் வேவ்வேறாக இயங்காது ஓரே கட்சியாக தோற்றம் பெறுவது அக் கட்சிகளுக்கிடையே ஏற்படும் உடைவுகளைக் கட்டுப்படுத்துவதாக அமையலாம். வேவ்வேறு காலப்பகுதியில் கிட்டத்தட்ட அண்ணலவாக ஒரே கொள்கையினைக் கொண்டு வேறுபட்ட தலைமைகளை அடிப்படையாகக் கொண்டே இக்கட்சிகளை நாம் பார்க்க முடிவதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு அவசியமாகவே எமக்குத் தெரிகின்றது.

“தமிழர் பிரச்சினைக்காக கூட்டமைப்பு சரியானவகையில் பலமடைய வேண்டும்” – ஞானகாந்தன் ஜெயமதன், ஜனநாயகச் செயற்பாட்டாளர், கொக்குவில்

jeyamathan-150x150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஓர் கட்சியாகப் பதிவு செய்வது அவசியமாகும். காரணம் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமிழ் மக்கள் தமது மக்கள் ஆணையினை வழங்கியுள்ளனர். அவ்வாறாக வழங்கப்பட்ட மக்கள் ஆணை, தமிழ்த் தலைமைகள் யாவரும் அவர்களின் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து ஓர் அணியாகக் கைகோர்த்து தமிழ்த் தேசியம் இன்று எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு எதிராகச் செயற்படவேண்டும் என்பதற்கே ஆகும்.

இந் நிலையில் கூட்டமைப்பினுள் உள்ளடங்கம் கட்சிகள் ஒவ்வொன்றும் தம்மை தாம் உள்ளக ரீதியில் பலப்படுத்துவதையே கட்டமைப்பதையோ காட்டிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எதிராக தம்மை ஓர் பலம்பொருந்திய அணியாக மாற்றிக்கொண்டு உள்ளக போட்டி அரசியலுக்கு அப்பால் தமிழர் அரசியல் நடாத்துவதையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

மக்கள் மத்தியில் சென்று பார்த்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சியின் தற்போதுள்ள மூத்த தலைவர்கள் சிலரே தடையாக இருப்பதாகவும் அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே உரிய முறையில் பதிவுகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாது கலந்தாழ்த்தப்படுவதாகவும் அறிகின்றோம்.

உண்மையில் இந்த இடத்தில் எம்மிடம் உள்ள ஆதங்கங்களை கேட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது. அதாவது தமிழரசுக் கட்சியின் அரசியல் வரலாறு எமக்கு உறுதுணையானதாகும். தந்தை செல்வநாயகத்தின் கொள்கைகளை முன்னிறுத்துவது தமிழ் மக்களுடைய அரசியல் தாற்பரியமாகும்.

இவ்வாறிருக்க தமிழரசுக் கட்சியினை வரலாற்றில் வாழவைப்பதற்கு இன்று வேறு எத்தனையோ வேலைத்திட்டங்கள் தேவையாகவுள்ளன. அவற்றை எல்லாம் விடுத்து கட்சிகளின் ஒருங்கிணைந்த பணிக்கு தடையாக, தமிழரசுக் கட்சியை மட்டும் முன்கொண்டு செல்லுங்கள். அதற்காகச் செயற்படுங்கள் என அவர் ஒரு போதும் கூறியதில்லை.

இந்நிலைமையினை எமது தலைவர்கள் புரிந்து கொண்டு ஓர் அணியில் பணியாற்றுவதற்காக தம்மை ஓர் கட்சியாக பதிவேற்பது தமிழ் மக்களுடைய தேவை என நாம் கருதுகின்றோம்.

“கூட்டமைப்பு பதிவு பெறுவது அதன் பொறுப்புணர்வை தட்டியெழுப்பும்” – இ.ரகுந்தன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் நெல்லியடி

ragunthan-150x150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவளிப்பது தேவை தான் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளடங்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கக் கூடிய உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் ஒழுங்கமைக்கப்படாத பணிகள் மற்றும் எழுந்தமானமாகக் கருத்து வெளியிடும் நிலைமைகளில் இருந்தே நாம் உணருகின்றோம்.

அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையானதும் முன்னுக்குப்பின் புறம்பானதுமான கருத்தினையே வெளியிட்டிருந்தனர். இதற்கு சான்றாக ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்படும் போது சிலர் ஜெனிவா செல்லவில்லை என்பது கூட்டமைப்பின் முடிவு என்றனர். சிலர் கூட்டமைப்பு ஜெனிவா செல்வதில்லை என எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானம் கூட்டமைப்பில் உள்ள சிலரது தனிப்பட்ட முடிவு என்றனர்.

இவ்வாறாக நிலைமைகள் இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எமது விலைமதிக்க முடியாத வாக்கினை அள்ளிக்கொடுத்தவிட்டு நாம் யாரிடம் சென்று நியாயம் கேட்பது என்று தெரியாதவர்களாய் நின்றோம். உண்மையில் கூட்டமைப்பு ஓர் கட்சியாக பதிவு பெற்றிருக்குமானால் அங்கு ஒவ்வொரு தீர்மானத்திற்கும் செயலாளரினால் அறிக்கைகள் பேணப்பட்டிருக்கும்.

அப்போது கூட்டமைப்பும் ஒரு மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஜனநாயகவழியிலான அமைப்பு என்ற வகையில் அங்கு கருத்துமுரண்பாடுகள் ஏற்படும் இடத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் மக்களுக்கு தனது அறிக்கையினை மையப்படுத்திய விளக்கத்தினை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியிருப்பார். இது நடக்க வில்லை.

எனவே தான் பிரச்சினைகளுக்கு தீர்வாக கட்சியினை பதிவளிப்பது தகும் என மக்கள் கூறுகின்றோம். இன்றைய நிலையில் வாக்குகளை மக்கள் கொடுத்துவிட்டால் அரசியல் கட்சிகளை யாரும் விமர்சிக்கத் தேவையில்லை. தாம் விரும்பியது எல்லாவற்றையும் அரசியல்வாதிகள் செய்து கொள்வர் என்ற நிலையில் வீரகேசரி வாரவெளியீடு மக்களை பேச அனுமதிப்பது போரின் பின்பான நிலையில் காத்திரமான ஊடகப் பணியாகவே நாம் கருதுகின்றோம்.

“உரியவாறு திட்டமிடலை மேற்கொள்ள கூட்டமைப்பு பதிவு பெறவேண்டும்” - இராசதுரை ஜெயரூபன், தொலைக்காட்சி ஊடகவியலாளர் வரணி

Jeyaroopan-150x150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு பெறுவது அதில் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளைப் பொருத்தளவில் பொறுப்புச் சொல்லும் தன்மைகளை அதிகரிக்கும். சராசரியாக இன்று அனேகமான தமிழ் அரசியல் கட்சிகள் கட்சிக் கட்டுமானங்களைப் பேணுவதில்லை.

தேர்தல் சமயங்களில் மாத்திரம் வாக்குகளைப் பெறுவதில் ஏதாவது அவர்களது கொள்கைகளை முன்வைத்து மக்களைத் தேடிவரும் கலாச்சாரம் ஒன்று உள்ளது.

இக்காலாச்சாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொருத்தளவில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தயாகம் தேசியம் போன்றவற்றினை ஏனைய அரசியலில் உள்ளவர்களைக் காட்டிலும் கொண்டுள்ளனர் என்ற நம்பிக்கைத்துவத்தின் அடிப்படையில் தான் நாம் வாக்களிக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் சுட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கக் கூடிய அரசியல் கட்சிகளுக்கென வாங்குவங்கிக்கான மார்க்கம் காணப்படுகின்ற போதும் அதனை அப்படியே செய்யுங்கள் எனத் தொடர்ந்தும் மக்கள் விட்டுவிட முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கென்று பலதரப்பட்ட பொறுப்புக்கள் உள்ளன. அப் பொறுப்புக்களின் அடிப்படையில் அக் கட்சியில் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறாக அவர்கள் தமது மக்கள் பொறுப்புக்களை உயர்ந்த பட்சம் நிறைவேற்றுவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தம்மை வேலைத்திட்டங்களின் அடிப்படையில் பாகுபடுத்தி இயங்க ஆரம்பிக்கவேண்டும்.

