Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆணையோ அல்லது பெண்ணையோ தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பாத பெண் ஒருவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விநோதச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

அறிவாளிங்க பூறா england ல தான் இருக்குறாங்க இல்லை MR குருவிவாள்

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1920ஆம் ஆண்டுகளின் மத்தியில் எழுந்த இந்த அமைப்பு இந்தியத் தேசிய விடுதலைத் தலைவர்களை யாழ்ப்பாணம் வரவழைப்பதிலும், இந்தியப் பாணியில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதிலும் அக்கறை காட்டினர். குறிப்பாக, யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸினர் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இலங்கையை இணைத்து விடுவர் என்ற அச்சம் பிரித்தானியரிடம் 1920ஆம் ஆண்டுகளின் மத்தியில் தோன்றத் தொடங்கியது.

இவ்வமைப்பினர் தென்னிலங்கை வாழ் சிங்கள இடதுசாரிகளையும், விடுதலை விரும்பிகளையும் தம்முடன் இணைக்கும் நடைமுறைச் செயற்பாடுகளைக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைக்கும் முயற்சியில் காங்கிரஸினர் ஈடுபட்டனர். இப்பின்னணியில் தான் அரசியல் யாப்பு திருத்தம் செய்வதற்கென டொனமூர்க் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக திட்டமிடப்படுகின்றது.

மகாத்மா காந்தியின் இலங்கைக்கான விஜயம் பிரித்தானியரின் மனதை பெரிதும் பாதிக்க ஏதுவாய் அமைந்திருக்கும். டொனமூர்க் குழுவினர் இலங்கையில் காலடி வைத்த நாளும், மகாத்மா காந்தி காலடி வைத்த நாளும் ஒன்றாகவே இருந்தது. 1927ஆம் ஆண்டு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்தான் மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைத்தது. அப்போது மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க இளைஞர் காங்கிரஸ் அன்றைய நிலையில் 1,00,000 ரூபா திரட்டி இந்திய தேசிய போராட்டத்திற்கான நிதியாகக் கையளித்தது.

1920ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஏற்பட்டு வந்த இத்தகைய போக்கைக் கண்ட பிரித்தானியர் தமது பிரித்தாளும் கொள்கையில் ஓர் அடிப்படை மாற்றத்தைச் செய்யத் தொடங்கினர். இதுவரை காலமும் அளவால் பெரிய இனத்தை ஆள்வதற்கு அளவால் சிறிய இனங்களை அணைக்கும் போக்கை கைக்கொண்டு வந்த பிரித்தானியர் இப்போது அளவால் பெரிய சிங்கள இனத்தை அணைத்து இந்தியாவிற்கு எதிரான மனப்பாங்கை சிங்களவரிடம் வளர்க்கவும், இந்திய விடுதலைப் போராட்டத்துடன் இலங்கையை இணையவிடாது தடுக்கவும் திட்டமிட்டனர். இதற்காக தமிழருக்கு எதிராக சிங்களவர்களைத் திருப்திப்படுத்தும் அரசியல் திட்ட ஏற்பாடுகளைச் செய்ய பிரித்தானியர் ஆரம்பித்தனர்.

இதன் முதற்புள்ளியே 1931ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த டொனமூர் யாப்பாகும். சர்வஜன வாக்குரிமை என்பதன் பெயரில் எண்ணிக்கையால் பெரிய சிங்கள இனத்தின் கையில் இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தமிழ் பேசும் இனத்திற்கு எதிராக பிரித்தானியர் தாரை வார்த்துக் கொடுக்கத் தொடங்கினர். ஆனால் இதற்கான இந்து சமுத்திரம் தழுவிய பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கைப் பின்னணியை தமிழ்த் தலைவர்கள் யாரும் விளங்கி இருக்கவில்லை. சேர் பொன்.இராமநாதன், வைத்திலிங்கம் துரைசுவாமி, ஹன்டி பேரின்பநாயகம் போன்ற எத்தலைவர்களும் இந்து சமுத்திரம் சார்ந்த பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கைப் பின்னணியை சிறிதும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இதுவரை இலங்கைத் தீவில் பெரிய இனமாகக் கருதப்பட்டு வந்த சிங்கள இனத்தவரை இந்தியாவுடன் இணைத்துப் பார்த்து சிறிய இனமாகவும், சிறிய இனமான தமிழரை தென்னிந்தியாவுடன் இணைத்துப் பார்த்து பெரிய இனமாகவும் கருதும் சூழல் உருவானது. அளவால் பெரிய சிங்கள இனத்தை சிறிய இனமாகவும், அளவால் சிறிய தமிழினத்தை பெரிய இனமாகவும் பார்த்த ஒரு முரண் நிலையிலிருந்தே தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறையை பிரித்தானியர் செய்தனர்.

