Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடனட்டை [Credit Card] என்றாலே பிரச்சனைகள் மட்டும் தானா!

Featured Replies

டனட்டை பற்றிய செய்தி என்றால் அது பெரும்பாலும் மோசடி, விரயம், ஆபத்து, ஏமாற்றல் என்று எதிர்மறையான செய்திகளே நம் கண்களுக்குத் தெரிகிறது, அது உண்மையும் கூட. எளிதாக கிடைக்கிறது என்றால் அதில் வில்லங்கம் இல்லாமலா இருக்கும். சும்மா கொடுக்க வங்கிகள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்லவே! கடனட்டையால் ஏற்படும் சிரமங்களைப் பற்றி, அதில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். நான் புதிதாகக் கூற எதுவுமில்லை.

இந்தக் கட்டுரையில், கடனட்டையால் என்னென்ன பயன் என்பதைப் பார்ப்போம், அதோடு நாம் எப்படி இதை வைத்து லாபம் அடையலாம் என்று கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, செலவுகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் / கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால், இந்தக் கடனட்டையால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, லாபம் மட்டுமே என்று உறுதியாகக் கூறுவேன்.

முதலில் எந்த வங்கியில் கடனட்டை வாங்குவது என்பதை, நம் நண்பர்களின் அனுபவத்தில் வைத்து அவர்களிடம் ஆலோசனைகள் கேட்கலாம். எந்த வங்கி பிரச்சனையில்லாமல் இருக்கிறது, எது சிறப்பான வாடிக்கையாளர் சேவை தருகிறது என்பதை விசாரிக்க வேண்டும்.

ஒருவருக்கு பிரச்சனையில்லாமல் இருக்கும் வங்கி, இன்னொருவருக்கு மோசமான அனுபவத்தை தந்து இருக்கலாம். எனவே, நீங்கள் தீர விசாரித்து, வங்கியைத் தேர்வு செய்யலாம். நான் HDFC வங்கியின் கடனட்டையை, கடந்த 8 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். இது வரை எனக்கு எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை.

ஒருமுறை சென்னை முகவரியில் இருந்து, எங்கள் ஊர் கோபி முகவரிக்கு மாற்றும் போது, கோபியில் கிளை இல்லை (தற்போது உள்ளது) அதனால், அங்கே மாற்ற முடியாது என்று கூறியதோடு, உடனடியாக முகவரி உறுதிச் சான்றிதலை கொடுக்கவில்லை என்றால், என் கடனட்டையை ரத்து செய்து விடுவதாகக் கூறினார்கள் (இந்த சமயத்தில் நான் சென்னையில் இல்லை, சிங்கப்பூர் வந்து விட்டேன்). செம்ம கடுப்பாகி விட்டேன்.

நான் இவர்களை நம்பி இல்லை, HDFC இல்லைனா இன்னொரு வங்கி. இவர்கள் தான் என்னைப் போன்றவர்களை நம்பி இருக்கிறார்கள் என்பதால், நான் அது வரை செய்த கடனட்டை பரிவர்த்தனைகளைக் கூறி, உங்கள் கடனட்டையின் மூலம் இவ்வளவு பரிவர்த்தனை செய்து இருக்கிறேன். இது வரை நான் எந்தப் பிரச்சனையும் செய்தது இல்லை. என்னை நீக்கினால் உங்களுக்கு தான் நஷ்டம், எனக்கு அல்ல. ஒரு நீண்ட நாள் வாடிக்கையாளரை இப்படித்தான் பொறுப்பில்லாமல் நடத்துவீர்களா! என்று போட்டு காய்ச்சியவுடன் வேறு வழியின் மூலம் யோசனை கூறி, அதன் படி நடந்தால் மாற்றித்தருவதாகக் கூறினார்கள்.

இது போல எந்த ஒரு வாய்ப்பும் வழங்காமல், நீங்கள் எப்படி எடுத்த உடனே, கணக்கை முடக்குவதாகக் கூறலாம்? நான் கடனட்டை மட்டுமல்ல, உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கும் வைத்துள்ளேன் என்று கூறியதும், பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தொடர அனுமதித்தார்கள். இது மட்டுமே எனக்கு நடந்த சிறு பிரச்சனை, மற்றபடி இது வரை சிறப்பான சேவையை வழங்கி வருகிறார்கள். நிஜமாகவே ஒரு பிரச்சனை கூட (எனக்கு) இல்லை.

