Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சிவில் அதிகாரிகள் - வடக்கு, கிழக்கில் மட்டும் உயரதிகாரிகளாக படையதிகாரிகள் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? - கேள்வி எழுப்பினார் ஹக்கீம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hakeem-150seithy.jpg

[size=4]நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆளுநர்களாகவும், அரசாங்க அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கில் படை உயரதிகாரிகள் அவ்வாறான பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.[/size]

[size=4]வாழைச்சேனையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரகார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். வாழைச்சேனை பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத், மாகாண சபை வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமத்இ சவாஹிர் சாலி, சட்டத்தரணி ராசிக் ஆகியோரும் உரையாற்றினர்.[/size]

[size=4]வேட்பாளர் இஸ்மாயில் ஹாஜியார் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மீராமுஹதின் ஹாஜியார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அமைப்பாளர் ஹீசைன் தலைமை தாங்கினார். பெருந்திரளான மக்கள் பங்குபற்றிய இப்பிரசாரக் கூட்டத்தில் மு.கா.தலைவர் அமைச்சர் ஹக்கீம் நீண்ட உரை ஒன்றை ஆற்றினார்.[/size]

[size=4]அங்கு அவர் மேலும் கூறியதாவது:[/size]

[size=4]தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்து பேச முன்வந்துள்ளது. முஸ்லிம் தரப்பின் தேவைகளை அவர்களிடம் முன்வைத்தால் எங்களுக்காக அவற்றைப் பெற்றுத்தர அவர்களால் முடியும் என்கிறார்கள். இவ்வாறுதான் விடுதலைப் புலிகளும் கூறி வந்தனர்.[/size]

[size=4]முஸ்லிம்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம். அதன் உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது என்பதை சகல தரப்பினர்களுக்கும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=4]அதன் உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது என்பதை சகல தரப்பினர்களுக்கும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.[/size]

இப்பதான் சரியான பக்கம் திரும்பி தாக்க தொடங்குகிறார். ஆரம்பத்தில் பிழையான வழியில் "முஸ்லீம் பெண்கள் வீட்டில் கூட தொழமுடியவில்லை" என்று பௌத்த துறவிகளை தாக்கியதால் பசீர் மந்திரி பதவியை ராஜினாம செய்யவேண்டிய நிலைவரை வந்தது. இனிமேலைய பேச்சுவார்தைகளில் தான் தனி அலகு கூட்டமைப்பிடம் கேட்கப் போவதில்லை என்று அடித்து சொல்லியிருக்கிறார்.

[size=4]முஸ்லிம்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம். [/size]
ஆனால் இதை வாளைச்சேனையில் மட்டும்தான் கூறியிருப்பார். கொழும்பு போனதும் (ஒரே இனமாக இருக்கும்) சிங்கள, பௌத்த நாடான இலங்கையில் தனி இனம் முஸ்லீம்கள் என்றதற்கு மன்னிப்பு கேட்டு வாங்கிவிடுவார்.

[size=4]எமது படைவீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தும் நாட்டில் அமைதியினையும் ஒற்றுமையும் கட்டியெழுப்பியுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]சில பிரிவினர் இந்த இன ஒற்றுமையை விரும்பவில்லை. அவர்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என இனங்களைப் பிரித்துப் பார்க்கின்றனர். எம்மால் அப்படிப் பிரிந்து நின்று செயற்பட முடியாது.[/size]

-மகிந்தா அம்பாறையில்

Edited by மல்லையூரான்

[size=4]

நாட்டின் ஏனைய பகுதிகளில் சிவில் அதிகாரிகள் - வடக்கு, கிழக்கில் மட்டும் உயரதிகாரிகளாக படையதிகாரிகள் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? - கேள்வி எழுப்பினார் ஹக்கீம்!
[/size]

[size=4]தமிழர்கள் நீண்டகாலமாக இதை கேட்டுவருவது இந்த காதுகளில் ஏன் விழுவதில்லை? செகிடா? இல்லை இணக்க அரசியலில் கலந்த ஏமாற்றுதலா?[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.