Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும்

Featured Replies

[size=6]தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும்[/size]

[size=4]வி. ஜீவகுமாரன்[/size]

[size=2]

[size=4]அனைத்துலக தமிழ் மகாநாட்டில் தமிழ் இலக்கியமும் சமூகமும் இன்றும் நாளையும் என்பது பற்றி கட்டுரை எழுதுவது என்பது பூதத்தை பிடித்து பானைக்குள் அடக்கும் முயற்சியாகும். இலக்கியத்தின் ஒவ்வோர் பிரிவு பற்றி எழுதுவதாயின் அவையே பெரிய கட்டுரைக் கோப்புகளாக அமைந்து விடும். எனவே இலங்கை மற்றும் இலங்கையர் புலம் பெய்ர்நது படைக்கும் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும் எவ்வாறு இருக்கின்றது அல்லது இருக்கப் போகின்றது என்பதனை பின்ணினைப்புகளுடன் கூடிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாக அன்றி நிஜ உலகின் தரிசனங்களை மட்டும் வைத்து அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.[/size][/size]

[size=2]

[size=4]நேற்று – இன்று – நாளை நாம் உண்ணும் ஒவ்வோர் அரிசியும் அரசியலால் நிர்ணயிக்கப்படுகின்றது என்பது போல எங்கள் இலக்கியமும் அரசியல் காரணிகளாலும் அதனைத் தொடர்ந்து தனி மனித விருப்பு வெறுப்புகளாலும் நிர்மாணிக்கப்படுகிறது. இதனை சுருக்கமாக புறச்சூழல் தனி மனிதனின் அகச்சூழலில் ஏற்படும் தாக்கத்தின் பிரதிபலனாக புனைவு இலக்கியங்கள் பிறக்கின்றன.[/size][/size]

[size=2]

[size=4]தொன்று தொட்ட காலம் தொடக்கம் நடைபெறும் படையெடுப்புகள் அதன் பிரதிபலனாக சமூகத்தில் அல்லது தனிமனித வாழ்வில் ஏற்படும் அல்லது திணிக்கப்படும் மாற்றங்கள், அதனை உள்வாங்க அல்லது மறுதலிக்க அல்ல அதனுடன் இசைவாக்கமடைய மனித குலம் நிர்ணயிக்கப்படும் பொழுது புதிய வாழ்வியல்முறைகள் தோன்றுகின்றன. அந்த புதிய வாழ்வியலில் இருந்து புதிய இலக்கியங்கள் பிறக்கின்றன. இதற்கு மிக நல்ல உதாரணமாக புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என ஒரு புதிய வடிவம் தோன்றியிருப்பதை சொல்லலாம். அல்லது முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்பு இன்று பெருமளவில் இலங்கையில் சரி, இந்தியாவில் சரி, மற்றைய நாடுகளில் சரி தோன்றியுள்ள பல புதிய வடிவங்களைச் சொல்லலாம்.[/size][/size]

[size=2]

[size=4]அதேவேளை முள்ளிவாய்க்கால் அவலம்வரை புலம் பெயர்ந்த நாடுகளில் தோன்றிய அல்லது அங்கீகரிக்கப்பட்ட இலக்கியங்கள் பக்கச்சார்புடமை கொண்டவையாகவும் அகுதில்லையாயின் அவை சாதிப்பிரதிஸ்டை செய்யப்பட்ட இலக்கியங்களாகவே அமைந்திருந்தன என்பதையும் மனவருத்தத்துடன் இதில் பதில் கொள்ளல் வேண்டும். இதே நிலை வடக்கில் இருந்து எழுந்த இலக்கிய வடிவங்கள் பற்றி தெற்கில் பேசமுடியாத நிலயும் தெற்கில் உருவாகிய இலக்கிய வடிவங்கள் பற்றி வடக்கில் பேச முடியாத நிலை இருந்தமையும் கண்கூடு. கருத்துச் சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரமும் இல்லாமை நிலவிய அல்லது நிலவும் நாட்டில் இவ்வாறான இலக்கியங்கள் தான் தோன்ற முடியும்.[/size][/size]

[size=2]