இது சிங்கள இனத்திற்கு முற்றிலும் சார்பானதாக அமைந்து, எதிர்காலத்தில் தமிழனத்தின் மீது சிங்கள இனம் புரியக் கூடிய அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் வழிகோலிக் கொடுத்த விதமாய் அமைந்தது. தமிழினத்தை இந்தியாவுடன் சார்ப்புபடுத்தி பார்த்ததன் விளைவே தமிழினம் மீதான அனைத்து வகை ஒடுக்குமுறைகளுக்கும் அடிப்படையாய் அமைந்தன.

இதன்பின்பு பிரித்தானியரால் உருவாக்கப்பட்டு 1947ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியல் யாப்பு இன்னொரு படி மேற்சென்று தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான யாப்பை உருவாக்கி சிங்களத் தலைவர்களிடம் கையளித்தது.

1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடையப் போகும் பின்னணியில் இந்த யாப்பு 1945 - 1946ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவை நவகாலனித்துவ தேவையின் பொருட்டு கட்டுப்படுத்துவதற்கு இலங்கையில் இராணுவ, கடற்படைத் தளங்களை அமைக்க பிரித்தானியா திட்டமிட்டது.

திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத் தளத்தையும், கட்டுநாயக்காவில் விமானப்படைத் தளத்தையும் அமைப்பதற்காக சிங்கள இனத்திற்கு முற்றிலும் சார்பான அரசியல் யாப்பை அமைக்க பிரித்தானியா முடிவெடுத்தது. மேற்படி இவ்விரு தளங்களையும் சிங்களத் தலைவர்களிடம் இருந்து பெறுவதற்காக தமிழ் மக்களின் நலன்களை தாரை வார்க்கும் அரசியல் யாப்பை டி.எஸ்.செனநாயக்கா உடனான இரகசிய உடன்பாட்டின் மூலம் சோல்பரிக் குழுவினர் உருவாக்கினர்.

சோல்பரிப் பிரபு, பிரித்தானியரான பேராசியர் ஐவர் ஜெனிங்ஸ் என்போர் ஒரு பக்கமாகவும், டி.எஸ்.செனநாயக்க, ஒலிவர் குணதிலக என்போர் மறு பக்கமாகவும் நின்று தமிழருக்கு எதிரான இந்த சூழ்ச்சி யாப்பை 1947ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். ஒருபுறம் ஐவர் ஜெனிங்ஸூம் மறுபுறம் ஒலிவர் குணதிலகவும் இச்சூழ்ச்சி நாடகத்தின் பிரதான சூத்திரதாரிகளாக இருந்தனர். சோல்பரியும், டி.எஸ்.செனநாயக்காவும் உத்தியோக முறையற்ற சந்திப்பின் மூலம் இந்நாடகம் இறுதி செய்யப்பட்டது.

ஆனால், தமிழ்த் தலைவர்கள் இதனை சிறிதும் புரிந்திருக்கவில்லை. முதலாவதாக தமிழ்த் தலைவர்களிடம் வெளியுறவுக் கண்ணோட்டம், சர்வதேசக் கண்ணோட்டம் என்பன சிறிதும் இருந்திருக்கவில்லை. மாறாக பிரித்தானிய எஜமான்களை நீதிமான்களாகக் கருதி சிங்களவருக்கு எதிரான தமது முறைப்பாடுகளை மன்றாட்டமாக அப்பிரித்தானிய எஜமானர்களிடம் முன்வைத்தனர். எய்தவனிடம் போய் அம்பைக் குறை சொல்லி முறையிடும் நிலையில் தான் தமிழ் தலைவர்களின் அரசியல் கண்ணோட்டம் இருந்தது. இங்கு மீண்டும் இந்தியாவுடன் தொடர்புபடுத்தியே அப்பாவித் தமிழினம் பலியிடப்பட்டது.

அதேவேளை, ஒரு தசாப்தத்திற்குள் இதில் இன்னொரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி சிங்களத் தலைவர்கள் மேலும் ஒரு படி வெற்றியைச் சம்பாதித்தனர். பிரித்தானியாவுக்கு இலங்கையில் தளங்கள் வழங்கும் ஒப்பந்தத்தை டி.எஸ்.செனநாயக்கா செய்த போது அவரது அரசாங்கத்தில் இரண்டாவது ஸ்தானத்தில் இருந்தவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா ஆவார். எனவே பண்டாரநாயக்காவின் நடைமுறை ஆசியுடன் தான் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது.

