Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வாகாத சிறீலங்காவிற்கு சர்வதேசம் வழங்கும் பொருளாதார உதவிகள் - தாயகத்தில் இருந்து எழுவான்

Featured Replies

கிழக்கில் தமிழர்கள் வாழும் திருகோணமலை பிரதேசம் சம்பூரில் இந்தியாவின் திட்டமிட்ட சதியினால் இன்றும் 6 ஆயிரம் குடும்பங்கள் அநாதரவாக வீதிவிடப்படுவதற்கு இந்த அனல் மின் நிலையம் முக்கிய காரணம். தமிழர்களின் மிகவும் வளமிக்க பூமியில் தீ மூட்டியுள்ளது இந்தியா. ஆனால், தற்போது சம்பூரில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பாக சிறீலங்காவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளதாக டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் காந்தா கடந்த வாரம் டில்லி சென்று சிறீலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு வலுவடைந்து வருவதை சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார். பாகிஸ்தானுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும் சிறீலங்கா முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி-55 ரக டாங்கிகளின் இயந்திரங்களை சீரமைக்கவும் படைத் தளவாடங்களை நவீனமயமாக்குவது குறித்தும் சிறீலங்காவும் பாகிஸ்தானும் விவாதித்து வருகிறது.

ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை சிறீலங்காப் படைகள் படுகொலை செய்வதற்கு பாகிஸ்தான் முழுமையான படைத் தளபாடங்கள் மற்றும் படைத் தொழிநுட்ப வசதிகளை இந்தியாவுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழங்கியிருந்து. அவையெல்லாம் ஏதோ ஒரு நோக்கத்திற்காக என்பதை விட ஒன்று இந்தியாவை முந்திக்கொண்டு சிறீலங்காவில் கால்பதிக்க வேண்டும் என்பதும், சிறீலங்காவின் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் வளங்களை சுரண்டுவதற்காகவும் இந்த காய்நகர்த்தலை செய்திருக்கலாம்.

இந்தியா - பாகிஸ்த்தான் நாடுகள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சிறீலங்காவுக்கு போர்த் தளபாடங்களை வழங்கின. இதனை மிகவும் செழிப்புடன் சிறீலங்கா அரசு கையேற்று இலட்சக்கணக்கில் பொதுமக்களை படுகொலை செய்து குவித்துள்ளது. அதற்கான பிரதி உபகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இரு நாடுகளும் சிறீலங்காவுக்கு நெருக்குதலை கொடுக்கின்றன.

இதுவரை காலமும் மறைமுகமாக உதவி வந்த பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் பகிரங்கமாக சிறீலங்காவில் காலூன்றத் தொடங்கியிருக்கிறது. சிறீலங்காவில் முதலீடு, பொருளாதாரம் என்பதற்கு அப்பால் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்பதில் இந்த இரு நாடுகளும் செயற்படுகின்றன. தமிழ்நாட்டில் சிறீலங்காவுக்கு எதிரான எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும் எப்போதும் நட்பு நாடு என்று பாராட்டும் மத்திய அரசுக்கு இப்பொழுது தலையிடியாக இது இருக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது. 1958ம் ஆண்டிருந்து சிங்களம் தமிழர்களை கொத்தடிமைகளாகவும், ஒடுக்கப்பட்ட இனமாகவும் வைத்துள்ளதுடன், 2009 ஆண்டு அதன் விஸ்வரூபத்தை வெளிக்காட்டியது. தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்க்காக இன்று கட்சி வேறுபாடுயின்றி சிங்களத்திற்கு எதிராக போர்க் கொடி பிடித்துள்ளன, ஒரு சாதாரண பெரும்பான்மையினர் கூட செல்ல முடியாத நிலவரம் ஏற்படும்.

இந்நிலையில், மத்திய அரசு மகிந்த அரசுக்கு பணிந்து அல்லது கீழ் இறங்குவது எதற்காக? இவ்வாறான நிலையில் 1987ம் ஆண்டு இந்தியாவின் பிரதமரான ராஜுவ் காந்தியை சிறீலங்கா படுகொலை செய்ய முயற்சித்தனர். எனினும், சிங்களத்துடன், தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதுவும் கிடப்பில் போடப்பட்டு 25 ஆண்டு நிறைவடைந்துள்ளது.