[size=4]இதையும் தாண்டி இலக்கியம் படைக்க முற்பட்டோரின் இலக்கியங்கள் வாழுகின்றன. ஆனால் இலக்கிய வாதிகளைக் காணவில்லை என்பதே வேதனையான விடயமாகும். புலம் பெயர்ந்த நாடுகளிலோ விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் போர்க்கால அரசியலை மையப்படுத்தி பக்கசார்பு கொண்ட பத்திரிகளினால் தம்மை வெளிக்காட்டிக் கொண்டவர்கள் அல்லது பாம்பு தின்னும் ஊரில் நடுமுறி உண்ணவிரும்பியர்களின் எழுத்து வடிவங்கள் அரசியலநிலை மாறிய பொழுது அவர்களின் இலக்கியக் கொள்கைகளே அவர்களுக்கு விடமாக மாறி அவர்களின் திறமையையும் ஆர்வத்தையும் அழித்து விட்ட துர்பாக்கியமும் நேற்றைய -இன்றைய இலக்கிய வடிவங்களைப் பார்க்கும் பொழுது புரிந்து கொள்ளலாம்.[/size][/size]

[size=2]

[size=4]இவ்வாறான அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையேதான் இன்றைய இலக்கிய உலகையும் நாளைய உலகத்தைப் பற்றிய கணிப்பீடையும் பார்க்க வேண்டி உள்ளது. நேற்று – இன்று நாளைய உலகத்தைப் பற்றி எதிர்வு கூறுவதற்கு முன்பாக நேற்றைய இலக்கிய உலகுடன் இன்றைய உலகை ஒப்பிடுதல் ஆரோக்கியமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.[/size][/size]

[size=2]

[size=4]வறுமையில் ஒரு பெண் வெயிலில் காயவைத்த ”தீட்டுத்துணி” காயமுதல் ஈரத்துடன் கட்டிக் கொண்டு செம்மொழி மாகாநாட்டு ஊர்வலத்தை தாண்டியபடி அவசர அவசரமாக பள்ளி செல்லுதலை கவிதை நடையிலும், இன்னோர் பெண் வன்னியில் தன் பாவாடையை கிழித்து ”தீட்டுத்துணி”யாக பாவித்ததையும் கிழிந்த பாவாடையுடன் நிற்கும் மகளை தாய் சந்தேகிக்கும் கொடுமையை சிறுகதைவடிவில் இன்றைய இலக்கியம் பாடு பொருளாக முன் வைக்கும் பொழுது அது எந்த வகையிலும் புதுமைப் பித்தனின் பொன்னகரத்தில் காட்டப்பட்ட வறுமையை விட குறைவாகத் தோன்றவில்லை. இவை இரண்டுமே வறுமையின் வெளிப்பாடே – ஒன்று சமூக அமைப்பு கொடுத்த வறுமை. மற்றது போர் கொடுத்த வறுமை. இரண்டுமே வலிக்கின்றது. புதுமைப்பித்தனின் வண்டிக்காரன் மனைவி சோரம் போன பொழுது புதுமைப்பித்தன் என்ற ஆசிரியர் வெளியே வந்து ”கற்புக் கற்பு என்கின்றீர்களே. இதுதான் ஐயா பொன்னகரம்” எனச் சொல்லி சமுக அமைப்பின் மீது தன் கோபத்தை சொல்லி வண்டிக்காரன் மனைவிக்காக அனுதாபத்தை வேண்டி நிற்கின்றார்.[/size][/size]

[size=2]

[size=4]ஆனால் இன்றைய இரு பெண்களையும் படைத்த ஆசிரியர்கள் தங்களை வெளியில் காட்டாமலே அந்த அனுதாபத்தை அப்பெண்களுக்கு பெற்றுக் கொடுக்கின்றார்கள். போர் என்று வரும் பொழுது பெண்கள் சிறைப்பிடிப்பு, மானபங்கப்படுத்தல், பாலியல் வல்லுறவுகள், விதவைப் பெண்களின் பெருக்கம், அதனை ஒட்டிவரும் கலாச்சாரப் பிறழ்வுகள் என்பன அன்றைய இலக்கியங்களில் இருந்து அவை இலக்கியங்களுக்கு ஒரு அழகியயலைக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது இன்று பக்கத்துக் கிராமத்தில் அல்லது அண்டை வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியாக அவை வேதனையை அள்ளிக் கொடுக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]நிஜம் வயிற்றில் புளியை வார்க்கின்றது. கற்பனைக் கதைகளோ என எண்ணிய அன்றைய கதைகள் இன்றைய நிஜவாழ்வில் நடைபெறும் பொழுது ”யாவும் கற்பனை அல்ல” என முடிவுரை போடத் தேவையில்லாத புனைவு இலக்கியங்கள் எங்கள் மத்தியில் பெருகிக் கொண்டு வருகின்றது. மேலும் இதிகாசங்கள் காப்பியங்கள் வழிவந்த எம் புனைவு இலக்கியங்களில் மனிதரின் பாத்திர படைப்புகள் வெள்ளை கறுப்பு என கோடுபோட்டுக் காட்டப்பட்டே வந்தது. இராமனுள் சீதையைச் சந்தேகித்த ஒரு கணவனும் இராவணுள் ஒரு சிவபக்தனும் இருந்த பொழுதும் பத்தினி விரதனான இராமனும் பிறன்மனைவiயைக் கவர்ந்த இராவணனும் தான் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டனர். இவற்றையே நேற்றைய பல கதைகளிலும் நாவல்களிலும் காணக்கூடியதான இருந்தது. ஆனால் இந்த நிலை மாறி வெள்ளையும் கறுப்பும் கலந்த மானிடர்களின் தோற்றுவாய்கள் இன்றைய பல இலக்கியங்களில் காணப்படுகின்றன.[/size][/size]

