Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக விலக்க வேண்டும்:குணதாச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்குவதை இந்தியா விரும்பவில்லை. எனவே உத்தேச வட மாகாண சபை தேர்தலுக்கு முன்பதாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தெளிவாகவும் முழுமையாகவும் விலக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் எதிர் காலத்தில் வீண் பிரச்சினைகளே ஏற்படும் என்று தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள விசேட அறிக்கையிலும் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்பன இல்லை. எனவே அரசாங்கம் தெளிவான சிந்தனையுடனேயே செயற்படுகின்றமை புலப்படுகின்றது என்றும் அவ் வியக்கம் குறிப்பிட்டது.

இது குறித்து தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,

அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் வட மாகாண தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தீர்க்கமான தீர்வை எடுக்க வேண்டும் என்பதே முக்கியமான விடயமாகும். ஏனெனில் இந்தியாவுக்குக் கூட வட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் விருப்பமில்லை. அண்மைக்கால நகர்வுகளிலிருந்தும் சந்திப்புக்களிலிருந்தும் அந்நிலை வெளிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கு தமிழீழ ஆதரவுக் குரல்கள் எழுந்தாலும் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் மத்திய அரசு அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக நம்பவும் இல்லை. இது முக்கிமான விடயமாகும். எவ்வாறாயினும் ஐ.நா. விலும் பல தரப்பட்ட சந்தர்ப்பங்களில் உள் நாட்டின் அரசியல் தீர்வு குறித்துப் பேசப்பட்டது.

இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் எதிர் வரும் செப்டம்பர் மாதத்தில் ஜெனீவாவிலும் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க உள்ள விசேட அறிக்கையில் அரசியல் தீர்வோ அதிகார பகிர்வோ இடம்பெறவில்லை. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக சக்திகளின் தலையீடுகளுக்கு சிறந்த வகையில் இராஜ தந்திர ரீதியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

http://virakesari.lk/news/head_view.asp?key_c=39738

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.