Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோரிக்கைகளை ஏற்காவிடின் கிழக்குத் தேர்தலில் தனி வழி; அரசை மிரட்டுகிறது முஸ்லிம் காங்கிரஸ்

Featured Replies

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ், இந்த ஒப்பந்தத்தை அரசு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவேண்டுமென அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து அவர் அரச முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் அடிப்படையில் முஸ்லிம் மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசு உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதென்றும், அதற்கு அடிப்படையாக பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதென்றும் இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைய, அரசுடன் செய்துகொள்ளவேண்டிய ஒப்பந்தத்தைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முழுவீச்சில் ஈடுபட்டது.பெரும்பாலும் இன்று இந்த ஒப்பந்தத்தின் நகல் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படும். பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளருடன் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளை நடத்தவுள்ளது.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கமையவும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்தல், 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம், குறிப்பாக மாகாணங்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களின் தேவை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரின் வகிபாகம் என்பன இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றிரவு சுடர் ஒளியிடம் தெரிவித்தன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், வெறுமனே ஒரு சாதாரண விடயமாக இருக்காது. இவற்றை ஏற்றுக்கொள்வதாக அரசு எங்களுக்கு எழுத்துமூலம் உத்தரவாதம் தரவேண்டும். ஏனெனில், நாங்கள் இந்த அரசுடன் இணையும்போது எந்த ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவில்லை. எனவே, முஸ்லிம் சமூகத்தின் மீதான நெருக்குவாரங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது அரசுடன் எம்மால் வெறுமனே குளாவிக்கொண்டிருக்க முடியாது. இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு உடன்படாவிட்டால் கிழக்கில் தனித்துப் போட்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. சமூகத்தின் பிரச்சினைகளை மறந்துவிட்டு நாங்கள் செயற்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே அரசுடன் நிற்கும். முஸ்லிம் மக்கள் நிற்கமாட்டார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் எம்மிடம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் இந்தத் தீர்மானம் அரசின் மூத்த உறுபினர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது.

http://onlineuthayan.com/News_More.php?id=365201196506433995

  • தொடங்கியவர்

8e765397-42a7-434e-b819-4c1daf635b52_S_secvpf.gif

வடபகுதியிலும் குத்தி சிங்களத்துடன் ஒட்டிக் கொண்டு நிற்கிறது, தேர்தல்களிலும் நிற்கிறது!!! எப்போவாவது ஒருதரமாவது ஒரு கோரிக்கையை முன் வைத்ததா???? என்னத்தையாவது பெற முயற்சித்ததா???

.... எரியும் அடுப்பில் உள்ள சட்டிக்குள் இருந்து தப்பி அடுப்புக்குள் விழுந்த நிலைதான் குத்திகளுக்கு!! ... குத்தி செய்து விட்ட / குக்தியை கொண்டு செய்யப்பண்ணிய அனைத்து கொலைகளுக்குமான ஆவணங்கள் சிங்களத்திடம் ... அடுப்பில் இருந்து தப்ப முடியுமா???????

[size=4]முஸ்லீம் மக்கள் ஏமாறும் நிலையில் உள்ளனர். காரணம் அவர்களின் முஸ்லீம் காங்கிரசின் எதிர்பார்ப்பையும் தலைமைகளையும் சிங்களம் தெரிந்து அதற்கு ஏற்ப வெற்றிகரமாக நகர்வுகளை சில காலமாக மேற்கொண்டு வருகின்றது. இதனால் அண்மைக்காலமாக முஸ்லீம்களால் எதையும் பெற முடியவில்லை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கோரிக்கைகளை ஏற்காவிடின் கிழக்குத் தேர்தலில் தனி வழி; அரசை மிரட்டுகிறது முஸ்லிம் காங்கிரஸ்

நம்ம ராமதாஸ் மாறி சும்மா பலம் பலம் இருக்கு என்று கூவுவதை விட அவரை எல்லாரும் கழற்றி விட்ட மாறி இவர்களை ஒரு தடவை தனியாக விட்டு என்ன நிலவரம்.... உண்மையான பலம் என்ன? என்று பார்க்கலாம்..

டிஸ்கி:

அங்கிட்டு கழற்றி விட்டால் கூத்தமைப்பிடம் வந்துவிடுவார்கள் :rolleyes: :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.