Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிடம் கோரி வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் - அவுஸ்திரேலியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

minister_chrisbowen-150.jpg

[size=4]புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.[/size]

[size=4]இலங்கைக் கடற்பரப்பில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்வது அல்லது திருப்பி அனுப்புவதில் பிரச்சினை இருக்காது என கிறிஸ்பொவுன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]எனினும், சர்வதேச கடற்பரப்பில் அல்லது அவுஸ்திரேலிய கடற்பரப்பில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் போது சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

இந்த வருடத்திலிருந்து வருபவர்களை திருப்பி அனுப்புவதே ஈழத் தமிழருக்கு செய்யும் நன்மையாக இருக்கும்.

ஏனெனில் தாயகத்தில் சிங்கள அரச பயங்கரவாதிகளின் அனுசரணையுடன், புலம்பெயர் தமிழரின் பண உதவியுடன் இப்பவும் நாட்டை விட்டு ஓட என்னும் இளைஞர்களின் தொகை அதிரிக்கிறது!

சிங்கள அரச பயங்கரவாதிகளின் இன அழிப்புக்கு பெரும்துணை செய்யும் நாட்டை விட்டு ஓடும் மனப்பான்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக வந்த பெண் ஒருவரின் கருத்தினை அறிந்தேன். முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்தபின்பு இராணுவ தடுப்புமுகாம்களில் இருக்கும் போது இரவு நேரங்களில் இராணுவத்தினர் திருமணமாகாத பெண்களை தேடி வருவார்கள். இதனால் திருமணமாகாத பெண்களும் ,விதவைகளும் அங்கு இருக்கும் ஆண்களில் ஒருவரை கணவராக நடிக்கும்படி கேட்பார்கள். இராணுவத்தினரால் இரவு வேளையில் பிடிக்கப்படும் பெண்களின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். சில மணித்தியாலங்களின் பின்பு துப்பாக்கி சத்தம் கேட்கும். இதனால் பல பெண்கள், ஆண்கள் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். அந்நாடுகளில் அகதி தஞ்சம் கேட்கமுடியாது. மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் சில தமிழர்கள் திருப்பி சிறிலங்காவுக்கு அனுப்பி இருக்கிறது. இலங்கை அரசோ நாட்டை விட்டு கள்ளமாக சென்றதினால் இவர்களை புலிகளாகப் பாவித்து சித்திரவதை செய்து வருகிறது. உயிர்தப்ப படகுப்பயணம் ஆபத்தானது என்று தெரிந்தும் இவர்களைப் போன்றவர்கள் அகதிகளாக அவுஸ்திரெலியா வருகிறார்கள்.

அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக வந்த பெண் ஒருவரின் கருத்தினை அறிந்தேன். முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்தபின்பு இராணுவ தடுப்புமுகாம்களில் இருக்கும் போது இரவு நேரங்களில் இராணுவத்தினர் திருமணமாகாத பெண்களை தேடி வருவார்கள். இதனால் திருமணமாகாத பெண்களும் ,விதவைகளும் அங்கு இருக்கும் ஆண்களில் ஒருவரை கணவராக நடிக்கும்படி கேட்பார்கள். இராணுவத்தினரால் இரவு வேளையில் பிடிக்கப்படும் பெண்களின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். சில மணித்தியாலங்களின் பின்பு துப்பாக்கி சத்தம் கேட்கும். இதனால் பல பெண்கள், ஆண்கள் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். அந்நாடுகளில் அகதி தஞ்சம் கேட்கமுடியாது. மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் சில தமிழர்கள் திருப்பி சிறிலங்காவுக்கு அனுப்பி இருக்கிறது. இலங்கை அரசோ நாட்டை விட்டு கள்ளமாக சென்றதினால் இவர்களை புலிகளாகப் பாவித்து சித்திரவதை செய்து வருகிறது. உயிர்தப்ப படகுப்பயணம் ஆபத்தானது என்று தெரிந்தும் இவர்களைப் போன்றவர்கள் அகதிகளாக அவுஸ்திரெலியா வருகிறார்கள்.

எந்த பொருத்தமும் இல்லாத, உண்மைக்கு புறம்பான கட்டுக் கதை!

சிங்கள ராணுவ பயங்கரவாதிகளின் தடுப்பு முகாமில் ஆண்களையும் பெண்களையும் தனித் தனியாகவே வைத்திருந்தனர்!

பெண்கள் தங்கிய முகாம்களில் சிங்கள ராணுவ பயங்கரவாதிகளின் தொல்லைகள் பல விதங்களில் இருந்தது! அறைகளை கூட்டச் சொல்வது, தேநீர் போட்டுக் கொடுப்பது, அலுவலக கோப்புகளை பராமரிப்பது, போன்ற பல வேலைகளை வாங்குவது போன்ற போர்வையில் அவர்கள் மீது அத்துமீறி நடக்க முயற்சித்தனர் - இதில் அப்பாவியான சில பெண்களை சிங்கள ராணுவ பயங்கரவாதிகள் பலவித பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர் என்பது உண்மை தான்.