ஆனால் டி.எஸ்.செனநாயக்காவிற்கு பின் அவரது மகன் டட்லி செனநாயக்கா தான் அடுத்த பிரதமர் என்ற இரகசிய ஒப்பந்தம் சோல்பரிக்கும், டி.எஸ்.செனநாயக்காவிற்கும் இடையில் செய்யப்பட்டிருந்தமை பண்டாரநாயக்காவுக்கு தெரிய வரவே, பண்டாரநாயக்கா அரசாங்கத்தைவிட்டு வெளியேறி 1951ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சி எனும் புதிய கட்சியை ஆரம்பித்தார்.

பிரதமர் டி.எஸ்.செனநாயக்கா விபத்தில் இறந்த போது இலங்கையின் மகாதேசாதிபதியான சோல்பரி விடுப்பில் இங்கிலாந்தில் இருந்தார். எனவே அவர் டட்லியை பிரதமராக்குவதான தனது இரகசிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக தனது விடுப்பை இரத்துச் செய்துவிட்டு அவசர அவசரமாக கொழும்பு திரும்பினார். அப்போது தான் வரும்வரை பிரதமராக யாரையும் நியமிக்க வேண்டாமென பதில் மகாதேசாதிபதிக்கு அறிவித்துவிட்டு இலங்கை திரும்பிய சோல்பரி பல மூத்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் இருக்கின்ற போது அவர்களைத் தவிர்த்து இளையவரான டட்லி செனநாயக்காவை பிரதமராக நியமித்தார்.

அப்போது கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்த சேர்.ஜோன்.கொத்தலாவல தானே பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பில் முற்றிலும் மண்ணைத் தூவியது போல சோல்பரி - டி.எஸ். செனநாயக்கா இரகசிய ஒப்பந்தம் செயற்பட்டது. இதன்பின்பு கொத்தலாவல போர்க்கொடி தூக்கியது வேறு கதை.

இப்பின்னணியில் வைத்து பிரித்தானியரையும், அவர்களது தளங்களையும் பார்த்த பண்டாரநாயக்கா வேறு விதமாக யோசிக்கலானார். அதாவது செனநாயக்க குடும்பத்தின் பலமாக இத்தளங்கள் இருப்பதையும், இத்தளங்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுப்பதன் மூலம் ஒரு புறம் செனநாயக்க குடும்பத்தைப் பலவீனப்படுத்தவும், மறுபுறம் இந்தியாவை திருப்திப்படுத்தவும் இவை உதவும் என நம்பினார்.

இந்த வகையில் பிரித்தானியத் தளங்களை அகற்றுவதற்கான கோரிக்கையை முன்வைத்து இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றார். அதேவேளை இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றதன் மூலம் தமிழருக்கு எதிரான சட்டங்களையும் மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் இலகுவாக செய்யலாம் என நம்பினார். இதன் மூலம் 1956 ஆம்ஆண்டு பிரதமாரான பண்டாரநாயக்கா ஒரு புறம் பிரித்தானிய தளங்களை அகற்றவும், மறுபுறம் தனிச்சிங்கள சட்டத்தை நிறைவேற்றவும் தலைப்பட்டார். தொடர்ந்து தமிழருக்கு எதிரான அரசியல் மற்றும் 1958ஆம் ஆண்டு இனப்படுகொலைகள் என்பவற்றிலும் ஈடுபட்டார்.

இப்போதுகூட தமிழ் தலைவர்கள் இத்தளங்கள் அகற்றல் தொடர்பான சர்வதேச அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை. மாறாக பிரித்தானியத் தளங்களை அகற்ற வேண்டாமென சி.சுந்தரலிங்கம் பிரித்தானிய மகாராணியருக்கு தந்தி அனுப்பினார். இந்த இடத்தில் தமிழ்த் தலைவர்கள் பலரும் அப்பாவித்தனமாக பிரித்தானியாவுக்கு அனுதாபமாகவே செயற்பட்டனர்.

