Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அரசுக்கு விசுவாசமான அதிகாரிகள் பலரும் கருவேப்பிலையாக தூக்கி வீசப்படுகின்றனர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு விசுவாசமாக அதிகாரிகள் பலரும் வடக்கில் செயற்பட்டு வருகின்ற போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் அவர்களை தூக்கியடிக்க ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை.

அவ்வகையில் யாழ் அரச அதிபரை தொடர்ந்து இன்னுமொருவர் இடமாற்றத்திற்கு உட்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் சிங்கள மக்களுக்கு தமிழர்களின் நிலங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஏற்பாடு தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்ட காரணத்திற்காக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் எஸ்.தயானந்தாவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த அறிவிப்பு இன்று காலை வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழருக்குச் சொந்தமாகவிருந்த கரையோரங்கள் முழுவதையும் பெரும்பான்மையினருக்கு தாரைவார்த்துக் கொடுத்தவர் என்றும் கொக்கிளாய் ஆற்றுப்பகுதியில் அதிகளவு வசதிவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்து சிங்கள, முஸ்லிம் மீனவர்கள் அப்பகுதியில் ஆக்கிரமிப்புச் செய்ய இவர் உதவியிருந்தார் என தமிழ் தரப்புகளிடம் இருந்து பலமான விமர்சனங்களை எதிர்நோக்கியிருந்தார்.

சுமார் 3ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த கரையோர மக்கள் இவரால் தொழிலை இழந்திருப்பதுடன், பாரம்பரியமான தொழிலிடங்களையும் இழந்திருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், மணல் விற்பனை, மரம் விற்பனை என அனைத்திலும் குளறுபடிகள் செய்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. அண்மையில் நந்திக்கடலில் இறால் வளர்ப்பு பண்ணை அமைக்க தெற்கு வியாபாரி ஒருவருக்கு அனுமதிக் கடிதம் கொடுத்திருந்தார் என இந்த பிரதேச செயலர் பிரதேச மக்களின் வெறுப்பிற்கு உள்ளாகியிருந்தார். அத்துடன் மாவட்டத்தின் பெருமளவு நிலத்தை புலிகளின் இடம் என இராணுவத்தினருக்கு அடையாளப்படுத்திக் கொடுத்ததுடன், அவற்றை பட்டா போட்டும் கொடுத்திருந்ததாக மக்களால் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில், தெற்கு மக்களுக்கு பிரதேச மக்களுக்கு உரிமையுடைய நிலங்களை ஆளுர் அபகரித்துக் கொடுக்க முயற்சித்திருந்த விடயத்தை கடந்த மாதமளவில் பெருமிதமாக சில உள்ளூர் ஊடக வட்டாரங்களுடன் பேசியிருக்கின்றார். இதனையடுத்து அந்தச் செய்தி பரபரப்பான நிலையில், யாழில் நடைபெற்ற போர் வெற்றியாளர் தினத்தின்போது ஆளுநர் இவரை நேரில் அழைத்து கடும் தொனியில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.