Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடன் சீபா உடன்பாடு செய்யமுடியாது – வெளிப்படையாக கூறியது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Indo-lanka%20flages.jpg

[size=4]இந்தியாவுடன் சீபா எனப்படும் வர்த்தக உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு விரும்பவில்லை என்று இந்திய அதிகாரிகளுக்கு சிறிலங்கா வெளிப்படையாகக் கூறியுள்ளது.

புதுடெல்லியில் இருந்த வெளியாகும் “பிஸ்னஸ் ஸ்ரான்டட்” இதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த உடன்பாடு இந்தியப் பொருட்களை சிறிலங்காவின் சந்தைக்கு திறந்து விடும் என்பதால் உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்ளது.

எனினும் 2000 மார்ச் தொடக்கம் நடைமுறையில் உள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் புதிய விடயங்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யத் தயாராக இருப்பதாக சிறிலங்கா கூறியுள்ளது.

2010 ஜுனில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவுடன் சீபா உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்திருந்தார்.

ஆனால், அண்மையில் கொழும்பு சென்றிருந்த இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவுடன் அதுபற்றிப் பேச சிறிலங்கா அரசாங்கம் மறுத்து விட்டது.

சுதந்திர வர்த்தக உடன்பாடு தனியே பொருட்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் சீபா உடன்பாடு பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

சீபா உடன்பாடு தொடர்பாக சிறிலங்காவில் உள்ள சில வர்த்தகத் தரப்புகள் தவறான பரப்புரை செய்வதாக இந்திய வர்த்தக அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை செய்து கொண்ட முதலாவது நாடு சிறிலங்காவாகும்.

1998 டிசம்பரில் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டு, 2000 மார்ச்சில் நடைமுறைக்கு வந்தது.

சீபா உடன்பாடு குறித்த பேச்சுக்கள் 2005 பெப்ரவரியில் ஆரம்பமாகின.

2008 ஜுலை வரையில் 13 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு அதற்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டது.

எனினும் சிறிலங்கா தயாராக இல்லாததால், இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை.

எனினும் சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியாவே இருந்த வருகிறது.

2011இல் இருதரப்பு வர்த்தகம் 5.16 பில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.puthinapp...?20120824106855[/size]

[size=1]

[size=4]மீண்டும் ஏமாந்தது இந்தியா. [/size][/size]

[size=1]

[size=4]சிங்கப்பூரே பார்த்து பிரமித்த நாடு, இந்தியாவுடன் முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்த நாடு இன்று இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சீனா + பாகிஸ்தானுடனான உறவு. குறிப்பாக சீனாவை தனது முக்கிய வர்த்த பங்காளியாக பார்க்கின்றது இலங்கை. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா பல நாடுகளுக்கு வாய்வார்த்தையாகப் பல பொய்களைச் சொல்லி காரியம் சாதிப்பது வழமை.. இவர்கள் அதை நம்பி ஏமாறுவதும் வழமை.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாக்கரருக்கு காணாது ... !

இரு நரிகளின் கூட்டு ஒப்பந்தம் இப்படித்தான் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.