Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடிகளைப் பறக்க விடுவதன் மூலம் அரசாங்கம் அடைய நினைக்கும் இலக்கு என்ன?

Featured Replies

[size=4]தமிழர் தாயகப் பிரதேசத்தில் புலிக்கொடிகளைப் பறக்க விடுவதன் மூலம் அரசாங்கம் அடைய நினைக்கும் இலக்கு என்ன என்பது தொடர்பில் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய அதேவேளை இந்த விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில்வரவேற்பைப் பெற்றுள்ளமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.[/size]

[size=4]தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரியும் தமிழ் அரசியல்கைதி நிமலரூபன் சிறைச்சாலையில் அடித்துக் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் நேற்றுப் புதன்கிழமைநெல்லியடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழீழ தேசியக் கொடி காண்பிக்கப்பட்டுள்ளது.இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த படைப்புலனாய்வாளர்கள் தமது கைகளில் புலிக்கொடிகளை ஏந்திவந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தைச் சுற்றி வலம் வந்தனர். இதனைப் பார்த்த தமிழ் மக்கள் பெரிதும்மகிழ்ச்சியடைந்தனர்.[/size]

[size=4]தனித் தமிழீழ அரசாங்கத்தின் தேசியக் கொடியை நீண்ட கால இடைவெளியில் பார்த்தமை மக்களுக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தியது. ஆயினும் இதன் பின்னணியில் ஏதாவது இராஜதந்திரம் இருக்குமென்று கருதிய மக்கள் சிறுசலனமடைந்ததையும் அவதானிக்க முடிந்தது.தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்குப் பின்னால் புலிகளே உள்ளனர் என்பதைசர்வதேசத்திற்கு காட்டுவதன் மூலம் அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முற்பட்டுவருகின்றது. [/size]

[size=4]இதற்காகவே அரசும் படையினரும் தமிழர்களின் பொது நிகழ்வுகளை புலிக்கொடிகளால் அலங்கரிக்கமுற்படுகின்றது. ஆனால் அது இராஜதந்திர ரீதியில் தனக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைஅரசாங்கம் சிந்திக்கவில்லை.[/size]

[size=4]நெல்லியடியில் நேற்றுப் புதன்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டஆர்ப்பாட்டத்தின் போதும் புலிக்கொடி பறக்க வைக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்தபடைப்புலனாய்வாளர்கள் நால்வர், தமிழீழ தேசியக் கொடியாகியன புலிக்கொடிகளைஅசைத்தவாறு அங்குமிங்கும் திரிந்தனர். ஆனால் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சிறிலங்காகாவல்துறையினரும் படையினரும் அமைதியாக நின்று இதனை வேடிக்கை பார்த்தனரே தவிர புலிக்கொடி ஏந்திவந்தவர்களை கைது செய்ய முற்படவில்லை.[/size]

[size=4]புலிக்கொடியுடன் வந்தவர்கள் யார் என்பது தெரிந்த காரணத்தாலேயே காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்யவில்லை என்பது அங்கிருந்த அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிந்திருந்தது. ஏனெனில்,புலிக்கொடிகளுடன் வந்தவர்கள் காவல்துறையினருக்கு மிக அண்மையாக நடமாடினர். காவல்துறையினர் கையால் இழுத்துப் பிடிக்கக்கூடிய இடங்களில் கூட அவர்கள் நடமாடினர். படையினருக்கு அருகிலும் இவர்கள்அவ்வப்போது சென்றனர். இந்த நிலையில் புலிக்கொடியுடன் வந்தவர்கள் படைப்புலனாய்வாளர்கள் என்பது இங்கு புலனாகிறது.[/size]

[size=4]புலிக்கொடியுடன் வந்தவர்களைக் கைது செய்ய முடியாததற்கு அங்கு காவல் கடமையில் நின்ற காவல்துறையினர் புதிய வியாக்கியானம் கூறியதாக அங்கு நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்தப் போராட்டத்தைக்[/size]குழப்பும் வகையில் காவல்துறையினர் எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது. அமைதியாக பணியில்ஈடுபட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆகவேதான் குறித்த நபர்களை நாம் துசெய்யவில்லையென்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

