Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளைப் போல் பேச்சில் அழுத்தம் தருவது தவறு அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தெரிவுக்குழுதான் பத்திரிகை ஆசிரியர்கள் முன் சீறினார் ஜனாதிபதி

Featured Replies

[size=4][size=5]புலிகளைப் போல் பேச்சில் அழுத்தம் தருவது தவறு

அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தெரிவுக்குழுதான் பத்திரிகை ஆசிரியர்கள் முன் சீறினார் ஜனாதிபதி[/size]

வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. [/size]

[size=4]இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை.[/size]

[size=4]தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரே சிறந்த இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். புலிகளைப் போன்று பேச்சுக்கு வராமல் நிபந்தனைகளை விதித்து வேறுவிதமான அழுத்தங்களை வழங்குவது பெரும் தவறான விடயம். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வராத கட்சி தேசியப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தவறிய ஒரு தரப்பாகவே கருதப்படும்.

இவ்வாறு நேற்று கடுந்தொனியில் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

பத்திரிகை ஆசிரியர்களுடன் நேற்றுக்காலை அலரி மாளிகையில் நடத்திய சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்ட ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகள் உள்ளடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடம். இதற்காக அனைத்துக் கட்சிகளும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடவேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சினை.

புலிகள் போல் நிபந்தனைகளை விதித்துக்கொண்டு பேச்சுக்கு வராமல் வேறு அழுத்தங்களைக் கொடுப்பது தவறு. உலகத் தலைவர்களுடன் நான் பேச்சுகளை நடத்தும் போது இந்த நிலைமையைத்தான் விளக்கிக் கூறுகிறேன். இது எனது தனிப்பட்ட விடயமல்ல. இது அனைவரினதும் பொறுப்பு. இதற்கு முன்வராத கட்சி பொறுப்பிலிருந்து தவறிய ஒரு கட்சியாகவே கருதப்படும்.

தேர்தல் தேவைதான்

தேர்தலை நாங்கள் நடத்துவதால் சிவில் சமூக அமைப்புகளுக்குப் பிரச்சினை. தேர்தல் நடத்தாவிட்டாலும் சிவில் அமைப்புகள் கூக்குரலிடும். தேர்தல் வேண்டாமென்று ஓர் எதிர்க்கட்சி நீதிமன்றம் செல்வதை இங்குதான் முதற்றடவையாகப் பார்த்திருக்கின்றேன்.

நாங்கள் தேர்தலுக்குப் பயந்தவர்கள் அல்லர். மக்களின் கருத்தை நாம் அவ்வப்போது அறியவேண்டியிருப்பதால் தேர்தலை நடத்துவதில் தவறில்லை. தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை.

கட்டுப்பாடு

இணைய ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படும் சேறு பூசும் செயற்பாடுகள் குறித்து அரசு முழுக்கவனமும் கொண்டுள்ளது. ஊடகத் தர்மத்தை மீறும் எவரும் தாம் செய்வது சரியா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காகத் தான்தோன்றித்தனமாக செயற்படக்கூடாது.

எப்போதும் நாங்கள் இந்தியாவுடன் சிநேகபூர்வ முறையில் செயற்பட்டு வருகிறோம். பல்வேறு சிக்கல்கள் குறித்து நாம் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி வருகிறோம். அண்மையில் நான் இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் பேச்சு நடத்தியபோது என்னுடன் இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிலைமைகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு கையாளும். எவ்வாறாயினும், எமது நாட்டின் பாதுகாப்பு, இறைமை எவருக்கும் தாரைவார்க்கப்படமாட்டாது. எந்த சக்திக்கும் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

தமிழ்நாட்டில் பிரச்சினைகள் இருந்தாலும் அது எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் மத்தியஅரசுடன்தான் தொடர்புட்டு செயற்பட்டு வருகிறோம். நாங்கள் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=307271277931717059

  • தொடங்கியவர்

[size=5]தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை; சம்பந்தன் திட்டவட்ட அறிவிப்பு[/size]

[size=2][size=4]இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.[/size][/size]

[size=2][size=4]இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.[/size][/size]

[size=2][size=4]மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு நடத்தும் பேச்சு நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.[/size][/size]

[size=2][size=4]திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரியாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவிததார்.[/size][/size]

[size=2][size=4]அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு [/size][/size]

[size=2][size=4]அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பேச்சை அரசுடன் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், பேச்சு நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதான பேச்சாக இருக்கக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழிப்புடன் இருக்கின்றது.[/size][/size]

[size=2][size=4]அண்மையில் கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து நடத்திய கலந்துரையாடல்களின் போதும் இது பற்றி நாம் தெளிவாகக் கூறியிருந்தோம்.[/size][/size]

[size=2][size=4]அரசுடன் இதுவரை நடத்திய பேச்சுகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான தனது அடிப்படை நிலைப்பாட்டைத் தெளிவாக எழுத்து மூலம் முன்வைத்தது. அரசு தனது பதிலைத் தருவதாகத் தெரிவித்தது. இன்னும் அதற்கான பதிலைத் தரவில்லை. அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளது.[/size][/size]

[size=2][size=4]இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக்கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்ககூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இன்று நாட்டின் எல்லைகளை தாண்டி சர்வதேசத்தின் கூர்மையான பார்வைக்கு சென்றுள்ளது என்றார்.[/size][/size]

[size=2][size=4]திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நடைபெற்ற இக்கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். [/size][/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.