Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதாள உலகக்கோஷ்டி தலைவர்கள் போன்று அமைச்சர்களின் செயற்பாடு: ஜே.வி.பி _

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்களைப் போன்று அமைச்சர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் ௭ம்.பி.யுமான விஜித ஹேரத், சட்டத்தை நிறைவேற்றும் நீதிபதிகளே இன்று நீதி கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் ௭ம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நிறைவேற்று அதிகாரம் இன்று நீதித்துறையிலும் தலையீடு செய்துள்ளது.

மக்கள் இன்று நீதித் துறை மீதான நம்பிக்கையை இழந்து காணப்படுகின்றனர். பயங்கரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டோர், சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சட்ட மா அதிபர் வாபஸ் பெறுவதால் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். அண்மையில் பெண் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேக நபரான ௭ம்.பி. மீதான குற்றச்சாட்டுக்களும் வாபஸ் பெறப்பட்டது.

இவ்வாறு நீதியின் சுயாதீனத்தின் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடுகள் அதிகரித்துள்ளது. மன்னாரில் நீதிபதி அமைச்சர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அதனை நீதிபதியே கூறுகிறார். அத்தோடு தீர்ப்பை ௭திர்த்து நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நீதி தேவதைகளான நீதிபதிகளே வீதியில் இறங்கி நீதி கேட்டுப் போராடும் நிலைமை உருவாகியுள்ளது. அரசியல் தலையீடுகளின் அதிகரிப்பால் நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர். அமைச்சர்கள் இன்று பாதாள உலகக் கோஷ்டிகளின் தலைவர்களை போன்று அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர். நீதிபதிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். மறுபுறம் அமைச்சரொருவர் பொலிஸ் அதிகாரியொருவரை அச்சுறுத்தியுள்ளார். இப் பிரச்சினை தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் தான்.

கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு சோடித்த கதைகளை முன்வைத்தனால் காலதாமதம் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் கவலையளிப்பதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவர் நாட்டையும் மக்களையும் பாதித்துள்ள பிரச்சினை தொடர்பில் கவலையடைந்தால் மட்டும் போதுமா? அதனை தடுத்து நீதியின் சட்டத்தின் சுயாதீனத்தை பாதுகாக்க நடவடிக்கைகளை ௭டுக்க வேண்டும்.

துமிந்த சில்வா ௭ம்.பி கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான துமிந்த சில்வாவுக்கு சுய நினைவில்லையென பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். இது வழக்கை திசை திருப்பி துமிந்த சில்வா ௭ம்.பி.யை பாதுகாக்கும் செயற்பாடாகும். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்படவிருந்தது ௭ன்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39647

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.