கடனட்டை வாங்கும் போது, முதல் இரண்டு அல்லது மூன்று வருடம் வருடாந்திரக் கட்டணம் இல்லை என்று கூறுவார்கள். ஒரு சிலர் வாழ்நாள் முழுக்க கட்டணமில்லை என்று கூறுவார்கள். நாம் அவர்களிடம் டிமாண்ட் செய்யலாம், “நீங்கள் வாழ்நாள் முழுக்க கட்டணம் இல்லாமல் கொடுத்தால், பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறலாம். அதே போல அவர்கள் கொடுக்கும் போது ” * ” எங்கும் வைத்துள்ளார்களா / வேறு எதுவும் மறைமுகமாக கூறி உள்ளார்களா என்பதை நன்கு சோதித்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு இரண்டு வருடம் இலவசமாக கொடுத்து இருக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். நீங்கள், உங்கள் கடனட்டையை சிறப்பாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்கு பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்றால், இரண்டு வருடம் கழித்து அவர்கள் கட்டணம் போட்டால், நீங்கள் “இந்தக் கட்டணத்தை எடுத்தால் நான் தொடர்கிறேன், இல்லை என்றால் கடனட்டையை ரத்து செய்கிறேன்” என்று கூறினால், உங்களுக்கு பெரும்பாலும் 90 % கட்டணம் விதிக்காமல் தொடர அனுமதிப்பார்கள்.

என்னுடைய கடனட்டை / ATM அட்டை இரண்டின் கடவுச்சொல்லும் ஒன்றையே வைத்து இருந்தேன் (தற்போது மாற்றி விட்டேன்). சென்னையில் இருந்த போது ஒருமுறை, இரண்டிற்கும் ஒரே கடவுச்சொல் என்பதால் ATM ல், கடனட்டையை வைத்து, மறந்து பணம் எடுத்து விட்டேன். பின்னர் தான் தவறு உரைத்தது, உடனே பணத்தை அதில் டெபாசிட் செய்து விட்டேன் ஆனால், அடுத்த மாதம் அதற்கு வட்டி போட்டு விட்டார்கள். கடனட்டையில் எடுத்தால் கட்டணம் அதிகம், பின்னர் அவர்களுக்கு இது போல எதிர்பாராமல் எடுத்து விட்டேன், திரும்ப பணத்தை உடனே செலுத்தி விட்டேன். எனவே, வட்டியை திரும்ப டெபாசிட் செய்யுங்கள் என்று வாடிக்கையாளர் சேவைக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இரண்டு நாட்களில் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

கடனட்டையின் மூலம் நீங்கள் 50 நாட்களுக்கு வட்டியில்லாமல் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, தற்போது உங்களுக்கு அவசரமாக தள்ளுபடியில் தொலைக்காட்சி வாங்க வேண்டும் ஆனால், பணம் அடுத்த மாதம் தான் வரும். இந்த சமயத்தில் மற்றவரிடத்தில் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் உங்கள் கடனட்டையை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம். அடுத்த மாதம் சம்பளம் வந்ததும் செலுத்தி விடலாம். பெரும்பாலான கடைகளில் கடனட்டை பயன்படுத்தி வாங்கினால், கூடுதல் பணம் வசூலிப்பார்கள். எனவே, தீர விசாரிக்க வேண்டும்.

இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, உங்களுடைய பில்லிங் சைக்கிள் எந்த தேதியில் இருந்து ஆரம்பித்து, எந்த தேதியில் முடிகிறது என்பதை சரியாக நினைவு வைத்து இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு, மாதத்தின் 5 ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 4 ம் தேதி வரை பில்லிங் சைக்கிள் என்றால், நீங்கள் கட்டணம் கட்ட வேண்டியது 25 ம் (Due date) தேதி போல வரும். தற்போது நீங்கள் இந்த மாதம் 6 ம் தேதி பொருள் வாங்கினால், அடுத்த மாதம் 25 ம் தான் இதற்கு பணம் கட்ட வேண்டியது வரும். இது தான் அந்த 50 நாள் icon_smile.gif . நீங்கள் 4 ம் தேதி வாங்கினால், இந்த மாத 25 ம் தேதியே கட்ட வேண்டி வரும், இதன் காரணமாக இருபது நாள் தான் உங்களுக்கு கிடைக்கும்.

