Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய வழிபாட்டிடங்களை அமைக்க யாழ் மாநகராட்சியின் அனுமதி தேவை: யாழ் மேயர் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-mayor-jogeswary-150news.jpg

யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் புதிய மத வழிபாட்டிடங்களை அமைக்கும் போது மாநகர சபையின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்று யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார். இலங்கை பௌத்த சாசன, மதவிவகார அமைச்சின் அண்மைய சுற்றறிக்கை ஒன்றின் பிரகாரமே இந்த அறிவிப்பை தான் வெளியிட்டுள்ளதாக யாழ் மேயர் கூறியுள்ளார்.

புதிதாக வரக்கூடிய மத வழிபாட்டிடங்கள், குறித்த பிரதேசத்தின் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே, அப்படியான மத நிறுவனங்களை அமைக்கும் போது உள்ளூராட்சி சபையின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்று அரசாங்க சுற்றறிக்கை கூறுவதாகவும் அவர் கூறினார்.

அனைத்து மத நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், ஏற்கனவே இது குறித்த உத்தரவு இருந்தாலும், கடந்த காலங்களில் அவை சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் யாழ் மாநகர மேயர் கூறினார்.

http://www.seithy.co...&language=tamil

இவ விரைவில் நல்ல பணக்காரியாகப்போகிறா. விகாரைகளும், தெற்கில் இடிக்கபட்ட பள்ளிவால்சகளுக்கு பிரதிகளும் தான் கட்டுவ. வீட்டிலை வைரவர் சூலம் வைத்து கும்பிடுபவர்கள் இனிமேல் கைதாகலாம். (சம்பந்தர் சிங்க கொடி பிடிப்பதால் மன வருந்திதான் இப்போ இந்து கோயில் களுக்கு யாழ்ப்பாணத்தில் இடம் மறுக்கிறா. விகாரைகளுக்கு இடம் ஒதுக்குகிறா)

Edited by மல்லையூரான்

இவ்வாறான முடிவுகளை மற்றைய மாநகரசபைகளும் எடுக்கவேண்டும்.

சனநாயக ரீதியான இவ்வாறான முடிவுகளை சிங்களம் அடக்கவே திட்டமிடும். அதேவேளை நடக்கும் மாற்றங்களை சர்வதேசம் அவதானிக்கும், அதில் எமக்கு நிச்சயம் பயன் கிட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சில விடயங்களை மகிந்த அரசு மறைமுகமாக நடைமுறைப்படுத்துகின்றது. யாழ்ப்பாண மேயர், யாழ்ப்பல்லைக்கழகத் துணைவேந்தர், அரசாங்க அதிபர், வைத்தியசாலை நிர்வாகி போன்ற விடயங்களைதன்னால் கட்டுப்படுத்த முயலும்வகையிலும் தமது எண்ணங்களை நடைமுறைப்படுத்தவும் செய்கின்றார்கள்.

இவர்களைப் பார்த்தால் தெரியும். அனைவரும் மகிந்தவின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால் இதில் மகிந்த பங்கெடுக்காத தோற்றமே எமக்குத் தெரியும்... சிறிலங்கா அரசோடு நெருக்கமாக இருந்த இமல்டா சுகுமார், பெண்கள் மீதான வன்முறை, பற்றியும் சில நடவடிக்கைகளும் மேற்கொள்ள முயன்றபோது உடனே இடமாற்றம் செய்யப்பட்டார். இமல்டா சர, பிழை என்பது எல்லாம் இருக்க, மகிந்த இவர்களை இயக்குகின்றார் என்பதைப் புரிக.

கனடாவின் முதற்குடிகளுக்கு என்ன நடக்கின்றது. அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் சலுகைகள் அவர்கள் இருக்கும் பிரதேசங்களில் மட்டுமே பெற முடியும். சலுகைகள் என்பது இலவசமான பணவருவாய். வேலைக்கு; போகத் தேவையில்லை. அவர்களின் இடங்களில் ஒரு ரிம் கொட்டன் கூடக் கிடையாது. அங்கே கிடைக்கக்மூடியவை, போதைவஸ்துக்களும், மது மற்றும் வேறு பழக்கவழக்கங்கள்... தங்களின் சலுகைகள் இல்லாது போக அவர்கள் வெளியிடங்கள் சென்று முன்னேறவும் விரும்புவதில்லை.

எம் தமிழ் மக்களுக்கு அப்படியில்லை. சலுகைகள் ஒன்றும் இல்லை. ஆனால் இதர மற்றய விடயங்கள் வழங்கப்படுகின்றன. பாலியல், மது, போதைவஸ்து... சலுகைகளை வெளிநாட்டில் இருப்போர் பணங்களை அனுப்பிச் செய்து கொண்டிருககின்றார்கள்.

ஒரு இனத்தை மெதுவாக அழிப்பது எப்படி என்பதை, அல்லது தம் இனமாக எப்படி மாற்றுவது என்பதையும் இந்தச் சிங்களவனிடம் இருந்து தான் நாம் கற்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.