Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுகிப் போகும் குடாநாடும் - தனித்துவம் இழக்கும் தமிழர்களும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CanadaUthayan_articles150.jpg

[size=4]வடக்கையும் கிழக்கையும் இணைத்து வளமான ஒரு தனியரசை நிறுவி அதனை தொடக்கமாகக் கொண்ட தமிழர் தாயகத்தை அடைந்தவர்களாக ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்கள் அங்கீகாரம் பெற்ற ஒரு தேசத்தில் வாழ்வதற்கு நாம் கனவுகள் கண்டோம். அகிம்சை வழிப் போராட்டங்களை நடத்தி அடிகள் வாங்கியும் சிறைக்குள் சென்று சின்னாப் பின்னப்படுத்தப்பட்டோம்.[/size]

[size=4]கைகளில் ஆயுதங்களை ஏந்திய போராளிகளுக்குப் பின்னால் உணர்வுபூர்வமான அணிவகுத்து நின்று வெற்றியின் உச்சத்திற்கு சென்று பின்னர் வீழ்ந்தவர்கள் ஆனோம்.[/size]

[size=4]நாம் வீழ்ந்து கிடக்கும் ஒரு இனமாக உள்ளபடியால் உலகம் எம்மை அனுதாபத்தோடு பார்க்கின்றது. நமக்காக ஜனநாயக ரீதியில் இன்றும் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சாதாரணமான சிங்கள இராணுவச் சிப்பாய்களால் சிறுமைப்படுத்தப்படுகின்றார்கள். என்றும் எமது மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்ற இலங்கையின் பேரினவாத அரசு அதன் ஜனாதிபதியின் தலைமையில் தொடர்ந்து நமது இனத்தை கொடுமைப்படுத்தி வருகின்றது.[/size]

[size=4]இவ்வாறான தொடர்ச்சியான அடக்கு முறை ஆட்சியின் அடுத்த நடவடிக்கையாக நமது யாழ் குடாநாட்டின் காணி நிலங்கள் ஆட்சி செய்யும் கயவர்களின் காவலர்களாக உள்ள இராணுவத்தால் அபகரிக்கப்படும் அபாயம்; நமது சொந்த மண்ணை சூழ்ந்து கொண்டு வருகின்றது. கொழும்பிலிருந்து ஆட்சி செய்யும் பேரினவாத அரசுகளினால் அரசியல் ரீதியான நடவடிக்கைகளின் பலனாக இன ரீதியான பாதிப்புக்களை எதிர் கொண்ட நமது இனம் தற்போது இந்த இழப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.[/size]

[size=4]நமது குடாநாட்டிற்கு அழகு சேர்க்கும் பிரிவுகள் பலவுள்ளன. அதுவும் வலிகாமம் வடக்கு�� வலிகாமம் கிழக்கு போன்ற பிரிவுகள் வளமான செம்மண்ணைக் கொண்ட காணி நிலங்களைக் கொண்டவையாகும். காங்கேசன்துறை மயிலிட்டி போன்ற கிராமங்களில் இயற்கை வளமும் கடல் வளமும் கொட்;டிக் கிடக்கின்றது. நீர் வளமும் நில வளமும் கொண்ட இந்தப் பிரிவுகளிலிருந்து தான் நமது தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணி பறிப்பை கபடத்தனம் கொண்ட மகிந்தாவின் அரசு ஆரம்பித்து வைத்துள்ளது. இவ்வாறான காணி நிலம் பறித்தல் தொடர்பான அக்கிரமப் பணிகளுக்கு அரசின் நிர்வாக அதிகாரமும் இராணுவத்தின் அடக்குமுறை அதிகாரமும் இணைந்து பயன்படுத்தப்படுவதாக நமக்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]நமது வளம் மிகுந்த பகுதிகளான வலி.வடக்கு உயர்பாது காப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காணி நிலங்களை தமது அதிகாரபூர்வமான ஆட்சிப் பணிகளுக்காக வழங்குமாறு இராணுவம் கோரியிருக்கிறது. தற்போது அந்தப் பகுதிகளில் முழுமையாக நிலை கொண்டுள்ள இராணுவம்தான் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. இராணுவம் மற்றும் கடற்படையினரின் பயன்பாட்டுக்கே இவை கோரப்பட்டுள்ளன. இந்த பணிப்பை அரசாங்க நடைமுறையின்படி ஒரு கோரிக்கையாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டாலும்�� தர்மத்தின் அடிப்படையில் நோக்கினால் இது ஒரு பயமுறுத்தல் என்றே நாம் கருதுகின்றோம்.[/size]

[size=4]தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 23 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 7 ஆயிரத்து 410 ஏக்கரும்�� கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 370 ஏக்கரும் இதில் அடங்குகிறது.[/size]

