Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொங்கிரஷை அழைத்து விழா நடத்தும் உலக தமிழ் பண்பாட்டு இயக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொங்கிரஷை அழைத்து விழா நடத்தும் உலக தமிழ் பண்பாட்டு இயக்கம்

Published on July 3, 2012-1:28 pm · No Comments

ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொங்கிரஷ் பிரமுகர்களை பிரதம அதிதிகளாக அழைத்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் என்று சொல்லிக்கொள்பவர்கள் கல்வி மகாநாடு நடத்துகிறார்கள். உலகத்தமிழ் மக்களிடம் ஒரு கேள்வி வரும் ஆவணி மாதம் புதுச்சேரியில் நடைபெற இருக்கின்றதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற கல்வி மாநாடு யாருக்காக? யாரால்? யார்? தலமையில் நடைபெற இருக்கின்றது.

ஈழத்தில் இரண்டு லட்சம் தமிழர்களின் கொலைக்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாவின் தலமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த புதுச்சேரி முதலமைச்சர் ந.அரங்கசாமி தலைமையில் நடைபெற உள்ளது. அதுமட்டுமல்ல மத்திய அரசில் தகவல் செய்தி ஒலிபரப்பு இணை அமைச்சராக இருக்கும் செகத் இரட்சகனும் பங்கேற்கின்றார்.

அப்படியானால் தமிழகத்தில் காங்கிரசை விரட்ட வேண்டும் என்று இதுவரை பாடுபட்ட பாடு பட்டுக்கொண்டு இருக்கின்றவர்களது உழைப்பை இவர்கள் உதாசீனம் செய்கின்றார்களா? அல்லது உலகத்தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு தருவதுதான் வரும் காலத்தில் கற்பிக்கப்பட வேண்டிய தமிழ்க்கல்வி முறையா?. அப்படியானால் ஈழத்தமிழருக்காக ஏதாவது தன்னால் ஆனதை தனது காலத்தில் செய்து விடவேண்டும் என்று செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரை இவர்கள் உதாசீனம் செய்கின்றார்களா?

ஏன் இந்தப்புறக்கணிப்பு? உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் 42 நாடுகளில் கிளைகள் உண்டென்று சொல்லப்படுகின்றது. அப்படியானால் எல்லாக்கிளை உறுப்பினர்களிடமும் ஒப்புதல் பெறப்பட்டதா? அல்லது உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பாடசாலைகளிடம் எந்த மாதிரியான பாடத்திட்டம் தேவை என்று கலந்துரையாடப்பட்டதா?.

இன்று உலகெங்கும் அதிகமான பாடசாலைகளை அதிக மாணவர்களைக்கொண்ட பள்ளிக்கூடங்களாக இருப்பவை தமிழ்ச்சோலை என்ற பள்ளிக்கூடங்கள்தான். இவர்களிடம் இப்படியொரு மாநாடு நடாத்தப்பட இருக்கின்றது என்று கலந்துரையாடப்பட்டதா?

தங்களது பெயர் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்காக இது நடாத்தப்படுகின்றதா?

யுனெஸ்கொவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு இது என்று சொல்லப்படுகின்றது ஆனால் 1997ம் ஆண்டு ஒரு கடிதம் எழுதப்பட்டது

யுனெஸ்கோவுக்கு பதிவு செய்வதற்காக ஆனால் அதன் பின்பு யாருமே எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை பதிவு செய்வதற்காக. 2010ம் ஆண்டு சில உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு நேரடியாக பிரான்ஸில் இருக்கும் யுனெஸ்கோ காரியாலயத்திற்குச்சென்று விசாரித்தவன் என்ற வகையில் உண்மை நிலை தெரிந்தவர்களில் நானும் ஒருவன். எனவே இது சம்பந்தமாக தகவல் சொல்ல என்னால் மட்டுமே முடியும் ஆனால் என்னுடன் வந்திருந்த அகிலத்தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் வேலுப்பிள்ளை அங்கிருந்த காரியாலயப்பெண்மணியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளக் கேட்டபோது அப்பெண்மணி மறுத்து விட்டார்.

ஆனால் இவர் கெஞ்சி மண்றாடினார் நான் கனடாவில் உள்ள உறுப்பினர்களுக்குக்காட்டவேண்டும் தயவு செய்து அனுமதியுங்கள் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கின்றேன் என்று. இறுதியில் அவர் ஒப்புக்கொண்டார் .வெறும் விளம்பரப்பிரியர்கள் இந்த கணேசலிங்கமும் வேலுப்பிள்ளையும். தமிழர்களுக்குப்பிரயோசனமான மில்லாத தங்களுக்கு விளம்பரம் தேடும் அதுவும் ஈழத்தமிழர்களைக்கொன்று குவித்தவர்களுடன் சேர்ந்து நடாத்தப்பட இருக்கும் இந்த மாநாட்டை தமிழகத்து உணர்வாளர்களை அவமதிக்கும் இந்த மாதிரியான தமிழர்களை உலகத்தமிழினம் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் என்பதே எனது நோக்கம்.

யுனெஸ்கோ காரியாலம் எங்கிருக்கென்று தெரியாதவர்கள்தான் உலக தமிழ் இயக்கத்தின் யுனெஸ்கோ பொறுப்பாளர் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டவர்கள்.

ரவீந்திரன்

http://www.thinakkathir.com/?p=38875

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கணும் ரங்கசாமி இப்போ காங்கிரசில் இல்லை அவர் இப்போ தனி கட்சி வைச்சிருக்கார்

மற்றது ரட்சகன் தி மு க வை சேர்ந்தவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.