[size=2]

[size=4]உதாரணமாக உடல்பசியைத் தீர்ப்பதற்கு கோயிலில் திருடிய பணத்துடன் பரத்தையின் வீட்டிற்கு செல்லும் ஒருவன் அவள் தாலிகட்டியிருப்பதைப் பார்த்ததும் அவளின் கையில் பணத்தைக் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வது போன்ற மனிதாபிமானம் மிக்க பல பாத்திரங்கள் இன்றைய புனைவு இலக்கியங்களில் வருதல் பெரும் ஆரோக்கியமே. இப்பிடிச் செய்ததினால் கோயிலில் திருடிய பாவம் கழுவப்பட்டு விட்டதா என பல பழைமை வாதிகள் கோசம் போட்டார்கள். இங்கு பாவவிமோசனம் அல்ல கருப்பொருள். ஒரு திருடனுக்குள்மறைந்து கிடந்த மனிதாபிமானம் – அவ்வளவே. மொத்தத்தில் புனைவு இலக்கியங்கள் என்பன வாசகனை கனவுலகத்தில் சஞ்சரிக்கும் நிலையில் இருந்து மாற்றி நிஜ உலகின் இயக்கங்களுடன் உலாவ விட்டிருப்பது தான் இன்றைய இலக்கியத்தின் சிறப்பு எனக் கருதலாம்.[/size][/size]

[size=2]

[size=4]இந்த புத்துணர்வு தமிழிற்கு முன்பாக பிற மொழிகளில் அதிகமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இன்றைய தமிழ் இலக்கிய சஞ்சிகைகளில் பெரும்பான்மையாக இடம் பெற்றிருப்பது தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த கௌரவமே. பாடல்கள் வடிவில் அல்லது காப்பிய வடிவில் இருந்த இலக்கியவடிவங்கள் பாரதி காலத்தில் எளிமைநடைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் சிறுகதை நாவல்களை பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட முன்னொரு காலத்தில் என்ற தொனியுடன் தான் பல காலமாக பயணப்பட்டுக் கொண்டு வந்தது. இந்த நடை இன்று உடைக்கப்பட்டு துரித கதியில், எளிய சொற்கள் கொண்டு, சின்ன சின்ன சம்பாசணைகளில் கதை சொல்லும் உத்தி பெருகின் கொண்டுட வருகிறது.[/size][/size]

[size=2]

[size=4]ஒரு பெண்ணை அல்லது ஆணை வர்ணித்தும் அவர்களை ஓவியமாகத் தீட்டியும் வாசகர் மனதில் ஒரு தோற்றத்தை உண்டு பண்ணாமல் அவர்களின் சம்பாசணையூடான அவர்களின் தோற்றத்தை வாசகர் மனதில் உருவாக்கும் பண்பு இன்று அதிகமாக காணப்படுவது. ஒரு வாசகனின் கற்பனைத்திறனுக்கு ஏற்ப கதையின் நாயகன் அல்லது நாயகி வாசனுக்குள் உருப்பொருகின்றாள். அது மிக ஆரோக்கியமான நிகழ்வாகும். புதிய கருப்பொருள்கள், புதிய வடிவங்களுடன் சேர்ந்து உடற்கூற்றியலை உவமான உவமேயங்களாகப் பயன்படுத்தும் எழுத்து நடையும் கவிதைகளில் அதிகம் பாவிக்கப்படும் தன்மை இன்றைய இலக்கியத்தில் இடம் பெற்றுக் கொண்டு வருகிறது. அவ்வாறே நதிமூலம் ரிசிமூலம் என இருந்த பல இல்லற உறவுகள் மஞ்சள் பத்திரிகைகளில் இருந்து தாவி வெள்ளைத்தாள்களில் பதிவு செய்யப்படுகிறன.[/size][/size]

