Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்ற உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்விலிருந்து படங்கள்....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்ற உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்விலிருந்து தற்பொழுது கிடைக்கும் படங்கள்....!

549609_4341564026153_1907391179_n.jpg

547900_4341558106005_1030922935_n.jpg

552562_4341550065804_259283736_n.jpg

304738_4341483264134_2129964004_n.jpg

562696_4341471463839_999561378_n.jpg

389091_4341466663719_309349060_n.jpg

சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12;உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துகிறார். 1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் 2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரனை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். இதில் தமிழீழ மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் தமிழனவழிப்பு நடவடிக்கை என்பன உள்ளடக்கப்படல் வேண்டும். 3. தமிழீழத்தில் அதிவேகமாக நடைபெற்று வரும் சிங்கள நிலஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். 4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும். அவர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட்டு அனைத்துலக அபய நிறுவனங்கள் அவர்களை தொடர்ச்சியாக சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும். 5. தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவிற்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை திருப்பி அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும். கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து எமது மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையை அனைத்துலக மட்டத்தில் எடுத்துச் செல்லப்படக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் எம்மக்கள் அனைவரையும் திரண்டு வந்து ஆதரவு நல்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.