ஆனால் இப்போது தப்பியோடுபவர்கள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படவர்கள், அச்சுறுத்தல்கள் இருந்தவர்கள் இல்லை!

தாய்மண்ணில் பொருளாதரத்தை தமிழர்கள் கைகளில் தக்கவைக்க முயற்சி செய்யும் பலர் கடுமையாக நொந்து போயுள்ளனர். காரணம் அவர்கள் பலவித தொழில் நிறுவனங்களை நிறுவி சிரமப்பட்டு இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் பயிற்சிகளைக் கொடுத்து வேலைத்தளங்களை மேம்படுத்தும் வேளையில், 10 - 12 மாதங்களில் சொல்லிக்கொள்ளாமல் பல இலட்சங்களைக் கட்டி நாட்டைவிட்டு ஓடும் இளைஞர்கள் தொகை அதிகரிக்கிறது. இவர்களில் பெரும்பாலனவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் - இறுதி யுத்தத்தால் பாதிக்கப்படாதவர்கள்! கடந்த மாதம் யாழ், வன்னி, வவுனியாவில் சந்தித்த நூற்றுக்கணக்கான தொழில் தருனர்கள் (சிறுதொழில் அதிபர்கள்) புள்ளிவிபரங்களுடன் சொல்லிய விபரம். அண்ணளவாக 25 தொளிலார்களைக் கொண்ட ஒவ்வொருவரும் சராசரியாக இந்த வருடத்தில் இதுவரை 3 பேரை இழந்துள்ளனர்!

எனவே இந்தப் போலிக் கதைகளைச் சொல்லி தப்பி ஓடுவதை முற்றுமுழுதாக நிறுத்தவேண்டும்! இம்மாதிரியான கதைகளை நம்புபவர்களும் - தீர விசாரித்து உண்மையை அறியவேண்டும்.

அத்திவாரத்தை சிதைத்துக் கொண்டு ஒரு தேசத்தை கட்டியெழுப்ப முடியாது!

சில உண்மைகள் கசப்பாக இருக்கும்!

தமிழின விடுதலைக்கு செயற்பட்டு சிங்களப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, தமிழ் மக்கள் மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக வெளியேறியவர்களை இந்த "ஓடிப்போபவர்கள்" கூட்டத்துக்குள் அடக்க முடியாது என்பதை அறிவேன்!

Edited by ஆராவமுதன்

சரியான கருத்துத்தான் அமுதன். இருந்தாலும் எப்படியோ வந்து சேர்ந்தவர்கள் திருப்பியனுப்பப்படும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எப்படித் தீர்ந்து போகும்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு சொன்ன இராணுவத்தின் தடுப்பு முகாம் என்பது முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்த பின்பு பல முகாம்களில் எம்மவர்கள் இராணுவத்தினரால் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அம்முகாம்களில் ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். அவற்றில் இருந்து வந்த ஒருவரின் கதையினைத்தான் மேலே சொல்லியிருக்கிறேன். அப்படி நாட்டினை விட்டு வெளியேறிய பலர்கள் ஆசிய நாடுகளில் இன்னமும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நாட்டுக்கு திரும்பிச் சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பலர் வன்னி இறுதியுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தவர்கள். வன்னியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.

சரியான கருத்துத்தான் அமுதன். இருந்தாலும் எப்படியோ வந்து சேர்ந்தவர்கள் திருப்பியனுப்பப்படும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எப்படித் தீர்ந்து போகும்?

நல்ல கேள்வி இறைவன்!

முயற்சித்தால் இதற்கு தீர்வு உண்டு! ஆனால் திரும்பி வருபவர் தனது நாட்டை விட்டு ஓடும் திட்டம் தோல்வியடைந்த கவலையில் இவற்றை சிந்திப்பதில்லை! எப்படியாவது அங்கு தாகிவிட முடியுமா என்று மட்டும் தான் சிந்திப்பார்!

ஒருவர் திரும்பி வரும் நிலையில் அந்த நாட்டு தூதரகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அல்லது செஞ்சிலுவைச் சங்கம் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட சர்வதேச அமைப்புக்களின் நேரடிக் கண்காணிப்பில் குறைந்தது 5 வருடங்கள் இருக்கும் வகையில் சில ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும்! திருப்பியனுப்பும் நாடு இவற்றுக்கான எழுத்துமூல உறுதியை வழங்கவேண்டும்!! நிச்சயம் அவர்களுக்கு அந்த மனித நேயக் கடமை உண்டு! உத்தரவாதத்தை பெறுவது திரும்புவரின் முயற்சியாக இருக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.