Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் பொய் கூறுகிறார்: ஆதாரத்துடன் தமிழக அரசியல் (09.06.2012)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் பொய் கூறுகிறார்: ஆதாரத்துடன் தமிழக அரசியல் (09.06.2012)

Published By பெரியார்தளம் On Thursday, June 7th 2012. Under thamizhaga arasiyal, முதன்மைச்செய்திகள்

கடந்த கிழமை வெளிவந்த தமிழக அரசியல் கட்டுரைக்கு தான் பேட்டி கொடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்ட சீமானுக்கு தமிழக அரசியல் இதழ் ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளது. சீமானுடன் நமது நிருபர் அலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை சீமான் மறுத்தால் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனத்தையே அவர் மறுக்கிறார் என்பதாகவே பொருள்படுகிறது. – தமிழக அரசியல் 09.06.2012 ஏடு

tam09062012a.jpg

tam09062012b.jpg

tam09062012c.jpg

நன்றி: தமிழக அரசியல்

http://www.periyarthalam.com/2012/06/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86/

... பொய்யோ, புரட்டோ ... இந்த திராவிடம் என்ற பொய்மானுக்கு ஆப்பு வைக்கபட வேண்டும்! ... தமிழன் தமிழனை ஏமாற்றும் ஒரு சொல்லாகி விட்டது இந்த திராவிடம்! ... சீமானின் இந்த பூனைக்கு மணி கட்டும் விவகாரத்தோடு ஈழ விடுதலையை தயவு செய்து தொடர்பு படுத்தாதீர்கள் எவரும்!

இந்த திராவிடம் என்ற மாயத்தை அரவணைத்து இருப்பவர்கள் தமிழக தமிழர்கள் தான் ... முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்!

... தமிழன் தமிழனாக வாழட்டும் ... பொய்முகங்களோடு அல்ல!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல் இதழுக்கு மறுப்பு: செந்தமிழன் சீமான் அறிக்கை

2012/06/04 , 2:14 PM [uTC]

06.06.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் “சீமானுக்கு எதிராக திரளும் கருப்புச் சட்டைகள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில், என்னிடம் பேட்டி எடுத்து, நான் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவையாகும். அந்த செய்திக் கட்டுரையை வெளியிட்ட கணேஷ் குமார் என்பவர் என்னிடம் எந்த ஒரு பேட்டியையும் எடுக்காமல், நான் கூறியதாக வெளியிட்டுள்ள தகவல்கள் பொறுப்பற்றவை, இதழியல் நெறிமுறைகளுக்கு புறம்பானவை.

நாம் தமிழர் கட்சி வெளியிட்ட ஆவணம் குறித்து தமிழக அரசியல் இதழில் இருந்து ஒருவரும் என்னோடு பேசவில்லை. அப்படியிருக்க, நான் சொல்லாததை சொன்னதாக அடைப்புக் குறிகள் போட்டு கூறியிருப்பது விசமத்தனமான செயலாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மைக்குப் புறம்பான இப்படியொரு செய்தியை வெளியிட்டுருப்பதற்கு உள்நோக்கம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தந்தை பெரியாரின் சமூகப் பங்களிப்பை நாம் தமிழர் கட்சி பெருமையாக பரப்புரை செய்துவருகிறது. உண்மை இவ்வாறிக்க, தமிழின உரிமை இழப்பிற்கு பெரியாரே முதற்காரணம் என்று நான் கூறியதாக தமிழக அரசியல் இதழில் குறிப்பிட்டிருப்பது மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டது என்பது மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியின் பெருமையை திட்டமிட்டு சீர்குலைக்கும் செயலாகும்.

எனது இந்த மறுப்பை தமிழக அரசியல் இதழில் வெளியிடுமாறு இதழாசிரியரைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

http://www.naamtamilar.org/கட்சி-செய்திகள்/தமிழக-அரசியல்-இதழுக்கு-ம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளாலும் தமிழனுக்கு விடிவில்லை, மற்றய கட்சிகளினால் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது, திராவிடம் தவிர்த்த வேறு ஒரு வடிவமே புதியதொரு ஆட்சிமாற்றத்தை கொண்டு வரும், வேகமாகவும் உறுதியாகவும் மக்கள் ஆதரவினை பல்கிபெருக செய்ய, தமிழ்நாடு தழருக்கே உரித்தானது என்ற கோசம் சரியானது, கேரளத்திலும்,கன்னடத்திலும்,ஆந்திரத்திலும், திராவிட கட்சிகள் ஆட்சியிலும் இல்லை, அங்கு தமிழன் அரசியல் சக்தியும் இல்லை, தமிழ்நாட்டில்மட்டும், திராவிடம் ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும், தமிழர் இல்லாத ஒருவர் அரசியல் சக்தியாக ஏன் இருக்க வேண்டும், தமிழ் நாட்டில் வந்தவர் எல்லாம் வாழலாம், ஆனால் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும். அதுதான் அனைத்து தமிழனுக்கும், தமிழுக்கும் எதிர்காலத்தில் பாதுகாப்பு, அதற்கு அனைத்து தமிழரும் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டும்.. நாம்தமிழர் கட்சியால் மட்டுமே இனியொரு ஆட்சி மாற்றத்தை உறுதியாக கொண்டு வரமுடியும்.

