Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் மாநாடு நடத்தும் தி.மு.க.,? அ.தி.மு.க., செயற்குழுவில் கண்டன தீர்மானம்

Featured Replies

[size=4]ஆட்சியில் இருந்த போது, இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க., இப்போது இலங்கை தமிழர்களுக்காக மாநாடு நடத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று அ.தி.மு.க,. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size]

[size=4]கட்சியின் பொது செயலரும், முதல்வருமான ஜெ., தலைமையில் இன்று அ.தி.மு.க, செயற்குழு கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பு : இந்த தீர்மான விவரம் வருமாறு: [/size]

[size=4]ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்கள் கொன்று குவித்த நேரத்தில் எவ்வித செயல்பாடும் இல்லாமல் ஆட்சியில் இல்லாத நேரத்தில் தி.மு.க., இலங்கை தமிழர்களுக்காக மாநாடு நடத்துவது கண்டிக்கத்தக்கது. [/size]

[size=4]மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். [/size]

[size=4]காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை விரைவில் கூட்ட ‌வேண்டும்.[/size]

[size=4]மண்ணெண்ணெய் விநியோகத்தில் மத்திய அரசு போக்கிற்கு கண்டனம், கச்சத்தீவை விரைந்து மீட்க வேண்டும். [/size]

[size=4]கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கிடைக்கும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும், இலங்கை வீரர்களுக்கு இந்தியாவின் எப்பகு‌தியிலும் பயிற்சியளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தல், மாநில அரசின் அதிகாரத்தில் தலையீடும் மத்திய அரசு போக்கிற்கு கண்டனம், உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.[/size]

[size=4]http://tamil.yahoo.com/இலங்க-ம-ழர்-ம-ந-120100290.html[/size]

  • தொடங்கியவர்

[size=5]கச்சதீவை மீட்க வேண்டும்: அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்[/size]

[size=4]சர்ச்சைக்குரிய கச்சைதீவை இந்திய அரசு மீட்டு தனதுடமையாக்க வேண்டுமென அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையிலுள்ள கட்சி தலைமையகத்தில் கூடியது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தலைமையில் நடந்த இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/47479-2012-08-27-14-35-43.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றம்!

[Monday, 2012-08-27 12:50:57]

Jeyalalitha-news150-seithy.jpg

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை தொடர்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பாக நிறைவெற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஆட்சியில் இருக்கும் போது இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு காரணமாக இருந்துவிட்டு, ஆட்சியில் இல்லாத போது இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பாதுகாப்பு என்ற போர்வையில் முதலைக் கண்ணீர் வடிக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க. விற்கும் கடும் கண்டனம்!

2009-ம் ஆண்டு இலங்கையில் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது, மத்திய கூட்டணி அரசை தாங்கிப் பிடித்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசை வற்புறுத்தாமல், தமிழர்களை ஏமாற்றும் வகையில் காலை சிற்றுண்டி உண்ட பின், உண்ணாவிரதம் மேற்கொண்டு, மதிய உணவு நேரம் வந்தவுடன், "இலங்கையில் போர் முடிந்துவிட்டது" என்ற பொய்யான தகவலைக் கூறி மூன்று மணி நேரத்தில் "சாகும் வரையிலான" தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்.

கருணாநிதியின் இந்த அறிவிப்பினை நம்பி, பதுங்கு குழிகளில் இருந்து வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிந்தது. இந்தக் கொடூரத் தாக்குதலில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்.

அந்தத் தருணத்தில், இது குறித்து வாய் திறக்காத கருணாநிதி, தற்போது இலங்கை அரசு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார். இதிலிருந்து, இலங்கையில், கொத்துக் கொத்தாக தமிழர்கள் உயிரிழந்ததற்கு தன்னுடைய உண்ணாவிரதம் தான் காரணம் என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக் கொண்டிருப்பது தெளிவாகிறது.

ஆட்சியில் இருந்தால், தன் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவதையும், ஆட்சியில் இல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை செலுத்துவது போல நாடகமாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.மு.க-வும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கூட்டம் என்ற போர்வையில் கபட நாடகம் நடத்தியதை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

2. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறும், கச்சதீவினை மீட்டெடுக்குமாறும், இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை கைவிடுமாறும் மத்திய அரசை வலியுறுத்தல்!

தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே செய்ய முடியாத அளவுக்கு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், கொடுமைப்படுத்துவதையும், சிறைபிடிப்பதையும், அவர்களுடைய படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இதேபோன்று, இலங்கை வாழ் தமிழர்களுக்கான உரிமைகளை அளிக்கவும் இலங்கை அரசு மறுத்து வருகிறது.

தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என்றும் இலங்கை அரசை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்.

கச்சதீவை மீட்டெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உள்ள அம்சங்களைக் கருத்தில் கொண்டு, கச்சதீவினை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போது வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் பெங்களூரில் பயிற்சி பெற்று வரும் இலங்கை விமானப் படை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்தச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.