Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் பொருளாதார வளர்ச்சி? - ஓர் பொய்...

Featured Replies

[size=6]வடக்கின் பொருளாதார வளர்ச்சி? - ஓர் பொய்...[/size]

[size=2]

[size=4]இலங்கைப் பொருளாதாரம் எட்டு சதவீதத்தினால் அதிகரித்த போதும் இதில், வட மாகாணம் 22% என்ற அதி உயர் பொருளாதார வளர்ச்சியினை சாதிக்க முடிந்துள்ளதாகஅமெரிக்க இராஜாங்க செயலாருக்கு இலங்கையின் வெளி விவகார அமைச்சர்ஜி.எல்.பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.[/size][/size]

[size=2]

[size=4]எனினும், இது பகுதியளவில் மட்டுமே உண்மையானது! என்பதுடன் அரசியல் தந்திரங்களிற்காக திரிவுபடுத்தி கூறப்பட்டுள்ளதாக இலங்கையின் பொருளாதாரப் பகுப்பாய்வாளரான கலாநிதி முத்துகிருஷ்னன் சர்வாநந்தா ஒன்லைன் உதயனுக்கு இன்று தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]இறுதியாக வெளியிடப்பட்ட மாகாண மட்டத்திலான உள்நாட்டு உற்பத்திக்கான தரவுகள் 2010ம் ஆண்டுக்குரியதாகவே காணப்படுகின்றன. இதில், 22.9% வளர்ச்சியினை வடமாகாணம் பதிவு செய்துள்ளதுடன், இதையடுத்தே ஏனைய மாகாணங்களின் வளர்ச்சிச் சாதணைகள் பதிவாகியுள்ளன.[/size][/size]

[size=2]

[size=4]எதுஎவ்வாறாயினும், மேற்படி வடமாணத்தின் பொருளாதார வளர்ச்சியினை ஓர் ஆச்சரியமான ஒன்றாக நோக்க முடியாது. காரணம், இது பேரளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாகாண மட்டங்களிலான விலைவாசி நிலமைகளைக் கருத்தில் கொள்கின்ற போது, மெய்யான பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படும். [/size][/size]

[size=2]

[size=4]இவ்வாறு இருக்க, வட மாகாணத்தின் பேரளவிலான வளர்ச்சி வீதத்தினை (22%), விலை மட்ட அதிகரிப்பினை நீக்கிக் காட்டுகின்ற இலங்கையின் மெய்யான தேசிய வளர்ச்சி வீதத்துடன் (8%) அமைச்சர்ஜி.எல்.பீரிஸ் எவ்வாறு ஒப்பிட்டார்? எனத் தெரியவில்லை என கலாநிதி முத்துகிருஷ்னன் சர்வாநந்தா ஒன்லைன் உதயனுக்கு தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]நீண்ட காலம் பாதிப்புக்குள்ளாகி பல வரையறைகளுடன் இயங்கி வந்த பொருளாதாரதம் ஒன்று, அதன் கட்டுடைந்து திறந்துவிடப்படுகின்ற போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைகின்றமை ஆச்சரியமான விடயமல்ல. இதையே 2002ல் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட பின்னரும்இ 2009ல் போர் முடிவடைந்த பின்னரும் அவதானிக்க முடிந்தது.[/size][/size]

[size=2]

[size=4]ஆயினும், மேற்படியான வளர்ச்சி என்பது விசாயம், கைத்தொழில் துறைகளில் சிறப்பாக, தனியார் துறைகளினால் உந்தப்பட்ட பொருட்கள், சேவைகளின் உற்பத்தி அதிகரிப்பாக இடம் பெறவில்லை. குறிப்பாக, வடமாகாணத்தின் மொத்த உற்பத்தியில் சுமார் அரைப் பங்கினை அரச சேவைகளே பங்கெடுக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின்னர் இவற்றிலும் குறிப்பாக பொது நிர்வாகம் பாதுகாப்பு உள்ளிட்ட அரச சேவையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கமே வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியாக வெளி வந்ததுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]இறுதியாக வெளியிடப்பட்ட (2010 – யூன்) குடிசன மதிப்பு புள்ளி விபரத்திணைக்களத்தின் வருமான மற்றும் செலவு ஆய்வு அறிக்கையின் படி, இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய (மிகக் குறைந்த தலா வருமானம் கொண்ட) மாகாணமாக வடமாகாணம் இனங்காணப்பட்டுள்ளது. இது கூட கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு ஆகிய மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை உள்ளடக்காது பெறப்பட்ட ஆய்வு முடிவு என்பதுடன், இவற்றின் நிலமைகளையும் உள் வாங்குகின்ற போது, வடமாகாண மக்கள் மிகவும் கீழான நிலையில் உள்ளமை வெளித் தெரிய வரும் என பொருளாதார பகுப்பாய்வாளரான கலாநிதி முத்துகிருஷ்னன் சர்வாநந்தா மேலும் தெரிவித்திருந்தார்.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=824051071118244095

  • தொடங்கியவர்

[size=4]மேலே கூறப்பட்டது ஒரு பொருளியல் வல்லுனரால். இவரின் தகவலில் ஏதும் தவறுகள் உண்டா?? [/size][size=1]

[size=4]உண்மை என வைத்தா[/size][size=4]ல், சிங்களம் உண்மையான தரவுகளை மறைத்து, ஒரு போலியான ஆனால் புலம்பெயர் மக்களின் பொருளாதார வளத்தை சுரண்டும் வடக்கின் மின்மினி பொருளாதாரத்தை காட்டி நிற்கிறது. [/size][size=4]இதிலும் சிங்களவனிடம் ஏமாறப்போகின்றோமா? [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.