ஒரு சிங்களத் தலைவன் தளத்தை அமைக்கும் ஒப்பந்தந்தின் வாயிலாக தமிழருக்கு எதிரான அரசியல் யாப்பை பிரித்தானியரிடம் பெற்றார். இன்னொரு சிங்களத் தலைவன் தளத்தை அகற்றுவதன் வாயிலாக இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்று தமிழருக்கு எதிரான தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும், மேற்கொண்டு ஒடுக்குமுறைகளைப் புரிவதிலும் வெற்றி கண்டார். அதாவது தளத்தை அமைத்ததன் வாயிலாகவும் தமிழர் தலைகளை சிங்களத் தலைவர்கள் கொய்தார்கள். அதேவேளை தளத்தை அகற்றியதன் வாயிலாகவும் தமிழர் தலை கொய்யப்படுதலை இலகுவாக்கினார்கள்.

அதேவேளை இங்கு தமிழ்த் தலைவர்கள் இந்தியா மீது பற்றுக் கொண்டவர்களாய் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமது அறியாமையினால் பிரித்தானியர்களை பாதுகாவலர்களாகவும் நினைத்தார்கள். இத்தலைவர்களின் பிற்கால நடவடிக்கைகள் இதனைத் தெளிவாக உணர்த்தும். இந்தியாவுக்கும், அதன் பகைமை நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு யுத்தங்களிலும் தமிழ்த் தலைவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் தீவிர ஆதரவாளர்களாகவே செயற்பட்டனர்.

உதாரணமாக, 1962ஆம் ஆண்டு இந்தோ - சீன யுத்தம் நிகழ்ந்த போது தமிழ் மக்களது பெரும் தலைவராக இருந்த தந்தை செல்வா என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தனது ஆதரவுத் தந்தியை அனுப்பிவிட்டு, இந்திய யுத்த வீரர்களுக்கென நிதியும் திரட்டி அனுப்பினார். அத்துடன் ஒரு தொண்டர் படையை திரட்டும் முயற்சியிலும் ஆர்வம் காட்டினார்.

இக்காலத்தில் இலங்கையின் பிரதமராய் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வெளிப்படை அர்த்தத்தில் நடுநிலைமை என்று கூறிக்கொண்டார். அத்துடன் 1971ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தோ - பாகிஸ்தான் யுத்தத்தின் போது பாகிஸ்தானியப் படையினரை இலங்கைக் கூடாக பங்காளதேசுக்கு செல்ல அனுமதித்தார். பின்பு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையின் மூலமே இது நிறுத்தப்பட்டது.

பொதுவாக சிங்களத் தலைவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அடிமனதில் இந்திய எதிர்ப்புவாதிகளாகவே உள்ளனர். இந்தியாவின் பகைமை நாடுகளுடன் தம் நல்லுறவைப் பேணும் அதேவேளை, இந்தியாவின் காலகட்ட நெருக்கடிகளைப் பயன்படுத்தி இந்தியாவை கையாளும் தந்திரத்தை சிங்களத் தலைவர்கள் எப்போதும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சிங்களத் தலைவர்கள் தேர்ந்த சர்வதேசக் கண்ணோட்டத்துடனும், மதிநுட்பம் மிக்க சூழியல் அறிவுடனும் சர்வதேச அரசுகளைக் கையாளும் அதேவேளை, தமிழ்த் தலைவர்கள் வெறுமனே உணர்ச்சி வசப்பட்டவர்களாயும் - சரியான சர்வதேசக் கண்ணோட்டம் அற்றவர்களாயும் - அரசுகளுக்கு இடையேயான சூழியலைக் கையாளும் திறனற்றவர்களாயும் விட்டில் பூச்சி அணுகுமுறையை சர்வதேச அரசியலில் பின்பற்றும் பரிதாபம் வரலாற்றில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ponguthamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னாது.....ஜெயலலிதாக்கு பெயில் கிடைக்கலியா......

ஐயகோ நான் என் செய்வேன்.....இரத்தத்தின் இரத்தங்களா don't worry நாங்க சுப்ரீம் கோர்ட்டு மட்டும் போய் வலைய போடுவம்.....ஜாமீன் சிக்குதான்னு சாரி கிடைக்குதான்னு பாப்பம்.....

அதுவரைக்கும் வீட்ல இருந்து கைய வெட்டி அம்மாவை விடுதலை செய் என்று இரத்தத்தால எழுதி எல்லாம் காமடி பண்ணாம இருங்க கண்ணுங்களா......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு சரியான மாற்றுத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினி மட்டுமே என்ற கோஷத்துடன், குறிக்கோளுடன் பிஜேபி ரஜினியை மொய்க்கத் தொடங்கியுள்ளதாம்.//////////

ரஜனியை முதல்வரா ஏற்றுக்கொள்ளுகின்ற அளவுக்கு ஒன்றும் தமிழக மக்கள் முட்டாள்கள் கிடையாது.....