இன்றைய போருக்குப் பின்பான நிலையில் தமிழ் மக்களின் அதிக படியான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வழிமுறையுடன் மட்டும் அரசியலை மட்டுப் படுத்திக்கொள்ள முடியாது.

ஒரு கதைக்கு இனப்பிரச்சினைத் தீர்வினைத் தான் கையில் எடுத்துச் செயற்படுகின்றார்கள் என்றால் அது கூட எம்மால் நிராகரிக்கப்பட முடியாததொன்றுதான். ஆனாலும் இந்த இடத்தில் எழும் மிகப் பெரிய கேள்வி என்னவெனில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இடம்பெறும் பேச்சுக்கள் சகலதுமே கூட்டமைப்பில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளங்களுக்குள்ளும் செயற்பாடுகளுக்குள்ளும் தான் இருக்கின்றது என்பதுவே ஆகும்.

இதனை நாம் கூட்டமைப்பில் அங்கம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களால் அறிகின்றோம். ஆகவே கூட்டமைப்பில் இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் உள்ளுர் விவகாரங்களாகவுள்ள பிரச்சினைகள் என சகலதையும் அறிவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்றால் போல் வேலைப்பகிர்வு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும்.

இவ் வேலைப்பகிர்வுக்காக மக்கள் சிந்திக்கையில் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சிகளை மட்டும் பலப்படுத்துவது பற்றிச் சிந்திப்பது அவரவர் தமது வேலைகளைச் செய்து விட்டுச் செல்வதாக அமைந்து விடும். ஆகவே நாம் கேட்கின்றோம். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் ஒரே தளத்தில் நின்று பணியாற்றக் கற்றுக் கொள்ளுங்கள்.

“பதிவுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது ஏட்டளவில் தான் அமையும்” – ம.தி. சுதா, சமூக விமர்சன எழுத்தாளர், உடுப்பிட்டி

sutha-150x150.jpg

கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் எம்மைப் பொருத்தளவில் உடன்பாடு கிடையாது. காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இன்று பல ஆண்டுகள் கடந்து விட்ட போதும் அவர்களிடத்தில் குறைந்தளது ஓர் கட்சியாக தம்மை ஒழுங்கமைப்பதற்கும் தாம் எல்லோரும் இணைந்து பணியாற்றவேண்டும் என சிந்திப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடத்தில் ஐக்கியம் தோன்றவில்லையாயின் பதிவுகள் எல்லாம் ஏற்பட்டாலும் அது ஏட்டளவில் தான் அமையுமே தவிர அதற்கு அப்பாலானதாக அமையாது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து பணியாற்றுவதற்கான எண்ணம் கூட்டமைப்பில் பலரிடத்தில் இல்லை. அவ்வாறாக எண்ணம் படைக்காதவர்களை எதற்காக வாக்களித்துத் தெரிவு செய்தீர்கள் என மக்களிடம் யாராவது கேட்பார்களாயின் உண்மையில் மக்கள் கூட்டமைப்பாக உள்ளனர் என்ற ஓர் பெரிய விடயத்தினையே நம்பி வாக்களித்தனர் எனக் கூறலாம்.

அதனை நாம் தேர்தல்களில் அவதானித்தால் நன்கு புரியும். அதாவது தமிழ்த் தேசியம் பேசியோரில் கூட பிரிந்து நின்றோருக்கு மக்கள் போதிய ஆணையினை அளிக்கவில்லை. இந்த இடத்தில் நாம் கூட்டமைப்புப் பதிவு தொடர்பில் ஏற்படும் தாமதங்களை ஏற்றக்கொள்ளவே நிராகரிக்கவே முடியாதுள்ளது. காரணம் அவர்கள் கடமையினை உணராது பயணிக்கும் வரை நாம் ஒன்றையும் திணிக்க முடியாது.

எம்மைப் பொருத்தளவில் மக்கள் இன்று போருக்குப் பின்பான கஷ்டங்கள் சகலதையும் தாங்க முடியாதளவிற்கு அனுபவிக்கின்றனர். இந்நிலையில் அதற்கான உதவிகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாட வேண்டிய தேவையும் இனப்பிரச்சினைத் தீர்வுடன் சமாந்தரமாகவுள்ளது.

