Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னையும், ஆறுமுகத்தையும், சாந்தினியையும் எதிர்ப்பதாக நினைத்துகொண்டு தமிழினத்தை அழிக்க முயல்கிறார்கள்: மனோ _

Featured Replies

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை அழிக்க வேண்டும் என்றும், இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டைமானை ஒழிக்க வேண்டும் என்றும், மலையக மக்கள் முன்னணி தலைவி சாந்தினி சந்திரசேகரனை எதிர்க்க வேண்டும் என்றும், நினைத்துகொண்டு சிலர் இன்று மலையக மக்களையே, ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிக்க முயல்கிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மலையக கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்று காலை இரத்தினபுரி சமுர்த்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதொகா பொதுசெயலாளர் ஆறுமுகன் தொண்டமான், மமமு தலைவி சாந்தினி சந்திரசேகரன் ஆகியோர் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒட்டுமொத்த தமிழ் அரசியல் தலைவர்களையும், தமிழ் ஊடகவியலாளர்களையும், தமிழ் ஊடக நிறுவனங்களையும், தமிழ் தொண்டு நிறுவன சமூக செயற்பாட்டாளர்களையும் பற்றி தெரு சண்டைக்காரன் போல் நாக்கில் நரம்பு இல்லாமல் வாயில் வந்ததை எல்லாம் பேசும் கலாச்சாரத்தை சிலர் இன்று முழு நேர தொழிலாக செய்கிறார்கள்.

இவர்களுக்கு முடியுமானால் என்னை அழிக்க முயற்சி செய்யலாம். நான் அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வந்தவன். இரும்பு மனிதனான என்னிடம் எதையும் தாங்கும் இதயம் இருக்கிறது. இந்த கூக்குரலுக்கெல்லாம் அஞ்சுபவன், நான் அல்ல. என்னை திட்ட, திட்ட, என்மீது பழி சுமத்த, சுமத்த, எனக்கு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்னமும் ஆதரவும், அனுதாபமும் அதிகரிக்குமே தவிர வேறு எதுவும் நடக்காது.

ஆனால் எம்மை அழிப்பதாக நினைத்துக்கொண்டு, சப்ரகமுவ மாகாணத்தில் வாழும் அப்பாவி மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு இவர்கள் வேட்டு வைக்கிறார்கள். இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வாழும் மலையக மக்களின் தமிழ் பிரதிநிதித்துவ கனவை இவர்கள் கலைக்க நினக்கிறார்கள். பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப, எமது மக்களின் வாக்குகளை சூறையாடி, சிதறடித்து, சின்னாபின்னமாக்க முயல்கிறார்கள். இந்த பாதக செயலை இவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இரத்தினபுரி, கேகாலை மாவட்ட மலையக மக்கள் அரசியலில்தான் இன்று அனாதைகளாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சமூகரீதியாக சொந்தபந்தங்கள் இருக்கிறார்கள். நுவரேலிய மாவட்டத்தில் வாழும், தமிழ் தோட்ட தொழிலார்கள், சப்ரகமுவ மாகாண மலையக தமிழ் மக்களின் உடன் பிறப்புகள், சொந்தபந்த உறவுகள் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்.

ஒட்டுமொத்த தமிழ் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் கொச்சைப்படுத்தும் உங்களது கீழ்த்தர பிரச்சாரத்தை நீங்கள் நிறுத்தாவிட்டால், நாளை நுவரெலிய மாவட்ட மலையக மக்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிவரும். அந்த நிலைமையை நாம் உருவாக்குவோம்.

இதொகா மீது எமக்கு எப்போதும் இருக்கும் விமர்சனம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் அவர்களுக்கும் எம்மீது விமர்சனம் இருக்கிறது. அதேபோல்தான் மலையக மக்கள் முன்னணிக்கும் எங்கள் மீது விமர்சனம் இருக்கிறது. குறிப்பாக இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படும் எமக்கு அவர்கள் மீதும், ஆளும் அரசில் பங்காளி கட்சிகளான அவர்களுக்கு எங்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் இருப்பது பகிரங்க உண்மை.இந்த பொது முயற்சியில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று கட்சிகளும் தமது அரசு எதிர்ப்பு, அரசு ஆதரவு நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி செயலாற்றுகிறோம். இதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது.

உண்மையில், சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு ஒரு கூட்டணியே அல்ல. அது மலையக சிவில் சமூகத்தின் முன்முயற்சியினால் உருவாகியுள்ள பொது வேட்பாளர் பட்டியலாகும். ஆளும் அரசில் பங்காளியாக இருக்கும் இதொகா மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன், இந்த அரசை வீழ்த்தவேண்டும் என பகிரங்கமாக போராடும் பிரதான ஒரு எதிர்கட்சியான எமது கட்சி, ஒரு அரசியல் கூட்டணியை அமைக்க முடியாது. ஆனால், எமது தனித்துவங்களை பாதுகாத்துக்கொண்டு நாம் பொது வேட்பாளர் பட்டியலை சமர்பிக்கலாம். இன்று சப்ரகமுவையில் அரசியல் அனாதைகளாக வாழும் அப்பாவி மலையக தமிழ் மக்களின் நல்வாழ்வு கருதி, நாம் அதை செய்து காட்டியுள்ளோம்.

எங்களை பாராட்டத்தான் முடியவில்லை. எங்களுக்கு உதவி, ஒத்தாசை செய்யத்தான் முடியவில்லை. எங்களை, குறிப்பாக என்னை, குரோத உணர்வுடன், காழ்ப்புணர்ச்சியுடன் கொச்சைபடுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா?

எமது முயற்சிகளை திரித்து, அதுபற்றி பொய் உரைத்து அதை மகாபாதக செயலாக காட்ட சிலர் முயற்சி செய்கிறார்கள். அரசில் பங்காளியாக இருக்கும் முஸ்லிம் காங்கிரசுடன், கூட்டை ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கடைசிவரை நல்லெண்ணத்துடன் முயற்சி எடுத்தது. இது நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கு தெரியும். இன்று, அரசியல் பேதங்களுக்கு அப்பால் சென்று தமிழ் பேசும் தலைவர்களே ஒன்று கூடுங்கள், என்று நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள் கோஷம் எழுப்புகிறார்கள். இதைதான் நாம் இரத்தினபுரியில் ஒரு பொது பட்டியலை சமர்ப்பித்து செய்கின்றோம். எமது அடிப்படை கொள்கைகளை அடகு வைக்காமல் செய்கின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39574

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.