Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு 1000 கணக்கில் சென்னையில் கூடினார்கள்...... இதுவே இலங்கை தமிழ் இந்துக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு இருந்தால் வெறும் 100 கணக்கில் தான் கூடி இருப்பார்கள்..... அங்கே நிற்கின்றது நமது தமிழர்களின் ஒற்றுமை....நமது மதத்தின் ஒற்றுமே......தாய் மொழியும் தாய் மதமும் எங்கள் இரண்டு கண்கள் என்ற சிந்தனை எப்பொழுது எமக்கு வருகின்றதோ அப்பொழுது தான் எங்கள் மொழிக்கும் எங்கள் மதத்துக்கும் விடிவு.....அதுவரை ஒவொன்றாக ஒவோருத்தராக இழந்துகொண்டே இருப்போம்

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாயடி பேயடி கேள்வி பட்டு இருப்பீங்க பட் பாத்து இருக்கீங்களா?

பிரான்ஸ் vs சுவிஸ் மேட்ச் பாக்கிறவங்களுக்கு புரியும்.....

சரி சரி டோன்ட் வொர்ரி சுவிஸ் நாங்களும் பிரெஞ்ச் தான் பேசுறனாங்க எண்டு சொல்லி சமாளிக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓகே swiss காரர் கொடிய மடிச்சு பத்திரமா பக்குவமா வைங்க இனி அடுத்த வேர்ல்ட் கப் மட்டும்....

இப்போ யோகத்தார் தலைமையில் வனஜனும் சுபேசும் பிரெஞ்சு கோடியை தூக்கி கொண்டு வீட்டை சுத்தி ஓடுவார்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அது வனஜன்?? :rolleyes::unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது அந்த காங் ல முக்கியமான ஒராள்.....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட நானும் கொஞ்சம் ஹிந்தி படிச்சிருக்கலாமே என்று ஒரு கஜோல் மாதிரியோ தீபிகா மாதிரியோ அழகான ஹிந்தி பொண்ணுங்க நம்ம கிட்ட வந்து ஹிந்தியில் பேச முயற்ச்சிக்கும் போது தான் புரியும்..... இது Australia வில் நான் அனுபவத்தில் கண்ட உண்மை..... சோ பசங்களா ஒரு மொழியை ஒருவர் மீது திணிப்பது தான் கூடாது ஒழிய ஒரு மொழியை கற்றறிந்து வைத்திருப்பதில் தவறில்லை..... வேலைவாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ கடலை போடவாவது உதவும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டமை கவலையை ஏற்படுத்தியுள்ளது!- ஞானசார தேரர்

வேணும் எண்டா என்னோட ID தரவா?

தேரரும் கடலை போடுறத மிஸ் பண்ணுறார் போல......ஏம்பா மார்க்கு பாத்து ஏதாவது செய்ப்பா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி - முஸ்லிம் எம்.பிக்கள் இன்று மாலை சந்திப்பு! வன்முறைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி குழு நியமனம்!

மொதல்ல 83 இனக்கலவரத்த விசாரிச்ச ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கொடுத்திடிச்சா?

  • கருத்துக்கள உறவுகள்

நாயடி பேயடி கேள்வி பட்டு இருப்பீங்க பட் பாத்து இருக்கீங்களா?

பிரான்ஸ் vs சுவிஸ் மேட்ச் பாக்கிறவங்களுக்கு புரியும்.....

சரி சரி டோன்ட் வொர்ரி சுவிஸ் நாங்களும் பிரெஞ்ச் தான் பேசுறனாங்க எண்டு சொல்லி சமாளிக்கலாம்

 

அது தான் அவர்களது முகத்திலேயே  தெரிந்ததே....

 

கர்வம் அடிவேண்டும் என்பதற்கு நல்ல  உதாரணம்..............

பிரெஞ்சுக்காறரின் வரலாறு மிகமிகப்பெரியது..........

பிரெஞ்சு ரீம் போல்  எந்த உதைபந்தாட்டக்குழுவும் உலகில் இல்லை

அந்தளவுக்கு மனிதாபிமானமும்

எல்லோரும் விளையாட  அனுமதித்தலும் இங்கு மட்டுமே உண்டு......

