Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் நிலஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும்!

Featured Replies

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சில போராட்டங்கள் நடந்துள்ளன. இனிவரும் காலங்களில்போராட்டங்கள் வெடிக்கும், ஆரம்பமாக அதன் நீட்சியாக எதிர்வரும் 26ம் திகதி முறிகண்டி ஆலயமுன்றலில் காலை 10மணிக்கு கவனயீர்ப்பு உண்ணாவிரதத்தை நடத்தவுள்ளோம் இதில் கட்சி வேறுபாடுகள்களைந்து, இன விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும், பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்அழைப்பு விடுத்துள்ளனர்.

உலக ஓட்டத்திற்கு தன்னையொரு மிகை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் இலங்கை அரசாங்கம் மறுபுறத்தில்,தமிழ் இனத்தின் சுயத்தை மெல்ல மெல்ல அழித்து காலக்கிரமத்தில் அந்த இனத்தையே இல்லாமல் செய்வதற்குரியநடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பாகமாகவே தமிழர் தாயப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள், தேவையற்ற இராணுவ ஆக்கிரமிப்புக்கள், பௌத்த மயமாக்கல் போன்றன அமைந்திருக்கின்றன.

உயர்பாதுகாப்பு வலயங்கள் என தாயகத்தின் வளம் சுரக்கும் நிலங்கள் முளுவதையும்ஆக்கிரமித்து

வைத்திருக்கும் இராணுவம் இன்று யுத்தம் முடிந்துள்ள நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் எதற்காக என கேள்விஎழுப்பப்பட்டுள்ள நிலையில் அவை, அபாயகரமான பிரதேசங்கள் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்என்றும், நேரத்திற் கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இதுபோதாதென்று புதிதாக யுத்தத்தின் பின்னர் புலிகள் இருந்தனர், புலிகளுக்கு விற்கப் பட்டவை, புலிகளின்பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டவை என வகைப்பாடுகளை போட்டுக் கொண்டு நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது.மறுபுறத்தில் தொழிலுக்காக என்று கூறிக்கொண்டு வந்து தங்கும் சிங்களவர்கள் சில நாட்களிலேயே நிரந்தரஉரிமை கேட்கின்றனர். கேட்டவுடனேயே அவை வழங்கப்படுகின்றன.

அது மட்டுமல்லால் அவர்கள் குடியேறும் பகுதிகளில் அரசாங்கத்தினதும், இராணுவத் தினதும், அரச

அமைச்சர்களினதும்,ஆதரவுடனும்,அனுமதி கடித்ததுடனும் விகாரைகள் முதற்கொண்டு பாடசாலைகள் வரைஅமைக்கப்படுகின்றன. இவை குறித்து எந்தக் கேள்வியும் இல்லை பதிலும் இல்லை. இந்நிலையில் எங்கள் இனம்பாரம்பரிய மாக வாழ்ந்த நிலங்களிலேயே அகதிகளாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றது.

இவற்றுக்கெதிராக போராடினாலோ, போராடத் தலைப்பட்டாலோ எம்மையொரு பிரிவினை வாதிகளாகவும்,ஆயுதவிரும்பிகளாகவும் உலகத்திற்குச் சொல்லும் அரசாங்கம் அதைக் கொண்டே தான் செய்துவரும்,அநியாயங்களை, இன அழிப்பை மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றது.

இதுபோக யுத்தம் முடிந்து 3வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையில், யுத்தகாலத்திலும், அதற்குப் பின்னரும்கைதுசெய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர் கள் குறித்து எந்தப் பதிலும் கிடையாது. இதுகுறித்து இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் அரசில் தலைமைகளுக்கும் கேட்கத் திராணியில்லை, இந்த நிலையில்ஆயிரமாயிரம் இளம் பெண்கள், பிள்ளைகள், குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

இது குறித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் தங்களுடைய இனத்தில் கடும் குற்றம் சுமத்திகைதுசெய்தவர்களையும் கூட மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளனர். ஆனால் சாதாரணமாக பற்றரி கொண்டுவந்தவர்கள் கூட விசாரணையின்றி சிறைகளில் உள்ளனர். எனவே எம்மையொரு அடக்கப்பட்ட, அடிமை இனமாகவேஅரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. சாதாரனமாக ஜந்தறிவு ஜீவன்கள் கூட தங்கள் இருப்பிடத்தில்,தன்னுடைய சுதந்திரப் பிரதேசத்திற்குள் நுழைந்து ஊறு விளைவித்தால் போராடுகின்றது. நாங்கள்;பாரம்பரியமான, பூர்வீகமான இனக்கூட்டம் மட்டுமல்ல, எப்போதும் சுதந்திரமாக வாழ்ந்த இனமும் கூட,எனவே தொடர்ந்தும் இந்த ஆக்கிரமிப்புக்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இனிவரும் காலங்களில் ஆக்கிரமிப்புக்கு எதிரான தொடர் போராட்டங்கள் வெடிக்கும், ஆரம்பமாக சிலபோராட்டங்கள் நடந்துள்ளன. அதன் நீட்சியாக எதிர்வரும் 26ம் திகதி முறிகண்டி ஆலய முன்றலில் காலை10மணிக்கு கவனயீர்ப்பு உண்ணாவிரதத்தை நடத்தவுள்ளோம் இதில் கட்சி வேறுபாடுகள் களைந்து, இன விடுதலைக்காகஅனைத்துத் தரப்பினரும், பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.

http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.