Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனா இலங்கை விசேட உறவுகள் (Special Relationship).!

Featured Replies

தமிழர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்திற்கு உதவ இந்தியாவையும் தனது சொந்தப் பாதுகாப்பிற்கு உதவச் சீனாவையும் இலங்கை பயன்படுத்துகிறது. இதற்காக மிகவும் சாதுரியமான தந்திரோபாயங்களை அது கையாள்கிறது. மேற்கூறிய இரு நாடுகளும் இலங்கையின் நோக்கங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றன. அதை இலங்கையின் இராசதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாக கருத முடியும்.

அருகில் இருக்கும் இந்தியாவை பகைக்க இலங்கையால் முடியாது. இந்தியாவுக்கு எதிராகச் செயற்படாவிட்டாலும் இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இலங்கை தயங்குவதில்லை. அதே சமயம் சீனா எங்களுடைய மிகவும் நெருக்கமான நட்பு நாடு என்று இலங்கை பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

கயிற்றில் நடக்கும் இந்த இராசதந்திரம் நீடிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே சில நோக்கர்கள் நீடிக்க வாய்ப்பில்லை என்று எச்சரித்துள்ளார்கள்;. அதைக் கருத்தில் எடுத்துள்ள இலங்கை சீனா உறவைப் பலப்படுத்தி வருகிறது. சீனாவுக்கும் இலங்கை நட்பு அவசியம் தேவைப்படுகிறது.

இலங்கை இந்து மாகடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சின்னஞ் சிறிய தீவு. அது தனது பாதுகாப்பின்மையை நன்கு உணர்ந்து அதற்குப் பொருத்தமான நகர்வுகளை மேற்கொள்கிறது. இந்தியாவின் நிலப்பரப்பு, மக்கள் தொகை, ஆயுதபலம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கண்டு இலங்கை மிரண்டு போய் உள்ளது.

சுதந்திரம் பெற முந்தியே இந்தியத் தலைவர்கள் இலங்கை தொடர்பாக வெளியிட்ட கொள்கை விளக்கங்கள் இலங்கையை அச்சுறுத்தியுள்ளன. இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்கள், வெளியுறவு ஆகியவை ஏதோவொரு விதத்தில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நேரு, அவருடைய ஆலோசகர் பேராசிரியர் பணிக்கர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சீத்தாராமையா போன்றோர் வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் உள்ளனர்.

இந்தியாவைத் தமிழர்களின் நாடென்று சராசரிச் சிங்களவர்கள் தவறாக எண்ணுகின்றனர். தமிழர்கள் மீதுள்ள வெறுப்பை அவர்கள் இந்தியாவுக்குக் காட்டுகின்றனர். தமிழர்களுக்கு இந்திய அரசு மதிப்பளிப்பதில்லை என்பதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். ஆனால் சீனாவோடும் சீன மக்களோடும் மிகவும் இயல்பான நட்புறவை சிங்கள அரசும் மக்களும் பேணுகின்றனர்.

இந்தியாவுக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் இடையிலான சமச்சீரற்ற உறவுகள் (Asymmetrical Relationship) இந்த நாடுகளுக்கு சீனாவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்தியாவால் வரக்கூடிய ஆபத்திற்கு மாற்று மருந்தாக அவை சீனாவைக் கருதுகின்றன.

தெற்கு ஆசியாவில் இப்போது நிகழும் இந்தியா, இலங்கை, சீனா முக்கோண நடப்பின் பின்னணியைப் புரிந்து கொள்ள மேற்கூறியவை உதவுகின்றன. தெற்கு ஆசிய விவகாரங்களில் சீனாவின் நுளைவு புதிய பரிமாணத்தைப் புகுத்தியது. இந்து மாகடல் இந்திய மாகடலாக இருக்க கூடாது என்ற இலக்குடன் சீனா செயற்பட ஆரம்பித்தவுடன் புதிய பரிமாணம் பல வடிவங்கள் எடுத்தது.

சுதந்திரம் பெற்ற இலங்கையின் (1948) முதலாவது ஆட்சி மாற்றம் 1956ல் ஏற்பட்டது. ஆட்சி அதிகாரம் தனது முதுசொம் என்ற நினைப்பில் இருந்து ஜக்கிய தேசிய கட்சி அரசு எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்கா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் தோற்கடிக்கப்பட்டது.

இலங்கை அரசியலில் 1956 மிகவும் முக்கியமான ஆண்டு. அமெரிக்க ஆணைக்குப் பணிந்து சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றுடன் இராசதந்திர உறவுகளைப் பேணாமல் இருந்த இலங்கை இதே வருடம் சோவியத் ஒன்றியம் சீனா ஆகியவற்றில் தனது தூதரகங்களைத் திறந்தது. சோவியத் ஒன்றியமும் சீனாவும் தூதரகங்களை கொழும்பில் திறந்தன.

சோவியத் ஒன்றியத்தின் வெட்டு வாக்கு மூலம் (Veto) ஐநா உறுப்புரிமை இல்லாமல் தவித்த இலங்கை அரசிற்கு 1956ல் உறுப்புரிமை கிடைத்தது. 1948க்கும் 1956க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐநாவில் உறுப்பு நாடாக இணைவதற்கு இலங்கை ஐந்து தடவை விண்ணப்பம் செய்து தோல்வி கண்டது நினைவிருக்கலாம்.