எனக்கு விமானப் பயணச் சீட்டு மற்றும் பல்வேறு பொருட்கள், அவசரத்திற்கு கடனில்லாமல் வாங்க பெரும் துணை புரிந்து இருக்கிறது. இதன் மூலம் பணம் இல்லாமலே, கடன் வாங்காமலே பொருட்கள் / பயணச் சீட்டு வாங்கி இருக்கிறேன்.

கடனட்டையில் உங்களால் முழுவதும் ஒரே சமயத்தில் கட்ட முடியவில்லை என்றால், குறைந்த பட்சக் கட்டணம் செலுத்தி மீதியை அடுத்த மாதம் கட்டலாம் ஆனால், இதற்கு கட்டணம் அதிகம். இதில் தான் அனைவரும் மாட்டிக்கொள்கிறார்கள். வங்கிக்கும் இவை தான் நல்ல லாபம், பரிவர்த்தனையை விட. பெரும்பாலனவர்கள் வட்டி கட்டித்தான் கட்டுவார்கள். இது போல மட்டும் செய்யவே கூடாது. கூடுமானவரை சரியான Due date ல் கட்டி விட வேண்டும்.

நாம் திட்டமிட்டு இதில் செலவு செய்தால், இது போல கட்ட முடியாமல் போகும் சூழ்நிலையே வராது. நான் கடந்த 8 வருடத்தில் ஒரு முறை கூட வட்டி கட்டியதில்லை icon_smile.gif ஆனால், ஏகப்பட்ட பரிவர்த்தனைகள் இதன் மூலம் தான் செய்து இருக்கிறேன், இன்னும் கூறப்போனால் எங்கெல்லாம் கடனட்டையை பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் கடனட்டை தான் பயன்படுத்துவேன்.

இணையம் வந்த பிறகு, அனைவரும் இணையத்தில் தான், பண பரிவர்த்தனை செய்கிறார்கள். இதனால் கடனட்டை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. எது செய்தாலும் கடனட்டை கேட்கிறார்கள், எனவே இன்னும் சில வருடங்கள் சென்றால், கடனட்டை இல்லை என்றால், நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை வரும்.

நாம் அதிகபட்சம் இவ்வளவு தான் செலவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கும். நீங்கள் அதிகம் கடனட்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுடைய லிமிட்டை அதிகரிக்க, வங்கியில் கேட்பார்கள். இந்த சமயங்களில் கூடுமானவரை அதிகப்படுத்திக் கொள்ளாமல் நமக்கு தேவையான அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பயனும் பாதுகாப்பும்

நீங்கள் கையில் அதிகம் பணம் வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை அதோடு, இது போல வாங்குவதால் உங்களுக்கு ரிவார்ட் பாய்ண்ட்ஸ் கிடைக்கும். இதை நீங்கள் பின்னர் பயன்படுத்தலாம். நம்ம பணத்தை செலவு செய்ய நமக்கு பரிசு கொடுக்கிறார்கள் / தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம் icon_smile.gif . அவசரத் தேவைக்கு மிக மிக பயனுள்ளது.

கடனட்டையை வாங்குவது மட்டுமல்ல அதை பாதுகாப்பாகவும் வைத்து இருக்க வேண்டும். கடனட்டையின் பின்புறம் CVV (Card Verification Value) எண் இருக்கும். இதை யாரிடமும் கூறக்கூடாது அதோடு நண்பர்களுக்கும் கொடுக்கக் கூடாது (நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து). நான் சென்னையில் இருந்த போது இந்த எண்ணை, வேறு இடத்தில் சேமித்து விட்டு இதில் நீக்கி விடுவேன், யாரும் பார்க்க முடியாத படி. இதை வைத்து இணையத்தில் நாம் என்ன வேண்டும் என்றாலும் செய்ய முடியும். எனவே பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

தற்போது வங்கிகள் கூடுதல் பாதுகாப்பாக இணைய பரிவர்த்தனை செய்யும் போது (CVV இல்லாமல் கூடுதலாக) கடவுச்சொல் கேட்கிறது. எனவே இது தெரியாமல் வேறு ஒருவரால் பரிவர்த்தனை செய்ய முடியாது. ஒருவேளை யாராவது திருடி, இதில் தவறான கடவுச்சொல் பயன்படுத்தினால் லாக் ஆகி விடும். அதே போல வாடிக்கையாளர் சேவை பிரிவிற்கு எச்சரிக்கை சென்று விடும். அவர்கள் நம்முடைய தொலைபேசியில் அழைத்து, பரிவர்த்தனை செய்தது நாம் தானா இல்லை வேறு யாருமா என்று உறுதி செய்து கொள்வார்கள். இது வங்கிக்கு வங்கி வேறுபடும். HDFC யில் இது உள்ளது.