ரஜனியை சமாளிக்க பா ம க என்ற கட்சியே காணும்......உதாரணம் பாபா திரைப்படத்தின் போது நடந்தவை.......

அதையும் மீறி ரஜனி அரசியலுக்கு வந்தால் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைமை தான்.....

இதை நான் சவால் விட்டே சொல்கின்றேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக வக்கீல்களைப் பார்த்தால் யாருமே சட்டத்தை முழுமையாக தெரிந்தவர்கள் போலவே இல்லை. கத்துக்குட்டிகள் போல நடந்து கொண்டுள்ளனர். ஒரு நீதிபதி ஒத்திவைத்த வழக்கை சீக்கிரமாக விசாரியுங்கள் என்று நீதிமன்ற பதிவாளரைப் போய் வலியுறுத்தியுள்ளனர். அவர் எப்படி நீதிபதியின் பணியில் தலையிட முடியும். இது கூடவா வக்கீல்களுக்குத் தெரியாது

முதுபெரும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறியபோது, நான்கு பேருக்கும் சேர்த்து ஜாமீன் கோரியது பெரும் தவறு. அதிலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் சுதாகரனுக்குப் போய் ஜாமீன் கேட்டது மிகப் பெரிய தவறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினைகளையெல்லாம் படு கேவலப்படுத்தி வருகிறார்கள் இந்த முட்டாள் தொண்டர்கள். குறிப்பாக காவிரி பிரச்சினையை இவர்கள் சிறுமைப்படுத்தி போஸ்டர் ஒட்டுவதைப் பார்த்து விவசாயிகள் கொதித்துப் போய் உள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன் பத்திரிகையில் பணியாற்றும் மூத்த நிருபரின் இருதய அறுவைச் சிகிச்சைக்கான முழுச் செலவையும் ஏற்று உயிரைக் காப்பாற்றினார் தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன்.

நன்றிகள் ஐயா....ஊடகத்தில் இருப்பவன் என்ற முறையில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'லிங்கா'வை முடித்து விட்டு பாஜகவில் சேரப் போகிறாராமே ரஜினி?

ஹா ஹா இதை அறிந்து தான் கலைஞர் ராமதாஸ் அவர்களை கூட்டணியில் சேர்க்க முயற்ச்சிக்கின்றார் போலும்..... அரோகரா .....ஒத்தைக்கு ஒத்தை பாட்டாளி மக்கள் கட்சியே காணும்.... ஓட ஓட விரட்ட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறை வளாகத்தில் பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் என்ற தகவல் பரவியதால், நேற்று சிறைவாசல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுதான் இரத்தத்தின் இரத்தங்களுக்கும்.....உடன் பிறப்புகளுக்கும் உள்ள வித்தியாசம்.........உடன் பிறப்புகள் ஒரு போராட்டம் எண்டா எப்பவும் சிறை செல்ல தங்களை தயார்படுத்திகிட்டு தான் வருவான்......கட்சியின் வளர்ப்பு அப்பிடி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இறப்பு என்பது

போராளிகளுடைய வாழ்வின்

இலட்சிய பயணத்தின் அடுத்த கட்டம்

உயிர்கள் பறிக்கப்படலாம்,

உண்மைகள் புதைக்கப்படுவதில்லை."

சே குவேரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதி விசாரணையும் இல்லாமல்- ஜாமீனும் கிடைக்காமல் தடா சட்டத்தின் கீழ் தனக்கு வேண்டாதவர்களையெல்லாம் பழி வாங்கியது அன்றைய ஜெயலலிதா அரசு (1991-96). பத்மநாபா கொலை வழக்கு மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவரது கணவர் ஜெகதீசனையும் தடா சட்டத்தின் கீழ் ஜெ அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. 1992ஆம் ஆண்டு ஜனவரி 9 முதல் அக்டோபர் 27 வரை ஏறத்தாழ 11 மாதங்கள் சிறைப்பட்டிருந்த பிறகே இருவரும் 90க்கும் மேற்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் நடந்த நீதிமன்ற விசாரணையில் இருவரும் நிரபராதிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெ அரசால் சிறை எனும் கொடும்பரிசு வழங்கப்பட்ட சுப்புலட்சுமியும் பெண்தான்...

நன்றி

சுரேஷ்குமார்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராம் ஜெத்மலானி நீக்கப்பட்டு புதிய வழக்கறிஞர் குழு அமைக்கபடுகின்றதாமே.......