[size=2]

[size=4]மிகவும் நாசூக்காக சொல்லப்பட்ட விடயங்கள் இன்று ஆடை களைந்து சொல்லப்படுகிறது. இதனை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது மறுதலித்தல் என்பது ஒரு வாசகனின் விருப்பு வெறுப்பு சம்மந்தபட்ட விடயம் என விவாதித்தாலும் இவையும் சேர்ந்ததுதான் இன்றைய இலக்கிய உலகம் என ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கணனியுகம் என்பது இன்றைய நு}ண்றாண்டில் மனித குலத்தில் மாற்றிவைத்திருக்கம் ஒரு சுனாமி என்று சொன்னால் மிகையாகாது. பல பள்ளங்கள் மேடாகியிருக்கின்றன. அதே வேளை பல மேடுகள் பள்ளங்களாகியுள்ளன. இதில் குறிப்பிடப்படவேண்டியது கணனிகளில் வலம் வரும் எண்ணனற்ற இலக்கியப் பத்திரிகைகள் ஆகும். நு}ல் வடிவில் தமது படைப்புகளை கொண்டுவர இலயலாதவர்களுக்கு அதனை கால காலத்திற்கு பதிவு செய்தும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த வடிவம் உதவுகிறது.[/size][/size]

[size=2]

[size=4]குறிப்பாக இலங்கையில் இருந்து வெளிவந்த ”இருக்கின்றோம்” என்ற சஞ்சிகை இப்பொழுது இணைத்தளப் பத்திரிகையாக உருமாறி உள்ளது. இவ்வாறு புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்;து எத்தனையோ பத்திரிகைகள் வெளிவருகின்றது. மேலாக தனிப்பட்டவர்களின் ”புளொக்”கள் (டீடழபள). இவற்றின் தரம் அல்லது தரமின்மை என்பது ஆசிரியர் – வாசகர் சம்மந்தப்பட்ட விடயம் எனினும் இந்த விஞ்ஞான உலகம் ஒரு புதிய ஒரு களத்தை படைப்பாளிகளுக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றது என்பது மிகவும் ஆரோக்கியமான விடயம்.[/size][/size]

[size=2]

[size=4]இந்த கணனியின் வேகத்தில் கைக்குள்ளேயே முழு உலகமும் அடங்கி விட்ட நிலையில் தனி மனித வாசிப்புக்குரிய நேரம் மிக மிகச் சுருங்கி விட்டது. அல்லது வாசிப்பின் நேரத்தை பேஸ்புக்ஸ, ருவிற்றர், யுரியூப் என பல காரணிகள் களவாடி விட்டது என்பது உண்மை. மிக வேகமாக உருண்டு செல்லும் 21ம் நு}ற்றாண்டில் கலாச்சாரத்தின் முட்களுடன் போட்டிபோட்டு ஓடும் மக்களின் வாழ்வில் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாது வீதியோரத்தில் வாங்கி உண்ணும் மக்டொனால்ஸ் உணவுபோல ஆரோக்கியமற்ற ஒரு பக்க இரு பக்க ஒரு நிமிடக் கதைகள் என சஞ்சிகைகளின் பக்கங்களை நிரப்பும் குறைப்பிரவசமான இலக்கியவடிவங்கள் பயத்தை தருகின்றன. படைப்பும் வாசிப்பும் ஒரு வண்டியின் இரு சக்கரங்கள் போல. வாசிப்பில்லாத படைப்புகள் வண்டியின் குடையைச் சாய்த்து விடும் என்ற அச்சத்தின் குரல்கள் ஆங்கேங்கே கேட்கத் தொடங்கி இருக்கின்றன –[/size][/size]

[size=2]

