Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஜேர்மனியில் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவாக நடைபெற்ற மாணவர் எழுச்சி நாள் 2012"

Featured Replies

யேர்மனியில் Berlin மற்றும் Hagen நகரங்களில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது . நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள் ,பொதுமக்கள் தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர் .

அத்தோடு Hagen நகரில் ஈழத்தமிழர்களின் சிறுவர்கள் அவல நிலை குறித்து யேர்மனிய மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் "அவர்களுக்கும் ஆசைகள் உண்டு" எனும் நிகழ்வும் நடைபெற்றது . அங்கே இவ் விடையம் சார்ந்த துண்டுப்பிரசுரம் மக்களுக்கு வழங்கப்பட்டு இளையோர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது .

புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வருகின்றனர் . கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வருகின்றது நாம் அறிந்த விடையமே .அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர்.

தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும் அத்தோடு நினைவுகொள்ளப்படும் .

301878_250005188436734_1929473924_n.jpg

550417_250005531770033_1970504994_n.jpg

181081_250005631770023_1317948899_n.jpg

536170_250005761770010_99659743_n.jpg

536170_250005761770010_99659743_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

கவனிக்கவில்லை.சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.