ஹாரிஸ் சால்வே ஆஜராகலாம் என்ற ஒரு பேச்சு அடிபடுகின்றது.......

வேணுகோபால் போன்றவர்களின் பெயர்களும் ஆராயப்படுகின்றதாம் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களவெடுத்தவர்களையும் கடவுளாக மதிக்கும் நாடு எது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது எல்லோருமே கிட்டத்தட்ட மறந்து விட்ட "கடிதங்கள்" பற்றிய அழகான படைப்பு.....முடிந்தால் ஒருமுறை படியிங்கள்.......

பள்ளிப் படிப்பு வரை பக்கத்து ஊர்களில் படித்து விட்டு, கல்லூரிக்காக வீடு கடத்தப்பட்டு, விடுதியில் சேர்ந்து, அம்மாவையும் அப்பாவையும், பாசத்தோடு கத்தும் பசுமாடு போன்ற வாயில்லா ஜீவன்களையும் பிரிந்து கண்ணீரில் முகம் கழுவிய என் போன்றவர்களுக்குத் தான் புரியும் வீட்டிலிருந்து வரும் கடிதங்களின் அருமை. வெளியூருக்கு பேச வேண்டுமென்றாலே, தபால் அலுவலகத்திற்கு போய் டிரங்கால் புக்கிங் செய்துவிட்டு (அதுவும் நாம் பேச நினைக்கிற நபர் வசிக்கும் ஊரில் போன் இருந்தால்...) காத்திருக்க வேண்டிய எண்பதுகளின் தொடக்கத்தில் குடும்பத்தை பிரிந்து தொலை தூரங்களில் வசித்தவர்களுக்குத் தான் புரியும் கடிதங்கள் என்பவை அப்பாவின் தோள், அம்மாவின் மடி, மனைவியின் அரவணைப்பு, காதலியின் முத்தம், நண்பனின் வார்த்தைகள் என்ற உண்மை.

கடுதாசிக்காரர்கள் மீதான பாசம் : தந்தி, டிரங் கால், எஸ்.டி.டி., மொபைல், குறுஞ்செய்தி, இணைய தளம், இ-மெயில், பேஸ் புக், ஸ்கைப், வாட்ஸ் அப். இப்படி அடுக்கடுக்காய் வளர்ந்திருக்கும் அத்தனை தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் தாயாக இருந்த கடிதத்தின் பெருமை தனித்துவமானது. அந்த கடிதங்களை பரிமாறும் தபால்காரர்களுக்கு இருக்கும் வரவேற்பே அதற்கு அத்தாட்சி. பேங்க்காரரை பணமாகவும், ஏட்டையாவை பயமாகவும், முன்சீப்பை பவ்யமாகவும், வாத்தியாரை பணிவாகவும் பார்க்கும் எந்த கிராமமும் கடுதாசிக்காரரை பாசமாக பார்க்கும். எனக்கு தெரிந்து ரேஷன் கார்டில் சேர்க்கப்படாமல் எல்லா குடும்பங்களிலும் உறுப்பினராக இருக்கும் ஒரே ஜீவன் தபால்காரர் தான். தபால்காரர்களை தெய்வமாகவே பார்த்த எத்தனைக் காதலர்களை நாம் சந்தித்திருக்கிறோம்...!

பெரும்பாலான கிராமங்களில் படித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வட்டமேசை மாநாடு பகலில் நடக்கும் இடமாகவும் தவறாமல் இருந்தது தபால் ஆபீஸ் தெரு தான். விண்ணப்ப படிவத்தில் தொடங்கி வேலை உத்தரவிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் சிலர் பையில் பேனாவும், கையில் எம்ளாய்மென்ட் நியூசும் வைத்திருக்க, காதலியிடமிருந்து வரும் கடிதங்களுக்காக காத்திருப்பவர்கள், பையில் சீப்பும் கையில் கர்ச்சிப்புமாக அமர்ந்திருப்பதை பார்க்கலாம்.

கடிதங்களுக்கே அதிக முத்தம் : பணத்தை சேமித்து விட்டு தேவைப்படும் போது எடுத்துக் கொள்கிற வசதிகளை செய்திருப்பவை வங்கிகள் என்றால் உணர்வுகளையும், நினைவுகளையும் எழுத்துக்களாக சேமித்து வைத்து தேவைப்படும் போது, மறுபடியும் மீட்டுக் கொள்கிற வசதிகளை செய்பவை... செய்தவை கடிதங்கள் தான்.உலகத்தில் குழந்தைகளையும், காதலர் களையும் விட அதிக முத்தம் வாங்கிய பெருமை கடிதங்களுக்கு மட்டுமே உண்டு.

