Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மகிந்தாவிற்கு எதிரான பிரித்தானியா ஆர்ப்பாட்டங்களால் இலங்கை அரசு பதட்டத்தில் மூழ்கியுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahintharajapacse-150srilanka.jpg

இலங்கை ஜனாதிபதி மகிந்தாவிற்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து இலங்கை அரசு கவலையடைந்துள்ளதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துக்கள் மேற்படி ஆர்ப்பாட்ங்கள் தொடர்பாக அரசாங்கம் பதட்டத்தில் மூழ்கியுள்ளதை நன்கு எடுத்துக் காட்டுவதாக கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கருத்து தெரிவித்ததாக உதயன் பத்திரிக்கை தனது பதிப்பில் தெரிவித்துள்ளது.

மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்களை வெளியிட்ட மேற்படி அமைச்சர் ஹெகலிய கூட மிகுந்த பதட்டத்துடனேயே காணப்பட்டதாகவும் மேற்படி பத்திரிகையாளர் தெரிவித்தார்.

தான் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உரையாற்றும் போது மகிந்தாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் போதியளவு வெற்றியளிக்கவில்லை என்று கூறினாலும் பின்னர் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவரது கவலையை எடுத்துக்காட்டியது.

அவர் அங்கு உரையாற்றும் போது "எவ்வாறெனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியில் வந்து உரையாற்றியமை முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில்; புலிகள் அமைப்பு இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அவரின் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதும் உகந்த விடயங்களாக எங்களுக்குத் தெரியவில்லை. அந்த வகையில் இந்த நிலைமையை தடுத்திருக்க இங்கிலாந்து நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு முடியாமல் போனமை குறித்து கவலையடைகின்றோம்.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் ஆற்றவிருந்த உரையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவை சிறந்த விடயங்கள் அல்ல. இந்த விடயம் குறித்து நாங்கள் கவலையடைகின்றோம். இதேவேளை பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலங்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்திய மக்கள் மத்தியில் சென்று உரையாற்றியுள்ளார்.

இது பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய விடயமாகும். இது இவ்வாறு சர்வதேச மட்டத்தில் புலிகள் எந்த மட்டத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதனை இந்த விடயங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அனைத்து நாடுகளிலும் இவ்வாறான நிலைமைகள் இல்லை. சில நாடுகளிலேயே இந்த நிலைமைகள் காணப்படுகின்றன. அவற்றை தவிர்ப்பதற்கு உரிய நாடுகளே நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டதாக கனடா உதயன் தனது பதிப்பில் தெரிவித்துள்ளது.

http://www.seithy.co...&language=tamil

வீட்டை ஓடிப்போய் அலரிமாளிகையில் நின்றுகொண்டு சொல்வார் போலை "பிருத்தானியாவில் புலிகள் மீளக்கூடிவிட்டார்கள். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடு பட்டிருக்கிறார்கள். அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிருத்தானிய அரசை எச்சரித்திருக்கிறேன்" என்று.

புது டெல்கிக்கும், லண்டனுக்கும் பிளேன் எடுத்து போவதால். இரண்டுக்கும் இடையில் எவ்வளவு தூரம் என்றது மகிந்தாவுக்கு தெரிந்திருக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.