Edited by சித்தன்

சீமான் மறுத்திருக்கிறார், ஆனால் திராவிடம் எனும் பொய்மையை தமிழக தமிழர்களிடமிருந்து அகற்ற யாராவது தலைவர்கள் முன்வர வேண்டும்...

... சீமானுடைய திராவிடம் எனும் பொய்மைக்கு எதிரான கருத்து வெளியாகியது என்றவுடன் ... இதற்கெதிராக முதலைக்கண்ணீர் வைத்தவர்கள் சாதீய சாக்கடையை கையில் எடுத்தாடும் திருமாவளவன் கும்பலே (சில அவர்களின் முக்கியஸ்தகர்களின் முகப்புத்தகங்கள், ஆதரவு இணையங்களில் ஒப்பாரி வைக்கிரார்கள்). ... திருமா கும்பலுக்கும் திராவிடத்துக்கும் என்ன தொடர்பு????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் சீமானின் இந்த மறுப்புக்குத்தானே தமிழக அரசியல் இதழ் 09.06.2012 இல் வெளிவந்துள்ள ஆதாரத்துடன் பதிலைத்தானே இங்கே நான் இணைத்துள்ளேன்...

09.06.2012 தமிழக அரசியல் இதழுக்கான மறுப்பினை தெரிவிக்கக்கூறுங்கள் தோழர் சீமானிடம்..

தமிழக அரசியல் இதழுக்கு மறுப்பு: செந்தமிழன் சீமான் அறிக்கை

2012/06/04 , 2:14 PM [uTC]

06.06.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் “சீமானுக்கு எதிராக திரளும் கருப்புச் சட்டைகள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில், என்னிடம் பேட்டி எடுத்து, நான் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவையாகும். அந்த செய்திக் கட்டுரையை வெளியிட்ட கணேஷ் குமார் என்பவர் என்னிடம் எந்த ஒரு பேட்டியையும் எடுக்காமல், நான் கூறியதாக வெளியிட்டுள்ள தகவல்கள் பொறுப்பற்றவை, இதழியல் நெறிமுறைகளுக்கு புறம்பானவை.

நாம் தமிழர் கட்சி வெளியிட்ட ஆவணம் குறித்து தமிழக அரசியல் இதழில் இருந்து ஒருவரும் என்னோடு பேசவில்லை. அப்படியிருக்க, நான் சொல்லாததை சொன்னதாக அடைப்புக் குறிகள் போட்டு கூறியிருப்பது விசமத்தனமான செயலாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மைக்குப் புறம்பான இப்படியொரு செய்தியை வெளியிட்டுருப்பதற்கு உள்நோக்கம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தந்தை பெரியாரின் சமூகப் பங்களிப்பை நாம் தமிழர் கட்சி பெருமையாக பரப்புரை செய்துவருகிறது. உண்மை இவ்வாறிக்க, தமிழின உரிமை இழப்பிற்கு பெரியாரே முதற்காரணம் என்று நான் கூறியதாக தமிழக அரசியல் இதழில் குறிப்பிட்டிருப்பது மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டது என்பது மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியின் பெருமையை திட்டமிட்டு சீர்குலைக்கும் செயலாகும்.

எனது இந்த மறுப்பை தமிழக அரசியல் இதழில் வெளியிடுமாறு இதழாசிரியரைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

http://www.naamtamil...ியல்-இதழுக்கு-ம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளாலும் தமிழனுக்கு விடிவில்லை, மற்றய கட்சிகளினால் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது, திராவிடம் தவிர்த்த வேறு ஒரு வடிவமே புதியதொரு ஆட்சிமாற்றத்தை கொண்டு வரும், வேகமாகவும் உறுதியாகவும் மக்கள் ஆதரவினை பல்கிபெருக செய்ய, தமிழ்நாடு தழருக்கே உரித்தானது என்ற கோசம் சரியானது, கேரளத்திலும்,கன்னடத்திலும்,ஆந்திரத்திலும், திராவிட கட்சிகள் ஆட்சியிலும் இல்லை, அங்கு தமிழன் அரசியல் சக்தியும் இல்லை, தமிழ்நாட்டில்மட்டும், திராவிடம் ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும், தமிழர் இல்லாத ஒருவர் அரசியல் சக்தியாக ஏன் இருக்க வேண்டும், தமிழ் நாட்டில் வந்தவர் எல்லாம் வாழலாம், ஆனால் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும். அதுதான் அனைத்து தமிழனுக்கும், தமிழுக்கும் எதிர்காலத்தில் பாதுகாப்பு, அதற்கு அனைத்து தமிழரும் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டும்.. நாம்தமிழர் கட்சியால் மட்டுமே இனியொரு ஆட்சி மாற்றத்தை உறுதியாக கொண்டு வரமுடியும்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற தமிழர் எழுச்சிப்போராட்டங்களின் செய்திகளை கூர்ந்து பார்த்திருந்தால் உங்களுக்கு உண்மை தெளிவாக விளங்கும்...

