Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று மஹிந்த தாய்லாந்து பயணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MAHINDA_RAJAPA_seithy.jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி தாய்லாந்து பிரதமர் யின்லக் சினவத்ரா அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். ஜனாதிபதியை கெளரவிக்கும் முகமாக பிரதமர் சினவத்ரா பகல் போசன விருந்துபசாரமொன்றையும் அளிக்கவுள்ளார்.

ஜனாதிபதி அவர்களின் தாய்லாந்துக்கான இவ்விஜயத்தின் போது இருதரப்பு அரசியல் ஆலோசனை தொடர்பாகவும் தாய்லாந்து அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்கின்ற குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமான சட்ட உதவிகளை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கை தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆவணங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பில் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளுக் கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்று கையொப்பமிடப்படும்.

தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரிந்ஹோன் சிராபத்தும் மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவுள்ளார். அன்று அவர் ஜனாதிபதிக்கு இரவு விருந்துபசாரம் ஒன்றையும் அளிப்பார்.

கெளதம் புத்தர் ஞானோதயம் பெற்று 2600 வருடங்கள் நிறைவடைந்ததை குறிக்கும் முகமாக மே மாதம் 31 ஆம் திகதி நடைபெறும் புத்த ஜெயந்தி ஆரம்ப விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷ கலந்து கொள்வார். மேலும் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் புத்த ஜெயந்தி விழாவின்போது ஜூன் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை "புத்தரின் ஞானோ தயத்தால் மானிட வாழ்வுக்கு கிட்டிய நன்மைகள்" என்ற தலைப்பில் சொற்பொழி வாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் தாய்லாந்து விஜயத்தின் போது வர்த்தக சம்மேளனத்தில் கலந்து கொள்வதற்கும் தாய்லாந்தில் உள்ள இலங்கை வர்த்தகர்களை சந்திப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பல்லாண்டு காலமாக இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் மத, கலாசார, அரசியல் மற்றும் வர்த்தக தொடர்புகள் இடம்பெற்று வந்துள்ளன. 1955 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையிலான நவீன ராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டி ருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=60892&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெளதம் புத்தர் ஞானோதயம் பெற்று 2600 வருடங்கள் நிறைவடைந்ததை குறிக்கும் முகமாக மே மாதம் 31 ஆம் திகதி நடைபெறும் புத்த ஜெயந்தி ஆரம்ப விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷ கலந்து கொள்வார். மேலும் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் புத்த ஜெயந்தி விழாவின்போது ஜூன் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை "புத்தரின் ஞானோ தயத்தால் மானிட வாழ்வுக்கு கிட்டிய நன்மைகள்" என்ற தலைப்பில் சொற்பொழி வாற்றவுள்ளார்.

இதற்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் உள்ளது ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.