இன்றும் கிராமங்களில் துருப்பிடித்த கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் காலாவதியான தபால் பெட்டிகள் தான், காலாவதியாகாத உறவுகளின் உணர்வுகள்.

தனிமனித எழுத்து திறனுக்கு ஒரு பயிற்சி பாசறையாக இருப்பதுவும், வெளிச்சத்திற்கு வராத கட்டுரையாளர்களையும், கவிஞர்களையும், விமர்சகர்களையும் உருவாக்கி தனக்குள்ளேயே ஒளித்து வைத்திருக்கும் ஒப்பற்ற ஊடகமாக இருப்பதுவும் கடிதங்களே!

கடிதங்களை பற்றி 'நேயர் விருப்பத்தில்' எழுதிய அப்துல்ரகுமானும், 'கண்ணீர்

பூக்களில்' எழுதிய மேத்தாவும், 'இதுவரையில் நானில்' எழுதிய வைரமுத்துவும் தான் காதல், கவிதை, கடிதம் என்ற மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பவை என்று என் போன்றவர்களுக்கு புரிய வைத்தார்கள்.

அடி பெண்ணே!

காதலை

மதத்தின் பெயரால்

மறுத்த

இந்த உன் கடிதத்தை

என்ன செய்வது...

உன் மதப்படி புதைப்பதா?

என் மதப்படி எரிப்பதா?

என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நான் படித்த காலத்தில் வாசித்த என் கவிதைக்கு கிடைத்த

கைத்தட்டல் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு எனக்கு வந்த ஒரு கடிதம் எங்களுக்கு மட்டுமே தெரியும்.

நிலாச் சோறு, டூரிங் டாக்கிஸ், வில்லு வண்டி, அறுப்புக் கடை, ஊர் பஞ்சாயத்து, பம்பர விளையாட்டு... இன்னும் சிலவற்றை வாழ்க்கையாகவே பார்த்த எங்கள் தலைமுறை இதை வார்த்தையாகக் கூட பார்க்க முடியாமல் போன இன்றைய கணினித் தலைமுறையை பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடியும்.

மேற்சொன்ன வரிசையில் கடிதம் என்பதுவும் இணைந்துவிட்டதே

என்பது தான்

வலி தீரா வருத்தம்.

- கவிஞர் நெல்லை ஜெயந்தா

இரங்கல் கடிதம்

கல்லூரி விடுதிக்கு

அம்மா எழுதும்

கடிதத்தில் தெரியும்

தாய்ப்பால் வாசம்

பணவிடைத் தாள்களின்

அடியில் மட்டுமே

வரவேற்கப்படும்

அப்பாவின் கடிதங்கள்!

காதலிக்கும் போது தான்

தெரியவந்தது

கடிதங்களைப் படித்தும்

பசி ஆறலாம்!

சுமக்கும் செய்திகளிலிருந்து

கடிதங்களே

அறிவித்துவிடும்

நண்பர்களின் வயதை

பிரசவத்திற்குப்

பிறந்தகம் போன

மனைவிகளின்

கடிதங்களால்

காப்பாற்றப்படலாம்

பல கணவர்களின் கற்பு

இப்பொழுதெல்லாம்

என்

கண்களில் படுகின்றன

தொலைபேசிகள்

கடிதங்களின் சவப்பெட்டியாக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் என்ன தான் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தங்கள் வாத திறமைகளை முன்வைத்தாலும் இறுதி முடிவுகள் என்னவோ அரசியல் உயர்பீடங்களின் முடிவுகளுக்கும் அழுத்தங்களுக்கும் ஏற்ப தான் எடுக்கபடுகின்றன.....

இலங்கையில் இதற்கொரு நல்ல உதாரணம் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதை பிரித்து உத்தரவிட்டது......இன்னும் நிறைய இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா...ஏதோ சின்னம் சிறுசுங்க அதுங்க.....அதுக்காக ஷாருகான் பையன எல்லாம் நித்தியானந்தா ரேஞ்சுக்கு ஆக்கிப்புட்டீங்களே டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை உள்ள தூக்கி போட்டு இம்புட்டு நாளாச்சு...எந்த ஒரு பெரிய வடக்கு அரசியல் தலைவர்கள் யாரும் போய் பார்த்ததாவோ.......குரல் குடுத்ததாவோ தெரியல்லியே.....அதுவும் இத்தனை முறை முதல்வராக வந்தவர்க்கு தனக்காக டெல்லியில் லாபி செய்ய ஒரு சில பெரும் தலைகளை தன்னுடை உறவு வட்டத்துக்குள் வைத்திருக்க தெரியவில்லையே.....