[size=4]உண்மையிலேயே, சிறிலங்கா காவல்துறையினர் இங்கு நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியம் செய்திருக்கின்றனர். ஏனெனில், குறித்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரி நெல்லியடிகாவல்துறையினர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால்காவல்துறையின் மனுவை மறுத்துரைத்த நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், போராட்டத்தை எந்த தீய சக்திகளும் குழப்பாத வகையில் உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனநாயக ரீதியாகமக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு உரிமை உண்டென்பதையும் நீதிபதி தெரிவித்திருந்தார்.[/size]

[size=4]ஆனால், கையால் எட்டித் தொடக்கூடிய நெருக்கமானதாக நான்கு பேர் புலிக்கொடிகளுடன் நின்றபோதும் காவல்துறையினர் அவர்களை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். புலிக்கொடிகளை ஏந்தி வந்தவர்களின்நோக்கம் ஆர்ப்பாட்டத்தைக் குழப்புவதாக இருந்த போதிலும் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யாமைதொடர்பில் இங்கு நின்ற மக்கள் ஆச்சரியமடைந்தனர்.[/size]

[size=4]சர்வதேச அரசாங்கங்கள் இந்த விடயத்தை தெளிவாக நோக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தகாலத்திலும் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் புலிச் சாயம் பூசியது. தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு கோரியஉண்ணாவிரதங்கள், கடையடைப்புகள், சாலை மறியல்கள், போன்ற அனைத்திற்கும் புலிச் சாயம் பூசப்பட்டதேவரலாறாகும்.இதன் உச்சக்கட்டமாக, யாழ் பல்கலைக்கழக மாணவர்களாலும் குடாநாட்டு மக்களாலும் முன்னெடுக்கப்பட்டு உலகம்பூராகவும் வியாபித்த பொங்கு தமிழ் நிகழ்விற்கும் அரசாங்கம் புலிச்சாயம் பூசியது. தமிழர்தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்குமாறு கோரிய மேற்படிபொங்கு தமிழ் நிகழ்வு புலிகளின் பின்புலத்திலேயே இடம்பெறுகின்றது என்று சிறிலங்கா அரசுபிரச்சாரப்படுத்தியது. அதன் மூலம் தமிழ் மக்களின் ஜனநாயகக் குரலை மழுங்கடித்தது. சர்வதேச நாடுகளும்அரசாங்கத்தின் கருத்தையே நம்பிக்கொண்டிருந்தன.[/size]

[size=4]வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்த காலத்திலும் இதே போன்ற நிலைமைகளே இடம்பெற்றன. [/size]

[size=4]அதாவது,சிறிலங்கா இனவெறி இராணுவத்தின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் தினந்தோறும் ஏராளமான அப்பாவி மக்கள்கொல்லப்பட்டனர். அப்போது வன்னியில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மக்களின் அழிவுகளை ஒளிப்படமற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் சர்வதேசத்தின் பார்வைக்கு வெளிக்கொணர்ந்தனர்.ஆனால் அப்போது கூட காட்டுமிராண்டித்தனமான மகிந்த அரசாங்கம் மக்களின் அழிவிற்கு புலிச்சாயம்பூசியது. அதாவது, மக்கள் கொல்லப்படவில்லை. புலிப் பயங்கரவாதிகளே தினமும் கொல்லப்படுகின்றனர்.அவர்களின் உடலங்களே மக்கள் என்ற போர்வையில் வெளியே காண்பிக்கப்படுகின்றன. இது புலிகளின்பிரச்சாரம். புலிகளின் பிரச்சார ஊடகங்களே இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. வன்னியில்புலிப் பயங்கரவாதிகள் தங்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் யுத்தத்தை நிறுத்துவதற்குமே இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர் என்றும் சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசரீதியான பிரசாரங்களை முன்னெடுத்தது.[/size]

