Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(2ஆம் இணைப்பு)மகிந்தர் தங்கியுள்ள விடுதிக்கு முன்னர் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

breakingnews.gif

மகிந்த ராஜபக்ஷவும் அவரது பட்டாளங்களும் லண்டனில் தங்கியுள்ள, விடுதியை முற்றுகையிட்டுப் போராட தமிழர்கள் தாயாரிவிட்டனர். அதற்கான அனுமதியையும் பொலிசார் வழங்கியிருப்பதாக அறியப்படுகிறது.

இன்று மதியம் 1 மணி முதல் இரவு 8.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறும் என மேலும் அறியப்படுகிறது. லண்டனில் உள்ள டோச்சஸ்டர் ஹோட்டல், மற்றும் அதற்கு அருகில் நிற்கும் ஹில்டன் ஹோட்டல் ஆகிய இரண்டு இடங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது. மகிந்தரின் ஊடகப்பிரிவினர், ஹில்டன் ஹோட்டல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மகிந்தர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதனை, இந்த இரண்டு ஹோட்டல்களும் பரம ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும் !

இதனை அடுத்து, இன்று (பிரித்தானிய நேரப்படி) மதியம் 1.00 மணி முதல் தொடர்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் இடம் :

Hilton Hotel

22 Park Lane, London

W1K 1BE

The Dorchester

London Hilton on Park Lane

22 Park Lane London W1K 1BE

y-map%20%282%29.jpgy-map%20%281%29.jpg

http://www.eeladhesa...chten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

news_eelam_20120604_1641378144.jpg

photo.gifபிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடி அறுபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்ற வேளையில் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று லண்டனில் வந்திறங்கியுள்ள ராசபக்சே தங்கியுள்ள விடுதியே புலத்துப் புலிகளின் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மனித மிருகம் ராபக்சே லண்டன் நேரம் நேற்றிரவு எட்டு மணிக்கு ஹீத்றூ விமானநிலையத்தில் வந்திறங்க உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து லண்டன் ஹீத்றூ விமான நிலைய வரவேற்பாளர் அரங்கம் பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது.

தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடிகளை கைகளில் ஏந்திய பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் புலத்துப்புலிகளாக உணர்ச்சி பொங்க கோசங்களை எழுப்பி புலத்து புலிகளின் எழுச்சி முழக்கத்துடன் மனித மிருகத்திற்கு வரவேற்பு கொடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மனித மிருகம் தங்கியிருக்கும் விடுதியை கண்டறிந்து முற்றுகைக்குள் கொண்டுவந்து மிகவும் உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர் பிரித்தானியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.

இல:22 பார்க் லேன் லண்டன் என்ற முகவரியில் அமைந்துள்ள ஹில்ரன் விடுதியும் அதற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள டொர்ச்ஸர் விடுதியும் புலத்துப் புலிகளின் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழர்களை வகைதொகையின்றி வேட்டையாடி மனித மிருகம் ராசபக்சே அவனது 35 சகாக்கள் துணையுடன் லண்டன் வந்துள்ளான். அவர்கள் இந்த இரு விடுதிகளிலும் தங்கியுள்ளார்கள். எந்த விடுதியில் ராசபக்சே தங்கியுள்ளார் என்ற விடையத்தை விடுதி நிர்வாகத்தினர் கமுக்கமாக வைத்துள்ளதால் இரண்டு விடுதிகளையும் முற்றுகைக்குள் வைத்து போராடுவது என்று முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரண்டு விடுதிகளின் முன் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு காவல்துறையினரின் அனுமதியும் கிடைத்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ராசபக்சே வருகிறான்… வந்துவிட்டான்… என்றவுடன் புலம்பெயர் உறவுகளின் நாடிநரம்பெல்லாம் முறுக்கேறியிருந்த நிலையில் விடுதிகளின் முன்னால் கோபாவேசத்துடன் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.

புலிக்கொடியை பேராயுதமாக கைகளில் ஏந்தி ராசபக்சேவிற்கு எதிராக கோசங்களை எழுப்பிக் கொண்டிருக்கும் புலத்துப் புலிகளின் போர்கோலம் நிச்சயமாக ராசபக்சேவை மிரட்சிக்குள்ளாக்கும். வந்துள்ள ஒவ்வொருவரும் அக்கினிப்பிளம்பாக காட்சிதருகின்றனர். தலைவனின் கட்டளையினை ஏற்று களம்புகுந்து எதிரிகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடிவரும் புலிப்படைக்கு நிகராக இங்கு போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்க எமக்கே பிரம்மிப்பாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.

ஏட்டுச் செய்திகளாக புலகளின் வீராவேசத் தாக்குதல்களை அறிந்த மகிந்த உள்ளிட்ட சிங்களவர்களிற்கு பேரச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவே எம்மவர்களது போராட்டம் வீச்சுப்பெற்றுள்ளது. நேரம் செல்லச் செல்ல ஓயாத அலைகளாக வந்திணையும் புலத்துப் புலிகள் படையின் கோசங்கள் விண்ணை முட்டும் வண்ணம் எதிரொளித்துக் கொண்டுள்ளது.

புலம்பெயர்வாழ் புலிகளின் முற்றுகையில் சிக்கியுள்ள மனித மிருகம் ராசபக்சேவின் நிலை பரிதாபகரமானதாக உள்ளது. ராசபக்சேவிற்கு எதிரான புலத்துப் புலிகளின் போர் ஓய்ந்துவிடப் போவதில்லை. எத்தனை தடைவ வந்தாலும் உறுதியோடு விரட்டியடிப்போம் என சூளுரைத்து களமாடிவருகின்றனர் எமது உறவுகள்.

தொடரட்டும் புலத்துப் புலிகளின் போராட்டம். வெல்வோம் தமிழீழத் தனியரசை.

ஈழதேசம் இணையம்.

http://www.eeladhesa...chten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பாதுகாப்பில் பிரச்சனை ஏற்படும் எனக் கருதினால் வாயில் கறுப்புத் துணி கட்டிய வசனங்களைப் பாவியுங்கள். தலைக்கு தொப்பி அணியுங்கள். ஆனால் நிச்சயம் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்....

இத்தனை துணிவோடு திரும்ப வருகின்றான் என்பது அவனது ஆணவம் மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டவையாகவும் இருக்கலாம்.... விளைவுகள் என்னவாக இருக்கலாம் என ஊகிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனால் மகிந்தவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் தான் மகிந்த துணிவுடன் வந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Someone called on ILC radio and said this comment earlier this afternoon. There was a huge debate between Foreign Office and Common Wealth Office, Certain Indian government congress official put pressure on Commonwealth Office and Foreign Office. Afterall It is India again, supports Mahinda.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.