Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி அங்கத்தவர்களே களவுகள், கொள்ளைகளுக்கு முக்கிய காரணமானவர்கள்.

Featured Replies

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அங்கத்தவர்களே யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற களவுகள் மற்றும் கொள்ளைகளுக்கு முக்கிய காரணமானவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட இருவர் ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர்களாவர்.

இவர்கள் குடாநாட்டில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டுள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்ட பலர் இவர்களே தமது பொருட்களைத் திருடினார்கள் என்று சிறிலங்கா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர் என சங்கதி24ன் யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த மதி என்பவரும் அவரின் உதவியாளராகச் செயற்பட்ட மூளாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவருமே பாரிய கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதி என்பவர் ஈ.பி.டி.பி கட்சியின் நீண்ட கால உறுப்பினர்.

கட்சி உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர். ஆயுதப் பயிற்சிக்கு பொறுப்பாளராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார். கட்சியில் இருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகச் செயற்பட்டவர். புல தமிழ் இளைஞர்களின் சாவுகளுக்கு காரணமானவர்.

புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ் குடாநாட்டைச் சேர்ந்த பல இளைஞர்களை ஈ.பி.டி.பி இனர் சுட்டுப் படுகொலை செய்த போது மதி என்பவரும் அதில் முக்கிய பங்காளியாகச் செயற்பட்டவர். டக்ளஸின் கொலை வெறிப் படையணியின் முக்கிய பாத்திரமான நெப்போலியனுடன் மதி என்பவர் சேர்ந்து செயற்பட்டுள்ளார். இதனால் யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் இவருக்கு சிறிலங்கா படையினரதும் காவல்துறையினரதும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் ஒன்றைத் தொடர்ந்து மதி என்பவர் தானாகவே விலகியதாக கூறப்படுகிறது. ஆயினும் இன்றுவரை கட்சியின் உயர் மட்டத்தினருக்கும் இவருக்கும் நெருக்கமான தொர்புகள் உள்ளதாகவும் கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தொடர்புகளைப் பயன்படுத்தி இவர் தற்போது கொள்ளைகளிலும் வழிப்பறிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலரும் இந்தக் கொள்ளைகளுக்கு உடந்தையாகச் செயற்படுகின்றனர். கட்சியிலிருந்து எடுத்து வந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களின் உதவியுடனேயே இவர் திருட்டுக்களில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் மோட்டார்ச் சைக்கிள் எடுப்பதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்துடன் யாழ் நகர் நோக்கிச் சென்;றபோது இடை வழியில் வைத்து அந்தப் பணத்தைப் பறிக்க முற்பட்ட போது அந்த ஆசிரியை அலறினார். உடனடியாக கைத்துப்பாக்கியை எடுத்த மதி என்பவர் அந்தப் பெண்ணைச் சுட முயன்றதாகவும் இதனால் அச்சமடைந்த அவர் பணத்தைக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே போன்று யாழ் குடாநாட்டின் பல இடங்களிலும் இவரும் இவரின் ஆதரவாளர்களும் பணம், நகை, மோட்டார்ச் சைக்கிள்கள், கணனிகள் உள்ளிட்ட பல பொருட்களைத் திருடியுள்ளனர். இவற்றை விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர். பொருட்களை இழந்தவர்கள் சிறிலங்கா காவல்துறையினரிடம் முறைப்பாடுகள் செய்த போதிலும் அவர்களும் பாராமுகமாகவே இருந்தனர்.

மேற்படி மதி என்பவர் பருத்தித்துறையில் திருடிய மோட்டார்ச் சைக்கிளொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறைக்குச் சென்ற போது மோட்டார்ச் சைக்கிளின் இலக்கத்தை வைத்து அவர் சிறிலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவரின் உதவியாளரும் கைது செய்யப்பட்டார்.

இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்ற போதிலும் சிறிலங்கா அரசாங்கம் அந்த விடயத்தில் எத்தகைய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

ஏனெனில் ஈ.பி.டி.பி போன்ற ஆயுதக் குழுக்கள் மகிந்தவின் காட்டுமிராண்டித்தன ஆட்சிக்கு அவசியமாகின்றன. இந்த ஆயுதக் குழுக்களின் மூலமே தமிழ் மக்களை அடக்கி ஆளலாம் என்று மகிந்த நினைக்கிறார். அதனைச் செயற்படுத்தியும் வருகின்றார்.

இதற்காகவே மகிந்த ஆயுதக் குழுக்களுக்கு தீனி போட்டு வளர்க்கின்றார். இந்த விடயங்களை சர்வதேச நாடுகள் கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியமானதென்று இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.