Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிமலரூபனின் உடலை நிபந்தனையுடன் ஒப்படைக்க உத்தரவு

Featured Replies

[size=5]நிமலரூபனின் உடலை நிபந்தனையுடன் ஒப்படைக்க உத்தரவு[/size]

[size=4]வவுனியா சிறைச்சாலைப் போராட்டத்தை தொடர்ந்து அனுராதபுரம் சிறைக்கும், அதன்பின்னர் மகர சிறைக்கும் மாற்றப்பட்டிருந்த நிலையில் அடிகாயங்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள தமிழ்க் கைதி நிமலரூபனின் சடலத்தை வவுனியாவில் அடக்கம் செய்வதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.[/size]

[size=5]நிமலரூபனின் இறுதிச்சடங்குகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதவாறு வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்(எஸ்எஸ்பி) கண்காணிப்பின்கீழ் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரிலேயே இந்த அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.[/size]

[size=4]நிமலரூபனின் சடலத்தை மகர பிரதேச எல்லைக்குள் தான் அடக்கம் செய்யவேண்டும் என்று மகர நீதவான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.[/size]

[size=4]எனினும் தமது மகனின் சடலத்தை தமது சொந்த ஊரான வவுனியாவில் தான் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நிமலரூபனின் பெற்றோர் தாக்கல்செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் சாலிய பீரிஸ் பிபிசியிடம் கூறினார்.[/size]

[size=4]இன்று சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் நீதிமன்றச் செயற்பாடுகள் முடங்கியிருக்கும் நிலையிலும், இந்த குறித்த மனுவை விசேட காரணம் கருதி, நீதிபதியின் பணிபீடத்தில் வைத்தே நீதிபதி விசாரித்ததாக சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.[/size]

[size=4]இதன்போது, அரச தரப்பு சட்டத்தரணி முன்வைத்த நிபந்தனைகளுக்கு நிமலரூபனின் பெற்றோர் இணங்கியதை அடுத்து, அவரது சடலத்தை எதிர்வரும் 23-ம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உச்சநீதிமன்றம் மகர நீதவான் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.[/size]

[size=3]

http://www.bbc.co.uk...alarooban.shtml[/size]

[size=3][size=1][size=2]'[/size][/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]தமது ஒரே பிள்ளையை அடக்கம் செய்ய பெற்றோருக்கு இருக்கும் அடிப்படை உரிமை கூட இந்த சிங்கள கொடியவர்களால் 'தேசிய பாதுகாப்பு' என்ற பெயரால் தடுக்கப்படுகின்றது. ஆனால், எந்த தடையையும் மீறி, மிரட்டி கையொப்பங்களையும் கேட்டபொழுதும் மறுத்த பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும் நன்றிகளும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இறந்த தமிழ்க் கைதியின் உடலைக் கூட வழங்காத அரசு தமிழ் மக்களுக்கு எவ்வாறு அரசியல் தீர்வை வழங்கும்; கேள்வி எழுப்புகிறார் சுவாமிநாதன் எம்.பி[/size]

[size=5]c8d0b1624990c2c078eab901a8d585e0.jpeg[/size]

[size=5]சிறையில் உயிரிழந்த தமிழரின் உடலைக் கூட குடும்பத்தினருக்கு வழங்காத மகிந்த அரசு எவ்வாறு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறது என ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இனவாதிகளின் கைக்குள் அகப்பட்டு சிறுபான்மை இன மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத இந்த அரசாங்கத்திடம்; சிறுபான்மையினருக்கான உரிமைகளை எதிர்பார்க்க முடியாது என்பதை நிமலரூபனின் கொலை எடுத்துக்காட்டுகிறது.

வவுனியா சிறைச்சாலையில் வைத்து கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் உயிரிழந்த கணேஷன் நிமலரூபனின் உடல் 16 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் பெற்றோர்களுக்கு கையளிக்கப்படவில்லை.

நிமலரூபன் தாக்கப்பட்ட நாள் முதல் பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீருடன் வாழ்க்கையை கழித்து வரும் இச்சந்தர்ப்பத்தில் நிமலரூபனின் உடலை அவரது குடும்பத்தினருக்கு வழங்கி சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன்,

தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அவர்களை இடமாற்றம் செய்து மக்களை ஏமாற்றிவிட்டது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்வதேச நாடுகள் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைக்கு மேல் கோரிக்கை விடப்பட்டுக் கொண்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் நிமலரூபனின் கொலை எதிர்காலத்தில் இலங்கை மீதான் சர்வதேச அழுத்தம் மேலும் வலுப்பெறுவதற்கு காரணியாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் கைதிகளை உடனடியாக விடுவித்து அதிகாரப்பகிர்வினை வழங்குவதற்கு ஆட்சியிலுள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை மேலும் பல சர்வதேச அழுத்தங்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=5]http://onlineuthayan.com/News_More.php?id=531301245620223497[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.