அதை

நேற்றைய ஆட்டத்தில் கோல் போட்டவர்களை  கணக்கெடுத்தாலே புரிந்து கொள்ளலாம்

5 கோலையும் 5 வகையானவர்கள் போட்டிருந்தார்கள்

சுதந்திரம்

சமத்துவம்

சகோதரதத்துவம் எமது கண்கள்..... :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தமிழ் சிறுவர்கள் ஆயுதம் எடுத்தால் ஹையோ புலிகள் சிறுவர்களை போராட்டத்தில் இணைத்து கொடுமைபடுத்துகின்றார்கள் என்று அமெரிக்கா முதல் ஐக்கிய நாடுகள் சபை வரை கூச்சல் போடும் ஆனால் இன்று அமெரிக்கா மற்றும் ஐக்கியநாடுகள் சபையாலும் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு Iraq சன்னி இன முஸ்லிம்களுக்கு எதிராக போராட ஷியா இன முஸ்லிம் மக்களுக்கும் சிறுவர்களுக்கும் அதாவது பத்து,பன்னிரண்டு வயசு சிறுவர்களுக்கும் ஆயுதத்தை கொடுத்து ஊக்கபடுத்துகின்றது மேற்கத்தைய நாடுகளோ வாய் மூடி மௌனம்.... இன்னாங்கடா நியாயம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தி மு க மேற்கொண்டு இருக்கும் அதிரடி களையெடுப்பு வரவேற்கப்பட வேண்டிய ஓன்று கட்சி பலப்படுத்த வேண்டும் என்றால் கசப்பு மருந்து அவசியம் பாலுக்காக பழனிமாணிக்கம் மேல் கைவைத்தது தான் ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கின்றது..... தஞ்சையில் கட்சியை வளர்த்ததில் முக்கிய பங்கு பழனிக்கு உண்டு......என்றாலும் இப்பிடியான நடவடிக்கைகள் கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தானைத்தலைவரையும், குடும்பத்தையும் களையெடுக்க வேண்டும்..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் இருக்கிறதால தான் தி மு க என்ற மாபெரும் இயக்கம் இப்பிடியாவது இருக்கு இல்லது பல துண்டுகள் ஆகி இருக்கும் குறிப்பா MGR கச்லத்தில் கூட கட்சிய அசையாமல் பாதுகாத்தவர் இன்னும் ஒருவருடைய கையில் அந்த நேரம் கட்சி இருந்திருந்தால் தி மு கவை வெறும் வெறும் வரலாறில் தான் படிப்பீர்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவை வெறும் வரலாற்றில் படிப்பதுதான் மகிழ்ச்சி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு இன்னும் ஒரு 10 வருடம் ஆகும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அண்ணாக்கு 40 வயசு ஆகிடிச்சாம் ....இம்புட்டு நாளும் நடிச்சே கொண்ட விஜய் அண்ணா இனி நம்மள எல்லாம் கடிச்சே கொல்ல போறாரு...40 . வந்தாலே ஏதோ குணமும் சேர்ந்தே வருமாம்.....

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துடிதுடித்து போவேன்...

உன் பூ முகம் ஒரு கணம் வாடினால்...

எப்படியோ எங்கேயோ இருந்தாலும்

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்...

நீ நலமாய் இருக்கின்றாய்

என்ற உறுதியில் துடிகின்ற்றது

ஆனந்தமாய்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு சமீபத்திய மிகப்பெரிய உதாரணம் இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்..... ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் சிங்களவர்களோடு கைகோர்த்து போராடிய முஸ்லிம் தலைவர்களும் சில மக்களும் அதே அரசாங்கத்துக்கு எதிராக இப்போ போராட்டத்தில்....அப்பொழுது இலங்கை அரசை காப்பாற்ற தூதரகம் தூதரகமா ஏறி இறங்கிய ஹக்கீம் இப்போ இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தூதரங்களில் போய் முறையிடுகின்றாராம்..... இதை பாத்த வெளிநாட்டு தூதுவர்கள் தங்களுக்குள் சிரித்து கொள்கின்றார்களாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு பூனையும் சுண்டெலியும் புட் பால் விளையாட போயினம்.....

ஸ்பெயின் vs ஆஸ்திரேலியா

அரோகரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஆஸ்திரேலியா ஸ்பெயின் மோதலில் மேட்ச் பாக்கிற எவனாச்சும் அடிடா, உதைடா , கோல போடுடா அப்பிடின்னு டிவி க்கு முன்னாடி நிண்டு யாராச்சும் கத்திறத பாத்திங்க எண்டா அப்பிடியே அவிங்கள எட்டி உதைங்கப்பா.....