[size=4]நிலைமையைச் சீர்தூக்கிப் பார்க்காத சர்வதேச அரசாங்கங்களும் மகிந்தவின் மாயக் கருத்துக்களையே நம்பின. இதனால் அவை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இறுதியில் இனவெறி அரசம்அதன் இராணுவமும் இணைந்து ஆடிய கோரத் தாண்டவத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.இத்தனை அழிவுகளும் இடம்பெற்ற பின்னர் தற்போது சிங்கள இராணுவத்தினர் தமிழர் தாயகத்திலுள்ள விடுதலைப்புலிகளின் சின்னங்கள் அனைத்தையும் அழித்தொழித்துள்ளனர். [/size]

[size=4]கையடக்கத் தொலைபேசிகளில் விடுதலைப்புலிகளின் பாடல்கள், வீடியோக்கள், இலட்சினைகள் போன்றவற்றை வைத்திருப்பவர்களை இராணுவத்தினரும் காவல்துறையினரும் கைது செய்து சிறைகளில் அடைக்கின்றனர். புலிகள் தொடர்பாக கதைப்பவர்களிடம் கூட 4 ஆம்மாடியில் விசாரணை இடம்பெறுகின்றது.[/size]

[size=4]அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற மே மாதம் 18 ஆம் திகதி தீவகத்திலுள்ள வீடொன்றின் மாமரத்தில் சிவப்பு நிறத்திலான துணியொன்று கட்டப்பட்டிருந்ததை அவதானித்த படையினர் அந்தவீட்டைச் சுற்றிவளைத்து கடுமையான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.இவ்வாறு ஒவ்வொரு நொடியிலும் புலிகளின் சின்னங்களை அழித்தொழிக்க இராணுவம் முயன்றுகொண்டிருக்கின்றநிலையிலேயே நேற்று நெல்லியடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழீழ தேசியக் கொடிகாண்பிக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக அரசாங்கம் செய்கின்ற புலிப் பிரச்சார உத்தியே இந்த ஜனநாயகப்போராட்டத்தின்போதும் சிறிலங்கா அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.[/size]

[size=4]இந்த இடத்திலேயே சர்வதேச சமூகம் விழிப்படைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதும் தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பிலும் இதுவரை சர்வதேசம் கொண்டுள்ள பயங்கரவாதப் பார்வையை மாற்ற வேண்டியதேவை ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் மோசடிக் கருத்துக்களை நம்பி இதுவரை காலமும் தமிழ் மக்களுக்குசர்வதேசம் இழைத்த தவறுகளை இனியாவது திருத்த வேண்டும்.[/size]

[size=4]நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதென்றும் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்களென்றும் அரசாங்கம் கூறுகின்ற நிலையிலேயே தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ் குடாநாட்டில் இரண்டு தடவைபுலிக்கொடி காட்டப்பட்டுள்ளது. கடந்த மே தினத்தன்று முதல்முறையாகவும் தற்போது நெல்லியடியில் இரண்டாவதுதடவையாகவும் இந்தச் செயற்பாடு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. [/size]

[size=4]புலிக்கொடி காட்டியவர்களை காவல்துறையினர்கைது செய்யாமல் அவர்களைச் சுதந்திரமாக உலாவர அனுமதித்ததன் மூலம் அரசாங்கமும் இராணுவமும் இணைந்தே இதனைச்செயற்படுத்துகின்றன என்பது தெளிவாகியுள்ளது.[/size]

[size=4]இந்த ஆர்ப்பாட்டம் புலம் பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களாலேயே முன்னெடுக்கப்பட்டதுஎன்பதை சர்வதேசத்திற்கு கூறுவதன் மூலம் இந்தப் போராட்டத்தின் தாக்க வன்மையைக் குறைப்பதற்கு அரசாங்கம்முற்பட்டிருக்கின்றது. கடந்த காலத்திலும் சிறிலங்கா அரசாங்கம் தனது பிரசாரத்தின் மூலம் சர்வதேச நாடுகளைத்தவறாக வழிநடத்தி தமிழ் மக்களை அழித்தொழித்துள்ளதைப் போல மீண்டும் தவறாக வழிநடத்தவே சிறிலங்கா அரசுமுற்பட்டிருக்கிறது.[/size]

