Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் சல்லடை போட்டு தேடுதல் செய்யும் இராணுவத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் சல்லடை போட்டு தேடுதல் செய்யும் இராணுவத்தினர்

பொதுமக்கள் மத்தியில் பீதி

முள்ளிவாய்க்கால் பகுதியை சல்ல டை போட்டு அங்குலம் அங்குலமாக இராணுவத்தினர் தேடிவருகின்றனர் என அப்பகுதியிலிருந்து கிடைத்த தகவல் தெரிவித்தன.யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிய பிற்பாடும், ஆன ந்தபுரம், சாலை, வலைஞர்மடம், புதுமாத்தளன்,இரட்டைமுள்ளிவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதியை இராணுவத்தினர் தொடர்ந்தும் கடும் தேடுதலுக்கு உள் ளாக்கி வருகின்றனர்.

இங்கே காணப்படும் மனித எலும்புக ளை உருக்கி உக்கவைக்க சில திரவங்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர். இதனைத் தவிர விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த இராணுவத் தளபாடங்கள், ஆயுதங்கள் மற்றும் படகுகளையும் இலங்கை இராணுவம் கண்டு பிடிக்க முனைப்பு காட்டி வருகின்றது.

இவர்கள் அனைத்து இடங்களையும் தோண்டிப் பார்த்து அங்கே புதையுண்டு கிடைக்கும் பொருட்களை நாளுக்குநாள் தோண்டி எடுத்து வருகின்றனர். இவற்றில் பெரும் பகுதியை இராணுவத்தினர், விற்பனை செய் தும் வருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில முக்கிய இடங்களுக்குத் தமிழ் மக்கள் செல்வதற்கு முற்றாகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளால் அரிசி ஏற்றி வரப்பட்டபோது கரைய யாதுங்கிய 100 மீற்றர் நீளமான கப் பல் ஒன்று காணப்படுகிறது.

வன்னிப் பகுதிகளுக்கு வருகை தரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் இதனைப் பார்ப்பதற்கு முண்டியடிப்பதைக் காணமுடிகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இதனைப் பார்வையிடச் செல்வதை ஏனோ இரா ணுவத்தினர் அனுமதிப்பதில்லை.

முஸ்லிம் மக்கள்கூட இதனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில் தமிழ் மக்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்துகின்றமை ஏன் என்று தெரியவில்லை. இதில் என்ன பாரபட்சம் என்று கேட்கின்றனர் தமிழ் மக்கள்.மேலும் இந்தக் கப்பலைப் பார்வையிடச் செல்லும் பெரும்பான் மையின மக்கள் கப்பலின் அருகில் சென்று சிறிதளவு மணலையும் தம்முடன் எடுத்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு மண் எடுக்கும் நிகழ்வுகள் புலிகளின் முக்கிய இடங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=28943

  • கருத்துக்கள உறவுகள்

திரவம் எல்லாம் ஊற்றி ஒன்றும் செய்ய முடியாது. கண்ணுக்குத்தெரியாத ஒரு தசைத் துணுக்கு போதும்.. ஒருவரை அடையாளம் காண்பதற்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.