Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பானவழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்: மஹாநாயக்க தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பானவழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்: மஹாநாயக்க தேரர்

[size=2]

[size=4]பயங்கரவாத குற்றச்சாட்டுகள் காரணமாக தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க தேரரான அதி. வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் கூறியுள்ளார்.[/size][/size][size=2]

[size=4]வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தன்னை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சிறு குற்றங்களைச் செய்தவர்களை தடுப்புக்காவலில் வைத்திருப்பது அவசியமில்லை எனவம் அவர்கள் மீதான விசாரணைகள் மறறும் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டபின்னர் அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், இடம்பெயர்ந்த மக்கள் பலர் தமது சொந்தக் காணிகளை திரும்பப் பெறவில்லை என தனக்குத் தெரியவந்துள்ளதாக கூறினார்.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். சில வருடங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விளங்கியதை சுட்டிக்காட்டிய மஹாநாயக்க தேரர், அரசாங்கத்தலுள்ள பொறுப்புவாய்ந்த பல குழுக்கள் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு யதார்த்தமான தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக ஆசிரியர்களும் பேராசிரயிர்களும் முதல்தடவையாக இத்தகைய பாரிய போராட்டங்களை நடத்துவதை காண்பது பரிதாபகரமானது என அவர் கூறினார். (ஜே.ஏ.எல்.ஜயசிங்க)[/size][/size][size=2]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/47482-2012-08-27-15-41-11.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்னேற்றம் இவருடைய அறிக்கையை நான் வரவேற்பதுடன் இன்னும் சற்று அழுத்தத்தை இலங்கை அரசியல் தலைவர்கள் மீது பிரயோக்கிக்க வேண்டும் என்றும் மற்றும் இனவாதத்தை சிங்கள மக்கள் மனங்களில் இருந்து அகற்ற தன்னுடைய பதவியின் மூலம் இவர் செயற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.