கொய்யால வென்றா தான் என்ன தோத்தா தான் என்ன... எதுக்கு கொடிய ஆட்டிகிட்டு சவுண்டு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ நல்லவனாய் வாழவதை காட்ட நடிக்காதே உள்ளமே காட்டிகொடுத்துவிடும் உன் பொய்மையை

  • கருத்துக்கள உறவுகள்

நீ நல்லவனாய் வாழவதை காட்ட நடிக்காதே உள்ளமே காட்டிகொடுத்துவிடும் உன் பொய்மையை

 

கண்களே காட்டிக் கொடுத்துவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவர் facebook ல கவித போட்டாப்ல

அவள் ஒடி வந்து

பேருந்தில் ஏறியதும்....

பெருமூச்சு வாங்கியது அந்த பேருந்து...

அதுக்கு நான் பொண்ணு அம்புட்டு குண்டா எண்டு கேட்டாப்ல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் சில இசையமைப்பாளர்கள் சத்தமில்லாமல் இசையமைத்து சாதனை புரிந்தனர் அந்த இசையமைப்பாளர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு

வி.எஸ் நரசிம்மன்

,

சிறுவயதில் இவரின் அச்சமில்லை அச்சமில்லை படப்பாடலான ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடலையெல்லாம் இளையராஜாவின் இசையென்றே நினைத்திருக்கிறேன்.குறிப்பாக இவரின் அச்சமில்லை அச்சமில்லை படப்பாடல்கள் புகழ்பெற்றவை. ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்த போன்ற பாடல்களை கேட்டுகொண்டே இருக்கலாம் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளராக சில படங்களில் விளங்கினார்.இவர் இசையமைத்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தில் இடம்பெற்ற பூமேடையோ பொன்வீணையோ பாடலும் மேகம் ஒரு மேகம் போன்ற பாடல்களால் நம் உள்ளத்தை மீட்டியவர்.பாலச்சந்தர் இயக்கி முரளி இரட்டை வேடத்தில் நடித்த புதியவன் படத்தில் வந்தது வசந்த காலம்,நானோ கண் பார்த்தேன்,தேன்மழையிலே தினம் நனையும் என் நெஞ்சமே என்று பல சூப்பர்ஹிட் பாடல்களை

கொடுத்தவர் கடைசியாக ரேவதி சுரேஷ்மேனன் படமான பாசமலர்கள் படத்தில் இசையமைத்த பிறகு இவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை

சங்கர் கணேஷ்

இரட்டையர்களான இவர்கள் ப்ளாக் அண்ட்ஒயிட் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகின்றனர்.ஆரம்பத்தில் தேவர் பிலிம்ஸின் பல படங்களுக்கு இசையமைத்து

வந்துள்ளனர் இவர்களின் சம்சாரம் அது மின்சாரம் பாடல்களான ஜானகிதேவி,அழகிய அண்ணி

போன்றபாடல்களும்.இதயத்தாமரை,ஊர்க்காவலன் படத்தின் பாடல்களும்,இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகரனின் பாலைவனச்சோலை படத்தில் இடம்பெற்ற மேகமே மேகமே என்று ஆரம்பிக்கும்

வாணிஜெயராம் குரலும் நம்மை கிறங்கடிப்பவை

சந்திரபோஸ்

அய்யப்பன் படத்தின் பாடலான பொய்யன்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் என்ற இவரின் அய்யப்ப பக்தி பாடலில் ஜேசுதாஸ் நடித்திருப்பார்.அய்யப்ப பக்தர்களை விட்டு

பிரிக்கமுடியாத பாடலாக அது தற்போது வரை விளங்கி வருகிறது.ரஜினிகாந்திற்க்கு இளையராஜாவை தவிர்த்து இவர் மனிதன்,ராஜா சின்ன ரோஜா,விடுதலை உட்பட சில படங்களில் இசையமைத்து இருக்கிறார்,நல்ல குரல் வளமும் உடையவர் இவர் சமீபத்தில்தான் இவர் மரணமடைந்தார் இவர் பாடல்களில் மிகவும் என்னை கவர்ந்த பாடல்

விடுதலை படத்தில் இடம்பெற்ற நீலக்குயில்கள் ரெண்டு என்ற பாடல் .

