Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ மாநாட்டுக்கு தடை கோரிய வழக்கு..! நீதிபதிகள் தடை போடுவார்கள் என்றே நம்பலாமா..?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

டெசோ மாநாட்டுக்கு தடை கோரிய வழக்கு..! நீதிபதிகள் தடை போடுவார்கள் என்றே நம்பலாமா..?! ஈழதேசம் செய்தி..!

சென்னையில் தி.மு.க.சார்பாக வரும் 12 ந் தேதி நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார் 'புண்ணியவான்' வக்கீல் பாலசுப்ரமணியன் என்பவர். அந்த வழக்கில் டெசோ மாநாடு நடத்துபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று போனசாக ஒரு பாயிண்டையும் சேர்த்துள்ளார். வழக்கை ஏற்றுக் கொண்டு விட்டது உயர் நீதி மன்றம், வழக்கு விசாரணை விரைவில் தொடங்கி விடும். வழக்கை தள்ளுபடி செய்வார்களா..? அல்லது தடையை நீக்குவதற்கு என்ன காரணத்தை சொல்லப் போகிறார்கள் என்று ஆர்வமுடன் இருக்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.

இதற்கிடையே, டெசோ மாநாடு குறித்து தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதியும் இலங்கை அரசின் அமைச்சர்களும் நாளொரு வண்ணம் அறிக்கைப் போர்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசின் சார்பாக கடந்த 06 - ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ஹெஹலிய ரம்புக்கவல்ல டெசோ மாநாடு குறித்து தவறான பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று மு.கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார். டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான மாநாடு என்றும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கையர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று கூறியது அந்த அறிக்கை. இலங்கை அரசின் இந்த குற்றச்சாட்டு அறிக்கை கவலை தரும் விசயம் என்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட விசயம் என்றும் மு.க.கூறினார். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்குத் தான் இந்த மாநாடு, இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும் அதற்காகவே இந்த டெசோ மாநாடு நடைபெறுகிறது. இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள இந்த தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெசோ மாநாடு குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தி.மு.க. தலைவர் கருணாநிதி சரியான தருணத்தில் டெசோ மாநாட்டை நடத்துகிறார். இந்த மாநாட்டிற்கு தி.மு.க. ஏற்பாடு செய்திருக்கிறது. நமது அண்டை நாட்டில் போராடும் தமிழர்களுக்காக இம்மாநாடு நடக்கிறது. இது சரியான தருணம். தி.மு.க. மற்றும் அதன் தலைவர் அவர்களின் அறிவார்ந்த முடிவு என்று கருதுகிறேன் என்றார். மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்நாட்டில் உள்ள மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே இது எழுச்சியை ஏற்படுத்தும். உலக தமிழர்கள் எழுச்சி கொள்ளவும், ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் இது சரியான நேரம். அவர்கள் இன்னும் முகாம்களில் வாடுகிறார்கள். வீடுகளுக்கு செல்ல இயலவில்லை. இலங்கை அரசு அத்துமீறலைக் கைவிட்டு தமிழர்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்ப உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

டெசோ மாநாட்டில் பங்கேற்க உள்ள லோக் ஜனசக்தியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு கூறினார். ஆகஸ்ட் - 12 ம் தேதி நடைபெற இருக்கும் டெசோ மாநாடு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் என்னை சந்தித்தார். அவர் என்னை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் நான் அவரிடம் கூறிவிட்டேன்.தமிழக மக்களை நீங்கள் நேரில் சந்தியுங்கள். இலங்கை அரசு மற்றும் மகிந்தா ராஜபக்சே பற்றிய அவர்களின் கருத்துக்களை அறியுங்கள். மேலும் தி.மு.க.தலைவர் கலைஞரையும் சந்தியுங்கள் என்று எனது கருத்தை உறுதியாக கூறிவிட்டேன் என்றார்.

ஆக, சூடு பிடிகிறது டெசோ மாநாடு. அகில இந்திய பெண்கள் சம்மேளனம் சென்னையில் மாநாடு நடத்துகிறார்கள். இலங்கையின் பெண்கள் அனுபவித்து வரும் சொல்லொண்ணா துயரங்களை பேசப் போகிறார்கள். இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் வேலூரில் மாநாடு நடத்துகிறார். ஈழ ஆதரவு மாநாடு என்று.

பழ.நெடுமாறன், வைக்கோ, சீமான் குளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி மற்றும் எண்ணற்ற தமிழ் தேசிய ஆரவலர்கள் தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை ஆதரிக்க வேண்டும் இவை தான் தற்போதைய அரசியல் நேர்மை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சியான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் குரல் கொடுத்தால் அன்றி, ஈழத் தமிழனை ஏறெடுத்தும் பார்க்க உலக நாடுகள் தயாரில்லை. தி.மு.க.வுக்கு எப்பொழுதும் போட்டியாக செயல்படும் அ.தி.மு.க.வின் ஜெ அம்மையார் டெசோ மாநாட்டிற்கு போட்டியாக என்ன செய்யப் போகிறார்.? யார் கண்டது. திபெத் மற்றும் பர்மிய அகதிகளுக்கு வழங்கிய அகதிகளின் உரிமையை வழங்கலாம். தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் அனைத்தையும் மூடிவிட்டு, இந்திய உரிமையை வழங்கலாம். அதற்கு முயற்சிக்கலாம்..! இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா..?

இவ்வாறான சூழலில், இலங்கை தமிழர்களின் உடனடித் தேவையை கருத்தில் கொண்டு, டெசோ மாநாட்டில் பங்கு பெறுவதின் மூலம், இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமையை சர்வதேசம் பேசுமளவிற்கு நிர்பந்தம் ஏற்படும் நிலையை உருவாக்க வேண்டும். டெசோ மாநாட்டை குற்றம் சொல்வதையோ அல்லது மௌனமாக இருப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் தேசியத்தை உரத்துப் பேசும் தலைவர்கள்...?

சங்கிலிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.