Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையான் பகல் கனவு காண்கின்றார் - தனது பிச்சையினாலேயே கடந்த முறை முதலமைச்சரானார் என பெருமையுறுகிறார் கருணா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Karuna-pillayan-150news.jpg

[size=4]கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சரானது நான் போட்ட பிச்சையினாலேயே. ஆனால், அவர் மீண்டும் முதலமைச்சராவார் என பகல் கனவு காண்கிறார் எனத் தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். நேற்று மட்டு வாழைச்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.[/size]

[size=4]அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:[/size]

[size=4]கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இதன் காரணமாகத்தான் பிள்ளையான் முதலமைச்சராக வந்தார். எனவே அவர் வகித்த முதலமைச்சர் பதவியானது. நான் போட்ட பிச்சை. இதை மறந்துவிட்டுத்தான் அவர் தற்போது எனது சகோதரிக்கு எதிராக பிரசாரம் செய்து திரிகின்றார்.[/size]

[size=4]எனது சகோதரியின் கல்வித்தரத்துடன் பிள்ளையானை ஒப்பிட முடியாது. அது ஒரு பெரிய மலைக்கும் ஆழமான மடுவிற்கும் உள்ள வித்தியாசமாகும். தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதானால் அது எனது சகோதரி ருத்திரமலராகத்தான் இருக்குமே தவிர பிள்ளையான் இல்லை.[/size]

[size=4]ஆனால் மீண்டும் தானே முதலமைச்சர் என பிள்ளையான் பகல் கனவு காண்கின்றார். இது இவரின் அறியாமையைக் காட்டுகின்றது. எனவே சகல தமிழ் மக்களும் எனது சகோதரிக்கு வாக்களித்து, சிறந்த ஒரு முதலமைச்சரை இந்த மாகாணசபைக்கு தெரிவுசெய்யுங்கள் என அவர் தெரிவித்தார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமத்திலே “ஓம் முருகா” என்ற எழுத்து கூட இல்லாமல் போய்விட்டது.

[size=2]

[/size][size=3]

images+(27).jpg

வடக்கு கிழக்கிலே சரியான தலைமைத்துவம் இருந்ததன் காரணமாகவே எமது மொழியையும் இனத்தையும் காப்பாற்றியவர்களாக இருக்கின்றோம். ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களே இல்லாமல் போயுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளர் கி. துரைராஜசிங்கம்தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தி என்பது நூற்றுக்கு நூறு வீதம் மனித விழுமியங்களில் செய்யப்படுகின்ற அபிவிருத்தியாக இருக்க வேண்டும். பத்து வீதம் இருக்கின்ற பௌதீக வள அபிவிருத்தி அபிவிருத்தியாகிவிட முடியாது.

images+%252828%2529.jpg

மனித உரிமைகள் பேணப்பட வேண்டும். அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் பேணப்பட வேண்டும். ஒன்று கூடுகின்ற சுதந்திரம் இருக்க வேண்டும். மனித விழுமியங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

images+%252829%2529.jpg

மத சுதந்திரம் இருக்க வேண்டும். மக்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சுதந்திரத்தை பெற்றுத்தர வேண்டும் இதுதான் முழுமையான அபிவிருத்தியாகும். இதைவிட்டு இங்கு செய்யப்படும் பௌதீக அபிவிருத்தி மட்டும் ஒரு நாட்டின் அபிவிருத்தியாக அமையாது.

பாராளுமன்றத்திலே எம்முடைய பிரதிநிதித்துவம் மிகவும் குறைவானது. இதனால் பெறுகின்ற அபிவிருத்தி மக்களுக்கு போதாது. அதனால் தான் எம்முடைய பிரதேசத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் 1956-ஆம் ஆண்டு தொடக்கம் பிரதேச அபிவிருத்தி நோக்கிய சுயாட்சி என்று கூறப்படும் “சமஷ்டி முறையை” நாம் கேட்டு பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம்.

images+%252831%2529.jpg

அதன் பயனாக இந்தியாவின் தலையீடு காரணமாக பெறப்பட்ட தீர்வுதான் இந்த மாகாண சபை. மாகாண சபையில் நாம் கேட்பது அதிகாரமற்றிருக்கின்ற வடக்கு கிழக்கு மக்களுக்கு அவர்கள் தங்களுடைய பிரதேசத்தை தாங்களே ஆளக்கூடிய விதத்திலேயான அமைப்பாக கேட்டதை வடக்கு கிழக்கு மாகாணசபை தவிர்த்த எல்லா மாகாணங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். இது “பசியோடு இருப்பவர்களுக்கு சோற்றைக் கொடுத்துவிட்டு சோற்றிலே மண்ணைப் போடுவது” போல் உள்ளது.

இலங்கையில் பல பாகங்களிலும் தமிழர்கள் வாழ்வதற்கான அடையாளங்களே இல்லாமல் போய்விட்டது. கதிர்காமத்திலே “ஓம் முருகா” என்ற எழுத்து கூட இல்லாமல் போய்விட்டது. இங்கு முருகன் மட்டும் இருக்கின்றார். அந்தப் பிரதேசத்திலே வாழ்ந்த தமிழ் மக்கள் அங்கில்லை.

images+%252830%2529.jpg

சிலாபத்திலே முன்னேஸ்வரம் ஆலயம் உள்ளது. அங்கிருந்த மக்கள் அடையாளமற்றவர்களாக இருக்கிறார்கள். நீர்கொழும்பிலே சில வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட பெனார்டோபுள்ளே அமைச்சர், அவரது தாய்க்கு சிங்களம் தெரியாது.அவருக்கு தமிழ் அரைகுறையாக தெரியும். அவரது பிள்ளைக்கு தமிழே தெரியாது. இவ்வாறு நம்முடைய இனம் அழிந்துகொண்டிருக்கிற வரலாறுகண்முன்னே உண்டு.

images+%252832%2529.jpg

எமது நாடு அரசியல் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில், ஏதாவது ஒரு அரசியல் கட்சியை, ஏதாவது அரசியல் கொள்கையைப் பின்பற்றாதவர்கள், இந்த நாட்டிலே இருப்பாரானால் அவர் “ஒன்றும் தெரியாத முட்டாளாகத்தான்” இருக்க வேண்டும்.

எமது மக்கள் இம்முறை தேர்தலை சரியாக சிந்தித்துப் பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் மாகாண ஆட்சியை அமைக்கின்ற பலம் எமக்கு கிடைக்கும், என தெரிவித்தார்.

Courtesy : www.puradsi.com[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.