[size=4]எனவே, அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சர்வதேச நாடுகளிடமும் அந்த நாடுகளின் பிரதிநிதிகளிடமும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைக்கின்றனர்.[/size]

[size=4]இனியாவது சிங்களஅரசாங்கத்தின் விசமத்தனமான பிரச்சாரங்களை நம்பாதீர்கள். தமிழ் மக்களை இனியாவது திரும்பிப்பாருங்கள். தமிழ்; மக்களின் ஜனநாயக உரிமைகளை அங்கிகரியுங்கள். மொழிகளாலும் மதங்களாலும் நிறங்களாலும் வேறுபட்டிருக்கின்ற போதிலும் மனிதர்கள் என்ற ரீதியில்தமிழ் மக்களாகிய நாங்களும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமையுடையவர்கள். சர்வதேச நாடுகளாகிய நீங்கள் ஒன்றிணைந்து எமது உரிமைகளை வழங்க முன்வரவேண்டும். முடியாவிட்டால,; தமிழர்கள் அனைவரையும் உலகின் ஏதாவதுஒரு மூலையில் ஒன்றாக சேர்த்துவிட்டு உங்களிடம் இருக்கின்ற சக்திவாய்ந்த எரிகுண்டுகளை எங்கள் மீது வீசிக்கொன்றுவிடுங்கள்.நிம்மதியாக நாம் செத்துத் தொலைகிறோம். ஏனெனில் சிறிலங்கா அரசாங்கத்தினதும் இனவெறி இராணுவத்தினதும் அடக்குமுறைகளுக்குள் தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதை விட,ஒரே நாளில் சாவது மேலானது.[/size]

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிக்கொடியை பறக்கவிடுவதன் மூலம் அரசு சொல்ல வரும் செய்தி: மேலைநாடுகளின் ஜனனாயகத்தின் செழுமை நிலை அங்கு பறந்து கொண்டிருந்த புலிக்கொடிகளால் அடையாளம் பெற்றிருந்தது. அப்படியே சொறிலங்காவிலும் புலிக்கொடி பறந்தால் அப்படி ஒரு அடையாளாம் தங்கள் ஜனனாயகத்திற்கும் கிடைக்கும் என்று நினைக்கின்றது.

வெள்ளைவான் வலம் வரும் வீதிகளுக்கு இப்படி ஒரு பேர் வைக்க சிங்களம் ஆசைப்படுகின்றது!

தமிழீழம் வேண்டும் என்று சொன்ன ஒருவன் ஒரு கைகால்களே இல்லாத ஊனமாக இருந்தாலும், அவனை கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லுகின்ற வெறியை தேசிய பக்தியாக பிரகடனப்படுத்திய சிங்களம் இப்படி சாதுவாக தன்னை உலகிற்கு காட்ட முனையும் ஆசை பூனை கண்ணை மூடி பாலைக் குடிப்பதைப் போல் இருக்கின்றது!

  • தொடங்கியவர்

[size=4]'புலம்பெயர் தேசங்களில் தமிழீழக்கொடியை பிடிப்பதன் மூலம் நாமே எமது அரசியல் தோல்விகளுக்கு வழிசமைக்கின்றோம்' என கூறுபவர்கள் தாயகத்தில் சிங்களம் பிடிக்கும் புலிக்கொடியைப்பற்றி தமது நாடுகளில் உள்ள மனித ஆர்வலர்கள், அரசில்வாதிகள், ஊடகவியலாளர்களிடம் தெரிவிப்பார்கள். [/size]

ஆம் இந்தக்கொடிக்குரிய சிறப்பும் ,முக்கியத்துவமும், தேவையும் இங்கே பிரதிபலிக்கிறது.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.