Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகியோரையும் மீள்குடியேற்றிய பின்னரே வடக்கில் தேர்தல்! - ஜனாதிபதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-seithy_150.jpg

[size=4]இலங்கையின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாத்திரம் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு பாராளுமன்றத்தின் மூலமே நிரந்தரமான இறுதித் தீர்வை காண முடியும். எனவே, கூட்டமைப்பினர் புலிகள் போன்று புதிய நிபந்தனைகளை விதித்து, பேச்சுவார்த்தைகளை தட்டிக் கழிப்பது தவறு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.[/size]

[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமன்றி இந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை. எனவே, சகல அரசியல் கட்சிகளுக்கும் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக தீர்த்து வைக்கும் கடமையும், பொறுப்பும் இருக்கிறது.[/size]

[size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அலரி மாளிகையில் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் இலத்திரனியல் செய்திப் பிரிவு பொறுப்பாசிரியர்களையும் சந்தித்து பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். வடபகுதியில் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வடமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறதென்று கூறினார். இந்த தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் பல முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்.[/size]

[size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: கடந்த கால யுத்தத்தினால் தமிழர்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. முஸ்லிம்களும், சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நல்லிணக்க ஆணைக்குழு தனது சிபாரிசுகளில் வடபகுதியில் இடம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகியோரையும் மீள்குடியேற்ற வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. நாம் அதனையும் செய்து முடித்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டிய கடப்பாட்டினை கொண்டுள்ளோம்.[/size]

[size=4]1981 ஆம் ஆண்டின் வாக்காளர் அட்டவணை மாத்திரமே இப்போது வடபகுதியில் உத்தியோகபூர்வ ஆவணமாக இருக்கின்றது. இதனடிப்படையில் கடந்த காலத்தில் நடந்த தேர்தலின் போது வாக்காளர் இல்லாத காரணத்தினால் சிலர் 200 வாக்குகளுக்கும் குறைந்த வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் இடம்பெற்றன. எனவே, மக்களுக்கு சுதந்திரமாக சென்று வாக்களிப்பதற்கான ஒரு சுமுகமான சூழ்நிலையை அடுத்தாண்டில் உருவாக்கியதற்கு பின்னரே வடபகுதி தேர்தலை நாம் நடத்துவோம்.[/size]

[size=4]தற்போது வடபகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருப்பதனால் வடபகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 இல் இருந்து 6 ஆக குறைந்திருக்கிறது. அடுத்தாண்டு ஜூன் மாதம் பூர்த்தி செய்யப்படும் புதிய வாக்காளர் இடாப்பில் மக்கள் தொகையை ஒப்பிட்டு பார்த்த பின்னரே பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை கூட்டுவதா? இல்லையா? அல்லது இதேநிலையில் வைத்திருப்பதா என்று முடிவெடுக்கப்படும்.[/size]

[size=4]நல்லிணக்க ஆணைக்குழுவை நான் தான் நியமித்தேன். அக்குழுவின் சிபாரிசுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா எங்களுக்கு அரசியல் ரீதியில் தீங்கிழைத்து வருகிறதென்று உங்களில் சிலர் கூறுகின்றனர். நாம் எந்தவொரு நாட்டினால் எமது நாட்டின் பாதுகாப்பையும், இறைமையையும் விட்டுக்கொடுக்க உறுதியளிக்கிறேன்?. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று ஒரு ஊடகவியலாளர் தெரிவித்தார். நாம் இதனை பெரிதுபடுத்துவது நல்லதல்ல.[/size]

[size=4]ஜே.ஆர். ஜெயவர்தனே, 1983 ஆம் ஆண்டில் 6 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று தங்கள் அங்கத்துவத்தை இழந்து இந்தியாவுக்கு சென்று குடியேறினார்கள். அதனால், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டன. அதே பிழையை நாம் செய்யத் தயாரில்லை. எங்காவது ஒரு புதிய ஹோட்டல் கட்டப்பட்டவுடன் அதனை நாமல், பசில் அல்லது கோத்தபாய கட்டுகிறார்கள் என்று எனக்கு புகார் கிடைக்கிறது. அந்த புகார்களில் எவ்வித உண்மையும் இல்லை.[/size]

[size=4]அதுபோல் கோடான கோடி ரூபா பெறுமதியான ஒரு வாகனத்தை நாமல் வாங்கினார் என்றும் ஒரு வதந்தி பரவியது. இந்த வாகனத்தை வாங்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் நாமல் என்ற பெயருடைய சகோதரர் என்பது பின்னர் புலனாகியது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.