இந்த விடையத்தில் கலைஞர் கில்லாடி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தான் தீர்ப்பு நகலை முழுமையாக படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.....ஊழலே செய்யவில்லை....எதுவுமே நடக்க வில்லை இது வெறும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று யாராவது சொல்வீர்களாக இருந்தால் சத்தியமாக நீங்கள் மனசாட்சியே இல்லாதவர்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பெரிய நடிகர்களும் தங்கள் வாரிசை அறிமுகப்படுத்த நிறைய செலவு செய்திருந்தார்கள்

சூரியா

விஜய்

அபிஷேக் பச்சான்

என்று பலரும் தந்தைகளுக்கு நிறைய செலவு வைச்சு தான் வந்தார்கள் அறிமுக படங்களும் என்னமோ சும்மார் ரகம் தான்

ஆனா இந்த ஷாருக் கானின் பையன் இருக்கானே..... இந்த விஷயத்தில செம கில்லாடி பைசா செலவில்லாம தந்தையின் உதவியையும் நாடாம தானவே படபரப்பா அறிமுகமாகி உலகம்பூரா தன்னை பரபரப்பா பேச வைச்சிட்டான்......

இப்போ இதான் புது டிசைன் போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்டனை கைதிகளுக்கு பொதுவாக ஒரு வாரத்தில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

என்பது சிறை விதிமுறை. அதன்படி ஜெவிற்கு ஊதுபத்தி செய்யும் வேலை கொடுக்கப்பட்டு உள்ளது.

‪‎சிறைத்துறை‬ அதிகாரிகள்

அப்போ கூடிய சீக்கிரம் அம்மா ஊதுபத்தி வந்திடும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அமைதிக்கான நோபல் பரிசு வாங்குவதற்கு இப்பிடி ஒருத்தர் இருப்பது நோர்வேக்காரன் சொல்லித்தான் தெரியவேண்டி இருக்கு.....

சினிமா காரனுக்கும்

அரசியல்வாதிகளுக்கும்

கிரிக்கெட் காரனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் தான் நமது மீடியாக்கள் காலத்தை செலவளிகின்றார்கள் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட தமிழகத்தின் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் தான் பா ஜ க தமிழக தலைவி தமிழிசையாம் குமரி அனந்தனின் இன்னுமொரு தம்பி தமிழகத்தின் பிரபல தொழில் அதிபரும் காங்கிரஸ் கட்சி பிரமுகரும்....வசந்தகுமார்

ஆக இரண்டு தேசிய கட்சியிலும் குடும்பம் இருக்கு....

நல்லா இருக்குடா அம்பி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துக்காக போராடிய நாங்கள் இப்ப உலக அழகி பட்டம் வெல்ல போராடுறம் பாருங்கோ..... கனடாவில இருந்து கஷ்ட்டப்பட்டு பொண்ணு உலக இளவரசியா வர முயற்சி பண்ணிட்டு இருக்காம்......

யார் பெத்த பிள்ளையோ அரோகரா.......

நல்லகாலம் பாருங்கோ இந்த கொடுமையல பாக்க எங்க அப்பத்தா உயிரோட இல்லை..... இருந்திருந்தா கண்டிப்பா வாயில ஏதாவது வந்திருக்கும்...... ஆனால் எழுத முடியாமல் இருந்திக்கும் பாருங்கோ....

(அப்பத்தாக்கு மூஞ்சி புத்தகத்தில எழுத வராது)

அப்போ நான் வட்டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சி புத்தக போராளிகளும் எம்புட்டுக்காலம் தான் விஜியகாந்த் ,விஜய் என்று ஒட்டிட்டே இருக்கிறது.....ரஜினி சார் எப்போ சாக்கடைக்குள்ள வந்து குதிக்கிற பிளான் ? அதாங்க அரசியலுக்குள்ள..... சீக்கிரமா வந்தா எங்களுக்கு நல்லம்........

ரஜினி புரட்ச்சிப்படை எண்டு மூஞ்சி புத்தக ID எல்லாம் திறக்கனும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரான்சில் வெளியாகும்

முகடுகள் சஞ்சிகை வெளியீட்டு விழா வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள் பல தடைகளையும் சிரமங்களையும் தாண்டி இதை வெற்றியாக்கி சாதித்த நண்பர்கள் குழுவுக்கு என்னுடைய பாராட்டுக்கள் .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.