Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய் நிலத்தை நேசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் விடுக்கும் மரண அச்சுறுத்தல்! - தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு மிக மோசமாக நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கு எங்கும் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தட்டிக் கேட்பதற்கு யாருமில்லையென்ற துணிவோடு சிங்களப் பேரினவாதம் நாளுக்கு நாள் இந்த நில அபகரிப்பை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதிலும் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றது.

பல வருடங்களிற்கு முன்னர் புலம்பெயர்ந்து சென்று சர்வதேச நாடுகளில் வசிக்கின்ற பலரின் காணிகளைச் சிறீலங்கா அரசு ஏற்கனவே அபகரித்துள்ளது. தமிழர்களின் இந்தக் காணிகள் சுவிகரிக்கப்பட்டு நிரந்தர படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் நகர்ப் புறங்களில் உள்ள காணிகள் சட்டவிரோதமாக சுவீகரிக்கப்பட்டு தென்னிலங்கைச் சிங்கள இனத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் உள்ள கரையோரப் பகுதி நிலங்கள் எவரினது அனுமதியும் இன்றி இராணுவத்தினால் சுவிரகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நகரையண்டிய பகுதியில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு தென்னிலங்கைச் சிங்கள வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலங்களை தொடர்பில் யாருமே உரிமை கோர முடியாது, உரிமைகோரக் கூடாது என்பதிலும் சிங்கள அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு தனது நிலம், தனது சொத்துக்கள் என்று உரிமை கோருபவர்கள் தீர்த்துக்கட்டப்படுவார்கள் என்பதை அண்மையில் கிளிநொச்சியில் இடம்

பெற்ற கனேடியப் பிரசையின் கொலை மூலமாக அரசு சுட்டிக் கூறியிருக்கின்றது.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து கனேடியப் பிரசையருவர் கொல்லப்பட்டமை குறித்து அரசுக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் தற்போது தென்னிலங்கை இறங்கியிருக்கின்றது. இதற்காக இராணுவப் புலனாய்வாளர்களின் உதவியுடன் மேற்படி கொலை வழக்கு திசைதிருப்பப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை கரம்பனை பிறப்பிடமாகக் கொண்ட அந்தோனிப்பிள்ளளை மகேந்திரராஜா என்பர் வன்னியில் வாழ்ந்த போது அவருக்கு அங்கு பெருமளவான சொத்துக்கள் இருந்தன. பரந்தன், மற்றும் கிளிநொச்சி நகரில் இவருக்கு பல எக்கர் காணிகள் உள்ளன. யுத்த காலத்தில் கனடாவிற்கு புலம்பெந்து சென்ற இவர் நீண்டகாலம் கனடாவில் வசித்து அந்த நாட்டின் நற்பெயர் பெற்று கனேடிய பிரசை என்ற அந்தஸ்துடன் வாழ்ந்தார். தாயகத்திலுள்ள இவரது காணிகளை இங்குள்ளவர்கள் பராமரித்து வந்தனர்.

இவரது சில காணித் துண்டுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. மகேந்திரராஜாவின் அனுமதியுடனேயே புலிகள் அந்தக் காணிகளைப் பயன்படுதியதாகவும் வன்னியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து வன்னியிலிருந்த இவரின் நிலம் சிங்களத் தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டது. நகர மத்தியில் சிங்கள நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதன் மூலம் சிங்கள அரசு இவரது நிலத்தை சுவீகரித்து தென்னிலங்கை நிறுவனமொன்றுக்கு வழங்கியிருந்தது.

சிங்களவர்களின் நில அபகரிப்பை கனடாவில் இருந்து அறிந்த மகேந்திரராஜா கடந்த ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் வன்னிக்கு வந்தார். இங்கிருந்த தனது நிலத்தில் வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்த இவர், சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்து வந்தார். நிலத்தை மீட்பதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இவர் தாயாராகிக் கொண்டு இருந்தார். இந்நிலையிலேயே கடந்த 3 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் பரந்தனில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை சிறீலங்கா அரசாங்கத்தாலும் இராணுவப் புலனாய்வாளர்களாலும் நன்கு திட்டமிடப்பட்ட கொலை என்று பல தரப்பினர்களாலும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் தாயத்தில் சிங்களவர்களால் அபகரிக்கப்படும் நிலங்கள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் யாராயினும் வாய்திறப்பார்களானால் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்று அரசு மறைமுக எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

சாவுகள் மலிந்த தமிழர் தாயகத்தில் ஏனைய கொலைகளைப் போன்று இந்தக் கொலையையும் மூடி மறைப்பதற்காக அரசு முயன்றது. ஆனால் கனேடிய அரசாங்கம் தனது பிரசையின் கொலை தொடர்பில் உரிய விசாரணையை நடத்துமாறு கோரியதைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இது சோடிக்கப்பட்ட வழக்கு என்று பலரும் கூறுகின்றனர். பாட்டன், முப்பாட்டன் காலத்தில் தமிழர்கள் வாழந்த தாய்நிலம் சிங்கள ஆதிக்கவாதிகளால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து எவருமே வாய் திறக்காமல் இருப்பது எந்தவகையில் நியாயம்? எமது மூதாதையர்கள் வாழ்ந்த, அவர்களில் நினைவுச் சின்னங்கள் தாங்கி நிற்கின்ற, எமது போராட்ட வீரம் விளையாடிய நிலத்தை எதிரியிடம் விட்டு வைக்க யாருக்குத்தான் மனம் வரும்?.

ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி அசட்டுத் துணிவோடு தமிழர் தாயகத்தை கபளிகரம் செய்யும் செயற்பாட்டில் சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது. வடக்குக் கிழக்கு பிரதேசம் இணைக்கப்பட்டு தமிழர் தேசமாக அங்கிகரிக்கப்பட்டு இதற்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த அதிகாரங்கள் வழங்கப்படாது என்று சிறீலங்கா அரசாங்கம் கூறிவருகின்றது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள மக்களை குடியேற்றுவதன் மூலமும் தமிழர் தாயகத்தில் சிங்கள நிறுவனங்களை இயங்க வைப்பதன் மூலமும் சிங்கள மயமாக்கலை மேற்கொள்ளவே அரசு முயன்று வருகின்றது. இதன் மூலம் சிறீலங்காவில் இனப்பிரச்சினை இல்லை என்றும் தமிழர்களுக்குத் தீர்வு தேவையில்லை என்றும் பறைசாற்றுவதே சிறீலங்கா அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

இவ்விடையத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். சிறீலங்கா அரசின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் உயிரிழப்புக்களை தவிர்த்துக் கொள்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும். தமிழர் தாயகத்தையும் தாயகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலங்களையும் ஆக்கிரமிக்கும் சிங்கள அரசின் முயற்சியை முறியடிக்க ஒன்றுதிரண்டு செயற்பட வேண்டும்.

இந்தச் செயற்பாடுகளை புலம்பெயர்ந்த நாடுகளின் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். தமிழர் நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டுமாயின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற உண்மையை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் சார்ந்த நாடுகளில் இராஜதந்திரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

நன்றி : ஈழமுரசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.