ஒருமுறை சிங்கப்பூரில் இருந்து பயன்படுத்தும் போது (வேறு நாடு என்பதால்) என்னை தொடர்பு கொண்டு, பரிவர்த்தனை செய்தது நான் தானா என்று உறுதி செய்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல கடனட்டையை பயன்படுத்தினால், உடனே எவ்வளவுக்கு செலவு செய்தோம் என்ற குறுந்தகவல் (SMS), நம் கை தொலைபேசிக்கு உடனே வந்து விடும்.

வேறு யாரும் பயன்படுத்தினால் / உங்க கடனட்டை திருடப்பட்டால், உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, உங்கள் கணக்கை முடக்கி விடலாம்.

இலவசமாகத் தருகிறார்கள் என்று, கண்டபடி ஏகப்பட்ட கடனட்டை வாங்கி வைத்துக்கொள்ளக்கூடாது. இது சிக்கலில் விட்டு விடும், அதோடு நமக்கு ட்ராக் செய்யவும் சிரமமாக இருக்கும். ஒன்றே போதும், அதிக பட்சமாக இரண்டு வைத்துக்கொள்ளலாம் (for Backup).

பொதுவாக கடனட்டை என்பதால், நமக்கு செலவு வைக்கும் என்பது உண்மை தான். நான் இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், சில நேரங்களில் இதில் செலவு செய்ததை மறந்து விடுவேன். இந்த நேரத்தில் சிக்கலாக இருக்கும். இது எப்போதாவது தான் நடக்கும் என்பதால் விட்டு விடலாம், மற்றபடி ரொம்பப் பயனுள்ளது. இதில் Master, Visa என்று உள்ளது. இது பற்றி பின்னர் கூறுகிறேன்.

நம்முடைய மின்சாரம், தொலைபேசி மற்றும் பல்வேறு கட்டணங்களை இதன் மூலம் எளிதாக செலுத்தலாம். இதற்கு கட்டணம் எதுவும் வங்கி வசூலிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பெரும்பாலும் யாரும் வசூலிக்க மாட்டார்கள். அப்படி வசூலிப்பார்கள் என்றால் டாடா பை பை தான் icon_smile.gif . நம்ம ஐந்து காசு தேவையில்லாம செலவு செய்து விடக்கூடாது. உஷார்! icon_smile.gif இவங்க கிட்ட இருந்து எவ்வளவு வசதிகளைப் / சேவைகளைப் பயன்படுத்த முடியுமோ! அவ்வளவையும் பயன்படுத்தி விட்டுத்தான் மறு வேலை. என்னால் இவர்களுக்கு பரிவர்த்தனையால் மட்டுமே லாபம், மற்றபடி ஐந்து பைசா கூட விட மாட்டேன்.

மாதாமாதம் கண்கொத்தி பாம்பாக பில்லை கவனிக்க வேண்டும். ஏதாவது நமக்குத் தெரியாத பரிவர்த்தனை நடந்துள்ளதா என்று! வருடாந்திரக் கட்டணம் இல்லை என்று கூறி விட்டு, சத்தமில்லாமல் இதில் சேர்த்து விடுவார்கள். நாமும் பல செலவுகளில் இதை கவனிக்காமல் விட்டு விடுவோம். கவனித்துக் கேட்டால், “சாரி சார்! தெரியாமல் வந்து விட்டது, உங்களது பணத்தை திருப்பி விடுகிறோம்” என்று எஸ்கேப் ஆகி விடுவார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

கடனட்டை பயனற்றது என்பது பேத்தல். பயன்படுத்த தெரியவில்லை என்றால் எதுவும் வீண் தான்.

http://www.giriblog.com/2012/07/credit-card.html

நீங்கள் சொல்வது சரி ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.