Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் பதவிக்கு கோத்தபாய – மகிந்தரின் அடுத்த திட்டம்.

Featured Replies

பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கு தற்போது அவரது பணிகளை செய்ய முடியாத வகையில் சுகயீனமுற்றிருப்பதால், அவருக்குப் பதிலாக கோத்தபாய ராஜபக்‌ஷவை அந்தப் பதவிக்கு நியமிக்க மகிந்தர் தீர்மானித்துள்ளார்.

டி.எம். ஜயரத்ன அண்மைக்காலமாக சிங்கப்பூர் மௌவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று தற்போது நாடு திரும்பியுள்ள போதிலும் அவருக்கு தமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என மருத்துவ நிபுணர்கள் மகிந்தருக்கு அறிவித்துள்ளனர்.

அமைச்சரவையில் மாற்றம் செய்ய மகிந்தர் அண்மைக்கால பலமுறை முயற்சித்தார். எனினும், பிரதமர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதில் ஏற்பட்ட நெருக்கடியால் அந்தத் தீர்மானத்தை அவர் தொடர்ந்து ஒத்திவைத்து வந்தார்.

எனினும், அடுத்த நடத்தத் திட்டமிட்டுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்து, அதன்போது பிரதமர் பதவியை கோதாபய ராஜபக்‌ஷவிங்கு வழங்க மகிந்தர் தீர்மானித்துள்ளார்.

மகிந்த ராஜபக்‌ஷ லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் (09) நாடு திரும்பியவுடன், மகிந்தவிற்கு நெருக்கமான சிலருடன் இதுகுறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் அரச வங்கியின் உயர் அதிகாரியொருவரும், சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலரும், மகிந்தரின் மைத்துனர் ஒருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனினும், இவர்கள் மீது எவ்விதத்திலும் நம்பிக்கை வைக்க முடியாது என மகிந்தர் இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், பசில் அல்லது சமல் ஆகியோரில் ஒருவரை பிரதமராக நியமிக்க ஷிரந்தி ராஜபக்‌ஷ உள்ளிட்ட, தனது மகன் நாமல் ராஜபக்‌ஷவிற்கும் விருப்பமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிக்க தான் எதிர்பார்த்திருந்த போதிலும், அவர் பாரிய ஊழல், மோசடிகளைச் செய்துள்ளதாக கோத்தபாய ராஜபக்‌ஷ, ஆவணங்கள் சிலவற்றைக் காண்பித்து தனக்கு விளக்கமளித்ததாக மகிந்தர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒருவரை நியமிக்கும் போது நாமல் ராஜபக்‌ஷவின் அரசியல் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருவரை நியமிக்க வேண்டாம் என இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரும் ஜனாதிபதியை அறிவுறுத்தியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட மகிந்தர் , கோதாபய ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிப்பதற்கு தனது மனைவியும், மகன்மார் மூவரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்‌ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்குப் பெயரிடப்பட்டுள்ள ஜனக பண்டாரவை நீக்கவிட்டு, கோத்தபாய ராஜபக்‌ஷவை நாடாமன்றத்திற்கு கொண்டுவந்து, அவருக்கு நகர அபிவிருத்தி, பௌத்த விவகார, கலாசார அமைச்சுப் பதவியை வழங்கி, பாதுகாப்பு பிரதியமைச்சராக நியமிக்க முதலில் நடவடிக்கை எடுப்பதென இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்திற்குப் பெயரிடப்பட்டுள்ள மாலனி பொன்சேக்கா, கமலா ரணதுங்க, ஜே.ஆர்.பி.சூரியப்பெரும, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோரையும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக விசுவாசமான சிலரை நியமிக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் மகிந்தர் இதன்போது தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவரை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் தான் எதிர்பார்த்துள்ளதாகவும் மகிந்தர் இதன்போது தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE/

:D :D :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.