சிறீலங்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள வர்த்தக கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 100 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் அடுத்த மாதம் 3ம் நாளிலிருந்து 5ம் நாள் வரை அந்நிய நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தகக் கண்காட்சி நடக்கிறது. இந்திய மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, இந்த கண்காட்சியில் பங்கேற்கிறார். இந்தியாவை சேர்ந்த 100 நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.

இந்திய - சிறீலங்கா வர்த்தக உறவு, கடந்த ஆண்டு 65 சதவீதம் அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு இருநாட்டு வர்த்தகம் இலக்கை எட்டியுள்ளது. இந்திய தொழிற்சாலைக் கூட்டமைப்பு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. எவ்வாறாயினும், சிறீலங்காவில் காலுன்ற எத்தனிக்கும் நாடுகள் அனைத்தும் அவர்களின் பொருளாதார நலன்சார்ந்த விடயங்களை மாத்திரமே கவனத்தில் கொள்கின்றனர். மாறாக 60 ஆண்டு காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைப் பற்றி சிந்திப்பதாகவேயில்லை. இலங்கைத் தீவில் இடம்பெறும் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் சிறீலங்கா பொருளாதார ரீதியான முன்றிய நாடாகும் என கடந்த காலங்களில் உலக நாடுகள் கருத்துக்களை தெரிவித்திருந்தன.

ஆனால், இன்று போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் வளங்கள் சூறையாடப்படும் அதேவேளையில் எஞ்சியுள்ளதையாவது பயன்படுத்த முடியாதளவுக்கு சிறீலங்காப் படையினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். உலக நாடுகள் சிறீலங்காவுக்கு கடனுதவிகளை அள்ளி அள்ளிக் கொடுக்கலாம், அவை ஒருபோதும் இலங்கைத் தீவில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. அதுமாத்திரமல்ல அந்த உதவிகள் கூட தமிழர் வாழ்கின்ற பகுதிக்கு செல்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளன.

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் கடலுக்குச் செல்வதற்கு கட்டுப்பாடு, விவசாயம் செய்வதற்கு நிலங்கள் வழங்கப்படாமை போன்ற காரணங்களினால் அந்த மக்களின் வருமான மட்டம் மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பணப் பெறுமதி என்றுமில்லாதவாறு வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது, படுகடன் மிகவும் உச்சநிலையில் காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சி வீதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறீலங்காவின் மத்திய வங்கியின் ஆளுநர் ஒப்புக் கொண்டுள்ளார்.

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எத்தனை நாடுகள் உதவி செய்தாலும், என்ன கண்காட்சிகளை நடாத்தினாலும், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தித்தான் கடந்த கால சிங்கள அரசு தொட்டு மகிந்த அரசு வரை தமது அரசியலை நடாத்தினார்கள். இன்று அவர்கள் இல்லையென்ற பின்தான் சிறீலங்காவின் உண்மையான நிலைமைகளை பார்க்கலாம். தமிழ் மக்கள் பிரச்சினைக்குரியவர்கள் அல்ல விடுதலைப் புலிகள்தான் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என பரப்புரைகளை மேற்கொண்ட சிங்கள அரசாங்கங்கள்.

இன்றும் அதே தமிழர்கள் தான் உரிமைக்காக, அத்துமீறல்களுக்காக, அடாவடித்தனங்களுக்காக போராடுகின்றார்கள் இதனையே அன்று விடுதலைப் புலிகள் ஆயுதமுனையில் செய்தார்கள். சிறீலங்காவில் எந்த அரசு வந்தாலும் அது சிங்களவர்களுக்கு எதிரான விடயங்களைச் செய்யப் போவதில்லை. சிங்கள மக்களும் அதனை விரும்பவுமாட்டார்கள் இதுதான யதார்த்தம். எனவே, உலக நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் வெளிநாடுகளின் தலையீட்டினால் தான் நிறைவடைந்தது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு நியாயம் கிடைக்கப் பெற்றது.

சூடானிலிந்து தென்சூடான் விடுதலை பெற்றது. அதேகொசோவோ போன்ற நாடுகளைப் போன்று இலங்கைத் தீவிலும், தமிழர்க்கான நாடாக வடக்கு, கிழக்கை இணைத்த தனிநாடாக வழங்குவதன் மூலமே நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது உண்மை.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.