மனோஜ் கியான்

இரட்டையர்களான இவர்கள் ஆபாவாணனின் அறிமுகங்கள். ஊமைவிழிகள் படத்தில் இவர்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் குறிப்பாக பி.பி சீனிவாஸ் அவர்கள் பாடிய‌

தோல்வி நிலையென நினைத்தால் ,மாமரத்து பூவெடுத்து மிட்நைட் மசாலா பாடலான ராத்திரி

நேரத்து பூஜையில் பாடல்கள் இன்றுவரை காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கும் பாடல்கள்

இணைந்த கைகள் படத்தில் இடம்பெற்ற அந்திநேர தென்றல் காற்று,மழையோரம் குயில் கூவக்கேட்டேன் போன்ற பாடல்களும் இவரின் செந்தூரப்பூவே பாடல்களும் புகழ்பெற்றவை

கங்கை அமரன்

இளையராஜாவின் தம்பியாக இருந்தாலும் இவர் இசையமைத்த ஜீவா,வாழ்வே மாயம்,சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற படங்களில் இவரின் தனித்துவத்தை காட்டினார் இவரின் சின்னத்தம்பி பெரியதம்பி,வாழ்வே மாயம் படங்களின் பாடல்கள் வெற்றியின் உச்சத்தை தொட்டவை

ஆர்.டி பர்மன்

இவர் இசையமைத்த உயிரே உனக்காக படத்தில் இடம்பெற்ற பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல‌

சிரிக்க போன்ற பாடல்கள் பூமழை பொழியுது படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்.இவர் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.

தேவேந்திரன்

வருத்ததிற்குரிய விஷயம் என்னவென்றால் இவர் இசையமைத்த வேதம்புதிது படத்தின் பாடல்களை இளையராஜா தான் இசையமைத்தார் என்று அதிகம் பேர் நினைப்பதுதான் சமீபத்தில் கூட அ.மார்க்ஸ் என்ற அறிவுஜீவி எழுத்தாளர் இளையராஜாவை திட்டுகிறென் என்று வேதம்புதிது படத்தின் பாடல்கள் ப்ராமணியத்தை வளர்ப்பதாக உள்ளது என்று இளையராஜாவை சாடியிருந்தார்.இவரின் வேதம் புதிது படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா,

மந்திரம் சொன்னேன் வந்து விடு போன்ற பாடல்களும் மண்ணுக்குள் வைரம் படத்தின் பொங்கியதோ காதல் வெள்ளம்,முத்து சிரித்தது முல்லை வெடித்தது போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை.

பாலபாரதி

இவர் இசையமைத்த அமராவதி படத்தின் பாடல்கள் அஜீத் என்ற புதிய நடிகருக்கு சரியான முகவரி கொடுத்தது.இந்த படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் இவர் இசையமைத்த மற்றொரு படமான தலைவாசல் படத்திலும் எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட் இவரை போன்ற‌

சிறந்த இசையமைப்பாளர்களையெல்லாம் விட்டுவிட்டு கொலவெறி யில் மூழ்கி கிடப்பது நாம்

இசைக்கு செய்யும் துரோகம்

தேவா

மனசுக்கேத்த மகராசா படத்தில் அறிமுகமான தேவா அதற்கு பின் வந்த வைகாசி பொறந்தாச்சு

படத்தில் தனது பாடல்கள் மூலம் பாப்புலரானார்.பொதுவாக கானா மன்னன் எனப்பெயரெடுத்த தேவா இனிமையான் மெலடி பாடல்கள் மூலமும் மனதை கவர்ந்துள்ளார் காதல் கோட்டை,வாலி,புருஷலட்சணம்,ஆசை போன்ற படங்களின் பாடல்கள் இவரின் நல்ல பாடல்களுக்கு உதாரணமாக சொல்லாம்

சங்கீதராஜன்/ரவீந்தர்

இவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் தமிழில் 13ம் நம்பர் வீடு உட்பட சில திகில்

படங்களுக்கு இசையமைத்தவர் இவர்.இவரின் பூவுக்குள் பூகம்பம் படத்தில் இடம்பெற்ற அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்காதோ என்ற பாடல் என் மனம் கவர்ந்தது

ரவீந்தரும் ஒரு மலையாள இசையமைப்பாளர்தான் இவரின் ரசிகன் ஒரு ரசிகையில் இடம்பெற்ற பாடி அழைத்தேன் ,ஏழிசை கீதமே போன்ற பாடல்கள் சூப்பர்ஹிட் பாடல்கள் ஆகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் 80 களில் சாமத்திய வீடு வீடியோக்களில் இந்த பாட்டும் வரும்

http://youtube.com/watch?v=maTBECC6nOY

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.