உங்களுக்கு மக்கள் அளித்த வாக்ககளால் கிடைத்த வரப்பிரசாதங்களை மக்களை நோக்கி நகர்த்தி பணியாற்றுங்கள் என்பதுவே எமது ஆதங்கம். தமக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களை அலுவலகங்களை அமைத்து பணியாற்றினால் கூட பெரிய மனத்தைரியத்தினை மக்களுக்கு அது அளித்துவிடும்.

“பதிவு பெற்றால் தமிழ்மக்களின் அபிலாசையினை மேலும் பிரதிபலிக்கலாம்” – அருணாசலம் சத்தியானந்தம், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், மருதநகர், கிளிநொச்சி

saththiyanantham-150x150.jpg

இன்றைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்து வலுப்படுத்தவது ஊடகவே எமது சுயநிர்ணய உரிமைக்கான பயணத்தினை உரியவாறு தொடர முடியும் என நாம் நமபுக்கின்றோம். ஆதுவே தமிழ் மக்களின் அபிலாசையும் பெரு விருப்புமாகும்.

இன்றைய நெருக்கடி நிலைமையில் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பது ஓர் நிதர்சனமான உண்மையாகும். எமது தீர்க்க சிந்தனையுடன் வழிநடத்தக் கூடிய செயலூக்கம் நிறைந்த ஒரு புதிய தலைமை ஏற்பட வேண்டும் என்ற ஏக்கம் தமிழ் நெஞ்சங்களின் எதிர்பார்ப்பாகும்.

அதற்கான அகப் புற அரசியல் சூழ்நிலைகளை சீரமைத்து வழிதிறக்க வேண்டி இருக்கின்றது. அந்தத் தலைமை நிச்சயமாக பழமைவாதக் கருத்துக்களோடு மிதவாத கட்சிகளிடத்தில் இருந்து தோற்றி விடமுடியாது.

விடுதலைப் போராட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பயணிக்கக் கூடியதும் ஒடுக்கப்பட்ட மக்களினால் ஆதரிக்கப்பட்டமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தே அந்தத் தலைமை தேற்ற முடியும். இன்றைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்து வலுப்படுத்தவது ஊடகவே எமது சுயநிர்ணய உரிமைக்கான பயணத்தினை மீண்டும் தொங்கும் மிடுக்காக நாம் தொடர முடியும்.

கூட்மைப்பினை கட்சியாகப் பதிவு செய்யத் தடையாக இருப்பது தலைமைத்துவப் போட்டிதான் என்பது ஊரறிந்த செய்திதான். முன்னாள் ஆயுத இயக்கங்களிடம் கூட்டமைப்பின் தலைமை சென்று விடுமோ என அஞ்சுபவர்களும் உண்டு. ஆனால் கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு பிரதேச மாவட்ட தேசிய மட்ட அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு உட்கட்சி ஜனநாயகம் பேணப்படுமாயின் இந்தத் தலைமைத்துவ குத்துவெட்டுக்கள் தீர்ந்து போய்விடும்.

அத்தொடு நாம் நாம் நீண்ட வலிசுமந்த இனம் என்பதை உண்மையில் புரிந்துகொள்வோமாயின் இதயசுத்தியோடு ஓர் தலைமைத்துவக் கையளிப்பினைச் செய்யவேண்டிய தருணமும் இதுவாகும்.

இந்த அரசியல் நீரோட்டத்தில் புதிய இளம் அரசியல் செயலாளிகளுக்கும் இடம் விட்டுக்கொடுக்க வேண்டும். ஒரு இளம் தலைமுறை புதிய சிந்தனைகளோடு அரசியல் களம் இறங்கும் போது பரந்துபட்ட மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்க முடியும்.

இன்று சர்வதேச சமூகம் தனது கவனத்தினை எம்மீது திருப்பியுள்ள நிலையில் கனிந்துவரும் இந்தச் சூழலை நாடிபிடித்த அறிந்து ஒரே குரலில் எமது எரிமையினை வெளிப்படுத்த வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்து வலுப்படுத்துவதே சாலச் சிறந்தது. இதுதான் தமிழ் அரசியல் இராஜதந்திரத்தின் கால்ளோக விளங்கமுடியும்.

கலந்துரையாடியவர் தியாகராஜா நிரோஷ்

http://www.saritham.com/?p=60854

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.