Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்.திருமா அவர்கள் மிக அபாயகரமான அரசியல் தலீவர்..? அல்லது பெரிய காமடி பீசா..?! ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

தொல்.திருமா அவர்கள் மிக அபாயகரமான அரசியல் தலீவர்..? அல்லது பெரிய காமடி பீசா..?! ஈழதேசம் பார்வையில்..!

நான் எனக்காக குவாட்டர் கேட்கவில்லை..? நான் எனக்காக தங்கம் கேட்கவில்லை..?! என்று சொல்வது சரியாகத் தானே இருக்கும்..? தலித் தலைவர் தொல்,திருமா..?! அவர்களின் 'தங்கம்' வேட்டை என்னவாக இருக்கும். ? நான் எப்பொழுதும் டாஸ்மாக் கடைக்கு போவது என்னை வளப்படுத்திக் கொள்ளவும்,எனது சிந்தனைகளை செழுமைப்படுத்திக் கொள்ளவுமே தவிர, கொலை செய்யவோ, பல்வேறு குற்றங்கள் செய்யவோ அல்ல என்று சொன்னால் எவ்வளவு அளவிற்கு நம்புவீர்களோ..? அதுபோல இந்த தங்க வேட்டை ஆடும் தொல்.திருமா அவர்களின் சப்பை காரணத்தையும் நம்புவீர்களா..? என்பதெல்லாம் ஒரு விசயம் அல்ல.

நான் எனக்காக தங்கத்தை கேட்கவில்லை. தங்கத்தின் மீது எனக்கு என்றுமே ஈர்ப்பு இருந்ததில்லை என்று தொல். திருமா அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். எங்கே..? வேலூர் மாவட்ட வி.சி.யின் சார்பில் ஒரு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில். வேலூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் தங்க பொற்காசுகளை வழங்கினார்கள் தொல்.திருமா அவர்களுக்கு. தலித் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் தொல். திருமா அவர்கள் தங்க பொற்காசுகளை பெற்றுக்கொண்டு இவ்வாறு மாட்டுலாடினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிதி திரட்ட வேண்டும் என்ற எனது விருப்பத்திற்கு, எனது 50 - வது பிறந்த நாள் விழாவில், எனது கட்சி பொறுப்பாளர்களிடம் பணம்,பூமாலை, சால்வை மற்றும் எதுக்கும் உதவாத துண்டுகளை போட வேண்டாம், இவ்வளவு செலவு செய்து கொடுக்கும் இந்த மேற்கண்ட பொருட்களுக்குப் பதிலாக தங்கத்தை வழங்குங்கள் என்று கேட்டுள்ளார் தொல்,திருமா அவர்கள்.

பிறகு தனது தவறை உணர்ந்த திருமா அவர்கள், ஒரு சப்பை காரணத்தை 'திருக்குறள் பொழிப்புரை' அளவிற்கு விளக்கியுள்ளார். அதாவது நான் எனக்காக தங்கத்தை கேட்கவில்லை. தங்கத்தின் மீது எனக்கு என்றுமே ஈர்ப்பு இருந்ததில்லை. அரசு ஊழியராக நான் 11 ஆண்டுகள் பணியாற்றிய காலத்திலும் வறுமையில் இருந்த எனது குடும்பத்திற்காக செலவு செய்யவில்லை. பெறுகிற சம்பளத்தை இந்த மக்களுக்காகவே பயன்படுத்தினேன்

என்றெல்லாம் கூறிவிட்டு பேசாமல் இருந்திருக்கலாம் தலித் தலைவர் தொல்.திருமா அவர்கள்.

ஆனால் என்ன செய்வது..? அவரே காரணங்களை பின்வருமாறு செப்புகிறார். ஒரு கட்சிக்கு கொள்கை வலிமை எவ்வளவு முக்கியமோ..? அதுபோல் பொருளாதார வலிமையையும் முக்கியம். இந்த கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால், உண்மையான கொள்கை வலிமையோடு இயங்க வேண்டும் என்றால், அதற்கு பொருளாதார வலிமை வேண்டும் என்று கூறி இருக்கிறார் தொல்.திருமா அவர்கள்.

அப்படியென்றால் இயல்பாகவே வரும் யோசனை என்னவென்றால், பொருளாதார வலிமை உள்ள கட்சிகள் இந்தியாவில் தான் நிறைய உள்ளன. அமெரிக்காவில் இல்லை,இங்கிலாந்தில் இல்லை. காங்கிரஸ் கட்சியின் பொருளாதார நிலைமை எக்கச்சக்கம். அதைவிட சங் பரிவார் கட்சின் பொருளாதார நிலைமைகள் சுவிஸ் வங்கியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம், அதைவிட தமிழ் மொழியை, தமிழர்களை உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகத்தில் ஆசியாவின் பெரிய பணக்கார கட்சி என்ற சிறப்பு பட்டம் வேறு பெற்று இருக்கிறார்கள்.

எதற்கு நீங்கள் இனிமேல் தங்கம் வாங்கி கட்சியின் பொருளாதார வலிமையை உருவாக்க வேண்டும்..? மேலும் நீங்கள் இப்பொழுது தான் சிறுக சிறுக தங்கம் சேர்த்து வருகிறீர்கள்..? எப்போ பெரிய அளவில் தங்கம் வாங்கி, பிறகு பொருளாதாரத்தை வளர்த்து...அட போங்கப்பா..! என்று உங்கள் கட்சித் தொண்டர்கள் வேறு கட்சிக்கு போய் விடமாட்டார்களா..? என்ன.

மேலும், உங்களின் கட்சி பொருளாதார வலிமை பெற்று என்ன செய்து விடப் போகிறீர்கள் இந்தியாவில் - தமிழகத்தில்..? ஏனென்றால் தமிழகத்தில் இந்தியாவில் உங்கள் கட்சியைவிட பொருளாதார வலிமை பெற்ற கட்சிகள் எல்லாம் இதுகாலம் வரை சும்மாத் தானே இருக்கிறார்கள்..!

மாயாண்டிக்கருப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சோந்திகள் .....

பிழைவிட்டால் சுட்டிக்காட்டுவது, கண்டிப்பது நல்லது.

ஆனால் தமது கட்சிக்கு வேண்டியதை அவர் செய்கிறார்.

அதில் ஏன் மயாண்டி[size=5]க்[/size]கருப்பு வருத்தப்படுகிறார்??

Edited by மின்னல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.