[size=4]கொலை வெறிப் பாடலுக்கு எழும் அச்சங்கள் போல. இன்று – நாளை இவ்வாறான இன்றைய ஆரோக்கியமானதும்; ஆரோக்கியமற்றதுமான இலக்கியங்கப் பிரசவங்களின் இடையே இலக்கியக உலகத்தை பயப்பிடுத்திக் கொண்டிருப்பது இலக்கியவாதிகளுக்கு அளிக்கப்படும் விருதுகள், அல்லது அவற்றைப் பெறுதலில் இலக்கியவாதிகளுக்குள் நிலவும் ஆரோக்கிமற்ற போட்டிகள் இன்னும் இத்தியாதி இத்தியாதிகள். என்றும் இல்லாதவாறு மிகச்சிறிய விருதில் இருந்து சாகித்ய மற்றும் ஞானபீட விருதுகள் வரை எவர்க்கு எந்த விருதுகள் அளிக்கப்படும் பொழுது அதற்குப் பின்னால் ஒரு சொல்லப்படாத ஒரு சேதி இருப்பதும் அது பின்னால் வெளியாவதும் இன்று அடிக்க நடந்து கொண்டு வருகின்றது.[/size][/size]

[size=2]

[size=4]கடந்த ஆண்டு இலங்கையில் சரி, இந்தியாவில் சரி வழங்கப்பட்ட சாகித்திய விருதுகள் என்றாலும் சரி, மற்ற மற்ற நாடுகளில் வழங்கப்பட்ட விருதுகள் ஆயினும் சரி இந்த சலசலப்புகளில் இருந்து தப்பவில்லை. எதற்காக இந்த அவரசங்கள்? இந்த அங்கீரங்கள் உங்களுக்கு எதனைப் பெற்றுத் தந்து விடப் போகின்றது. வாழ்நாள்சாதனையாளர் விருதைத் தவிர மற்றைய எந்த விருதும் அளிக்கப்படும் பொழுதும் எந்த புனைவு இலக்கியத்திற்கு ஒரு பரிசு கொடுக்கப்படுன்றதோ அந்த புனைவு இலக்கியம் ஒரு சாதாரண வாசகனை நெகிழப் பண்ண வேண்டும். மற்றைய எழுத்து வடிவங்களை பல்கலைக் கழகங்கள் அங்கீகரிக்கும் தரத்தை எட்டியிருக்க வேண்டும். அவ்வாறில்லாத படைப்புகள் எத்தனையோ பரிசுகள் பெறும் பொழுதுதான் எதிர்காலத்தைப் பற்றிய இலக்கியப் பயம் வருகின்றது. பரிசு பெற்ற தரம் குறைந்த ஒரு நு}ல் ஒரு வாசகனுக்கு உந்துணர்வைக் கொடுக்குமாயின் அவனின் எதிர்காலப் படைப்புகளும் அதே தரத்தில் தான் இருக்கும்.[/size][/size]

[size=2]

[size=4]காலத்தால் அழியாத படைப்புகள் என்பது விருதுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை என மீண்டும் மீண்டும் இலக்கிய உலகத்தினருக்கு யாரோ ஒருவர் இடித்துரைத்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் நாளைய இலக்கிய உலகு இன்றையதை விடவும் இன்றும் சிறப்பாக மிளிரும். இனியும் மேiலைநாட்டு இலக்கியங்களையும் இலக்கிய கர்த்தாக்களையும் முன்னுதாரணங்களாகப் பார்க்காமல் அவர்கள் எங்கள் கீழைத்தேய படைப்புகளை பார்க்கும் வகையில் எங்கள் இலக்கியப் பயணங்கள் அமைய வேண்டும். மேலைத்தேயங்களுக்கு எங்கள் கணனியின் அறிவு இன்று பயன்பெறும் பொழுது…[/size][/size]

[size=2]

[size=4]தினம் தினம் எயர் லங்காவிலும் எயர் இந்தியாவிலும் மூளைகள் ஏற்றுமதியாகும் பொழுது ஏன் எங்களால் நல்ல இலக்கியங்களை உருவாக்க முடியாது. மேலைநாடுகளில் எழுத்து என்பது முழுநேரத்தொழிலாக அங்கீகரிக்கப்பட்டருக்கிறது. அதற்குரிய வருமானம் அரச நிறுவனங்களால் அளிக்கப்படுகின்றது என்ற வாதங்கள் எல்லாம் முன் வைக்கப்படுகின்றது. ஆனால் பாரதிக்கு யார் சம்மானம் கொடுத்தது? வறுமையின் பிடியில் இருந்த வீட்டில், உணவு ஆக்குவதற்கு வைத்திருந்த ஒரு சிறங்கை அரிசியை எடுத்து குருவிகளுக்குப் போட்டு விட்டு அதன் அழகைப் பார்த்து கவி எழுதியவன் தானே அவன்? அரசியலுக்கு விலைபோகாத சுயமும், தன்னம்பிக்கையும், யதார்த்தமும், நேர்மையும் எழுத்திலும் எழுதுபவன் வாழ்விலும் இருந்தால் கனதியான இலக்கியங்கள் பிறக்கும் எண்பதில் ஐயமில்லை. நாளை அது முடியும்! எம்மேல் நாமே நம்பிக்கை வைத்தால்!![/size][/size]