[size=4]1990ஆம் ஆண்டு முதல் இராணுவம் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கின் சில பகுதிகளில் நிலைகொண்டுள்ளனராயினும் தற்போது இராணுவ ஆட்சியை வடக்கில் ஏற்படுத்தி மக்களை அடக்கியும் ஒடுக்கியும் நடத்துவதன் மூலம் இனிமேல் ஈழத்தமிழினம் அடக்குமுறையிலிருந்து விடுபட போராட்டங்களை நடத்துவதை அனுமதிக்காது தொடர்ச்சியாக சிங்கள ஆட்சியாளர்களாலும் இராணுவத்தாலும் அடிமைப்படுத்தப்படுகின்ற ஒரு இனமாகவே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள் போலும்..[/size]

[size=4]மேற்படி பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டதனால்�� மக்கள் மீளக்குடியமர்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேசத்தினுள் 18 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதியாகவும் உள்ளடங்குகின்றன. இந்தப் பகுதிகளுக்குள் மீளக்குடியமர்வதற்கு 7 ஆயிரம் குடும்பங்கள் வரை ஏற்கெனவே விண்ணப்பித்துவிட்டு மீளக்குடியமர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற நிலையில் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் இந்த அறிவிப்பானது நமது மக்களை தற்கொலை செய்வதற்கு தூண்டுவது போலவே காணப்படுவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகத் தலைவர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.[/size]

[size=4]எம்மைப்;; பொறுத்தளவில் வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆரம்பமாகியுள்ள இந்த காணி நில அபகரிப்பு தொடருமானால் தமிழர்களின் பண்பாட்டு மற்றும் கலாச்சாரத்தின் பொக்கிசமாக கருதப்பட்ட நமது யாழ் குடாநாடு குறுகிப் போய் இறுதியில் நமது மக்கள் கடலுக்குள் சென்று குதிக்கும் நிலைக்கே தள்ளப்படுவார்கள் என்பதும் அதிக தூரத்தில் இல்லை என்றே நாம் கருதவேண்டியுள்ளது.[/size]

[size=4]நமது மக்களிடமிருந்து பறிக்கப்படும் காணி நிலங்களில் வெறும் மண் மட்டுமா உள்ளது?. செல்வம் மிதக்கும் விளை நிலங்கள் அதற்குள் அடங்குவன. அத்தோடு எத்தனை பாடசாலைகள் எத்தனை ஆலயங்கள் எத்தனை அழகியதும் உறுதியானதுமான இல்லங்கள்.. எல்லாமே இழந்தவர்களாக நமது இனம் மடியப்போகின்ற ஒரு யுகம் அங்கு தொடரக்கூடாது.[/size]

[size=4]யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்திலும் இந்த காணி நிலம் பறிக்கும் சூழ்ச்சி பலம் சேர்க்கும் பல விடயங்கள் இடம்பெறுவதாகவும்�� அதற்கு அங்குள்ள சில தமிழ் பேசும் அதிகாரிகளும் துணை நிற்பதாகவும் அறியப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் இராணுவத்தினர் தாம் தற்போது நிலைகொண்டுள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளை உள்ளடக்கி நிரந்தரப் பாதுகாப்பு வேலி அமைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பார்க்கும் போது தற்போது உயர் பாதுகாப்பு வலயத்தை உள்ளடக்கிய நமது மக்களின் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காணி நிலப்பரப்பு இராணுவத்தின் பாவனைக்காக பறிபோகும் அபாயத்தை நாம் பார்க்கத்தான் போகின்றோமா?.[/size]

[size=4]இது இவ்வாறிருக்க யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நமது மக்களின் காணி நிலங்களைப் பறிப்பதன் மூலம் நம்மவர்களை சிறுபான்மையினர் ஆக்கி அதன் மூலம் ஏற்கெனவே 11 தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தற்போது 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளார்கள். தொடர்ந்த மகிந்த அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சியின்படி நமது தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தால் நமக்காக குரல்;;; கொடுக்கக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆக குறையும் அபாயமும் தோன்றியுள்ளது.[/size]

[size=4]இவ்வாறு நமது மக்களின் காணி நிலங்கள் பறிக்கப்பட்டு தொடர்ந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் பறிக்கப்பட்டால் நமது தமிழ் இனம் தனது தனித்துவத்தை இழந்ததும் தாழ்வுற்றதுமான ஒரு இனமாக கூனியும் குறுகியும் குரல்களை இழந்ததாக தாழ்த்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் என்று நாம் எச்சரிக்கின்றோம்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

இலங்கைத்தீவே அழியணும் என்று ஒரு தமிழன் நினைச்சால் போதும் இலங்கை அழிந்து விடும். எம்மை அரக்கராக மாற்றுவதும் மனிதனாக வாழ விடுவதும் இந்த உலகம், சிங்களவன் கையில் தான் உள்ளது. யூத இனத்தை அழித்த கிட்லராகவோ யப்பானில் நாசாகார குண்டை போட்டு அழித்த அமெரிக்காவாகவோ எம்மை மாற்ற வேண்டிய தேவை வெகுவிரைவில் வருகிறது. எம்மினம் அழிந்தாலும் பறவாய்இல்லை . சிங்களவன் என்ற இனம் இந்த உலகத்தில் இருக்க கூடாது என்று தமிழனை நினைக்க வைக்க வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.