1) முல்லைப்பெரியாறு அணையை உயர்த்தக்கோரி அனைத்து தமிழ் அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து போராடின. "நாம் தமிழர் கட்சியும் சீமானும்" இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

2) தமிழகத்திலுள்ள முக்கிய கிழமை இதழ் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடமாட்டோம் நாங்கள். என்று தவறான தகவலை அளிக்கிறார்.

3) ஈழ ஏதிலிகளின் தமிழக வதைமுகாமான செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு வதைமுகாம்களை மூடக்கோரி அனைத்து தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து சென்னையில் போராட்டம் நடத்தினர். அதில் நீங்கள் சொல்லும் நாம் தமிழர் கட்சியினரும் சீமானும் வரமறுத்துவிட்டனர்.

4) ஈழவிடுதலைக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயகத்தினை அனைத்து அமைப்பினரும் இணைந்து கடந்த மே மாதம் தொடங்கினோம். அந்நிகழ்வுக்கும் நாம் தமிழர் கட்சியினரும், சீமானும் வரவில்லை.

5) மே 20 அன்று ஈழவிடுதலைக்கோரியும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒன்றுகூடலை அனைத்து அமைப்புகளையும், கட்சிகளையும் ஒன்றிணைத்து மெரீனா கடற்கரையில் நடத்தினோம். வேறு மாநிலத்திலிருந்து "ராம் விலாஸ் பஸ்வான்" வந்து கலந்துகொண்டார். ஆனால் இங்கிருக்கும் சீமானையும், நாம் தமிழர் கட்சியினையும் காணவில்லை...

இவ்வாறு பலவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம்...

மக்களுக்கான போராட்டத்தில் அனைவரையும் அரவணைத்து செல்லாமல் புறக்கணிப்பவர்கள் நிலை என்னவாகும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் இங்கு பொய் சொல்லுகின்றீர்கள். முல்லைப்பெரியாருக்கான நீர்மட்ட உயர்வு தொடர்பாக நடந்த போராட்டத்தில் சீமான் கட்சி என்பது பெரியளவு நோக்கத்தோடு வளரவில்லை. அச் சந்தர்ப்பங்களில் சீமான் ஈழ அழிவு பற்றியே கரிசன கொண்டிருந்தார். முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் உயர்த்துவது இருக்கட்டும். முல்லைப்பெரியாறு உடைக்க கேரளா அரசு முயன்ற பிரச்சனையில் திமுக , அதிமுக போன்ற கட்சிகள் கலந்து கொள்ளவே இல்லை. வைகோ, மற்றும் சீமான் போன்றவர்கள் தான் ஆர்;பாட்டம் செய்தார்கள். கேரளாவில் தமிழர் சொத்துக்கள் தாக்கப்பட்டபோது, பதிலுக்குத் தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து சிறை சென்றவர்கள் நாம் தமிழர் கட்சி தாம்.

எந்த ஊடகத்திற்கு தண்ணீரை உயர்த்த விடமாட்டோம் எனச் சீமான் பதிலளித்தார் எனக் கூறமுடியுமா?

பூந்தமல்லி, செங்கற்பட்டு முகாம்களை மூடச் சொல்லி எல்லாக் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சொன்னீர்கள். அக்காலப்பகுதியைத் தரமுடியுமா? எல்லாக் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டட செய்தி என்பது எனக்குக் கொஞ்சம் புதிய செய்தியாக உள்ளது. செங்கற்பட்டு முகாமில் சென்ற 2 மாதங்களுக்கு முன்னர் தங்களை விடுதலை செய்யச் சொல்லி ஏதிகள் உண்ணாவிரதம் மேற்கொட்டார்கள். அதில் மரத்தில் இருந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொல்லி ஒருவர் ஒருவர் மரத்தில் ஏறி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். யாரும் நீங்கள் சொன்ன எல்லாக் கட்சிகளில் இருந்தும் ஒருவரும் போய்ப் பார்க்கவில்லை.

ஈழப் போராட்ட்ததிற்காக சீமான் உங்களோடு வரவில்லை என்று சொல்வது எல்லாம் பொய்யான கருத்தாகும். சீமான் கட்சி தொடங்கியதில் இருந்து ஈழப் போரட்டத்தையும், ஈழத்தையும் தான் முதன்மை செய்து வருகின்றார். ஈழத்தில் முக்கியமானவர்களின் தினங்களை தமிழகத்தில் நினைவு கொள்வது அவரது கட்சி மட்டும் தான்.

நீங்கள் எங்களுக்குத் தெரிந்த செய்திகளையே பிழையாகத் தரும்போது உங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.