[size=2]

[size=4]வி. ஜீவகுமாரன்[/size][/size][size=2]

http://www.alaikal.com/news/?p=109224[/size]

நவீன இலக்கியங்கள் பற்றி நாம் சிறிது சிந்திக்கத்தான் வேண்டும். மறைந்து வரும் புள்ளினங்கள் போல, வாசிக்கக் கூடிய அதேநேரம் ஒரு கருத்தை ஆணி அறைந்தாற்போல மனதில் பதிய வைக்கும் இலக்கியங்கள் (அல்லது கட்டுரைகளும்) அருகி வருகின்றன. உண்மையில் மொழி மீது பற்றுக் கொண்டவர்களுக்கு மிக வருத்தமளிக்கும் செய்தி இதுவாகும்.

இலக்கிய படைப்பாளி, திறனாய்வாளர் மற்றும் வாசகர் என்போர் ஒன்றில் இருந்து ஒன்று வேறாக்க முடியாத ஒரு சங்கிலிக் கோர்வையால் பிணைக்கப் பட்டிருப்பவர்கள். இம்மூவரும் சமூகத்தின் பிரதிபலிப்புக்களே.

படைப்பாளி நிறைய கற்றறிந்தவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தன் சமூகம் மீதான நேர்மையான, அதேநேரம் ஆழமான பார்வை இருந்தாலே போதும். சமூகத்தில் மற்றவர்கள் கவனிக்க தவறும் அல்லது சொல்லாது விடும் விடயங்களை, நுணுக்கமாக அதன் பொருள் சிதைவுறாமல் தந்தாலே பாதி வெற்றிதான். போர்க்காலம் படைப்பாளிகளின் பொற்காலம் எனலாம். சமூகத்தை உருக்கி புடம்போடுவது போர்க்காலங்களில தான். மாற மறுக்கும் மனித மனங்கள் போர்க்காலங்களில் இளகித்தான் போகின்றன. காமம், கொலை என்பதற்கு அப்பால் நாம் இதுவரை கண்டும் கேட்டும் அறிந்திராத வகையில் மனித நேயம், நெறிமுறை என்பன வெளிக்கொண்டு வந்திருக்கலாம்.

திறனாய்வாளன், படைப்பாளியின் படைப்பையும் அவனின் ஆக்கசக்தியையும் அலசி ஆராய்பவன். இங்கும் நேர்மை மிக அவசியமாகிறது. எடுத்துக்கொண்ட கருப்பொருள், சொல்ல வந்த வடிவம், சொல்லிய முறை, நுணுக்கம், அதன் பயன் தரு தன்மை, வேறு வடிவங்களில் வந்த ஒப்பிடக்கூடிய படைப்புக்கள், அவற்றில் இருந்து வேறுபடும் தன்மை, வாசகர் வட்டம் ... போன்ற சகல பரிணாமங்களிலும் படைப்பை அலசி ஆராய்வது முக்கியம். ஒரு படைப்பையும், அதன் திறனாய்வையும் வைத்துக்கொண்டு ஒரு வாசகன் ஓரளவு திடமான முடிவொன்றை பெறலாம்.

வெறுமனே கணினியில் நேரத்தை செலவு செய்வதிலும் பார்க்க, தரமான ஒரு நூலை வாங்கி படிப்பது உடல் நலத்துக்கும் நல்லது; சமூகத்திற்கும் நல்லது. வாசிக்கும் பழக்கத்தை சிறுவர் முதியவர் என்றில்லாது சகலரும் ஊக்குவிக்க வேண்டியது ஒரு சமுதாய கடமை. இன்று தமிழ் என்று கூகிளாண்டவரிடம் கேட்டுப் பாருங்கள். குப்பைகளை கொணர்ந்து கொட்டுவார்.

உருக்குலைந்து போயுள்ள சமூக கட்டமைப்பை ஓரளவேனும் தாங்கிப் பிடிக்க கூடிய கணியங்களில் இலக்கியமும் ஒன்று. தரமான படைப்புக்களை தாருங்கள். இளைய சமுதாயத்தை வாசிக்க செய்யுங்கள். பல சமூக மாற்றங்களை உருவாக்கியது கொடுவாட்கள் அல்ல. கருமையான பேனாக்கள் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.