1956ல் தனிச் சிங்களச் சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேறியதோடு தமிழ் சிங்கள உறவில் விரிசல் ஏற்பட்டது. தமிழர் சிந்தனையில் தமிழகம் தாய் நாடு என்ற வடிவம் எடுக்கத் தொடங்கியது. இது சிங்களவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியது. அன்று ஏற்பட்ட விரிசல் இன்று தமிழீழக் கோரிக்கையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

1948 -1956 காலப் பகுதியில் சோவியத் ஒன்றியம் சீனா ஆகிய நாடுகளுடன் இராசதந்திர உறவுகளை (Diplomatic Relationship) ஏற்படுத்த மறுத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு பொருளாதாரத் தேவைக்காக 1952ம் ஆண்டு சீனாவுடன் அமெரிக்க எதிர்ப்பையும் பொருட்படுத்தாது றப்பர்-அரிசி ஒப்பந்தத்தைச் (Rubber Rice Agreement of 1952) செய்து கொண்டது.

இன்றுவரை நிலைத்து நிற்கும் இந்த ஒப்பந்தம் பெரும் இருபக்க இராசதந்திர வெற்றியாகக் கருதப்படுகிறது. அப்போது சீனாவுக்கு இயற்கை றப்பர் அத்தியாவசியம் தேவைப்பட்டது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக றப்பர் உற்பத்தி செய்யும் மலாயா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் சீனாவுக்கு வழங்க மறுத்து விட்டன.

இலங்கையில் அப்போது அரிசித் தட்டுப்பாடு. உலகச் சந்தையில் அரசி விலை அதிகம். இலங்கைக்குக் கட்டுப்படியாகாத உயர்ந்த விலை. சீனாவிடம் விற்பனைக்கு அரிசி இருந்தது. றப்பருக்கு மாற்றீடாக அரிசி வழங்கச் சீனா தயார் நிலையில் இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீன அரிசையை பெற்றுக் கொண்டு தனது நாட்டு இறப்பரைச் சீனாவுக்கு இலங்கை வழங்கியது.

பண்டாரநாயக்கா கணவன் மனைவி ஆட்சியில் (1956 -1977) இலங்கை –சீனா நெருக்கம் ஏற்பட்டது. கணவன் பண்டாரநாயக்கா ஆட்சிகாலம் 1956 – 1959. மனைவி சிறிமாவோ ஆட்சி காலம் 1960 – 1965. எதிர்கட்சி யூஎன்பி ஆட்சி டட்லி சேனநாயக்கா தலைமையில் 1965 -1970. மீண்டும் சிறிமாவோ ஆட்சி 1970 – 1977.

இந்த கால கட்டங்களில் சீனா அரசியல் ரீதியாக இலங்கையுடன் நெருக்கம் கண்டது. இலங்கையில் கால் பதிக்கும் அளவுக்கு சீனக் கொள்கை வளர்ச்சி பெறவில்லை. 1962ல் இந்திய- சீன எல்லைப் போர் நடந்த போது சிறிமாவோ சீனாவுக்கு அனுகூலமான நடுநிலை வகித்தார்.

பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரின் போதும் (1965) டட்லி சேனநாயக்கா அதே வகை நடுநிலை எடுத்தார். 1971ல் வங்க தேசப் போர் நடந்த போது பாக்கிஸ்தான் விமானங்கள் கொழும்பில் தரித்துச் செல்ல பிரதமர் சிறிமாவோ அனுமதித்தார். பாக்கிஸ்தானுடன் அணுக்கமான நட்புறவைப் பேண வேண்டும் என்பதில் சிறிமாவோ பண்டாரநாயக்கா குறியாக இருந்தார்.

இந்தக் கால கட்டத்தில் இரு பக்க உறவு, அதாவது சீனா – இலங்கை இடையில் அரசியல் உறவாக மாத்திரம் இருந்தது. சீனாவின் கால்பதிக்கும் உத்தேசம் சிறிமாவோவின் முதலாவது ஆட்சி காலத்தில் வெளிப்பட்டது. ஆனால் அதிலிருந்து பெரிதாக ஒன்றும் நிறைவேறவில்லை.

சிறிமாவோ பண்டாரநாயக்கா யூலை 1963ல் கடல்சார் ஒப்பந்தத்தை (Maritime Agreement) சீனாவுடன் செய்தார். இரு பக்கத் துறைமுகங்களில் இருந்து புறப்படும் இரு நாட்டுக் கப்பல்களில் ஏற்றப்படும் பயணிகள், சரக்குகள் தொடர்பாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த ஒப்பந்தம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. 1965ல் ஆட்சி மாற்றம் இலங்கையில் ஏற்பட்டதால் பெரிதாக ஒன்றும் நிறைவேறவில்லை.

இந்தியா 1987ல் இலங்கை வான் பரப்பில் நுளைந்து சில அரிசி பருப்பு மூட்டைகளை விமானங்களில் இருந்து போட்ட பிறகு இந்தோ – இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. இதன் தொடர்ச்சியாகத் தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியது.

இந்த மூர்க்கத்தனமான நகர்வுகள் இலங்கையை சீனா பக்கம் தள்ளியது. இந்திய இராணுவம் தமிழர்களை அழிக்க அனுப்பப்பட்டாலும் சிங்களவர்களுக்கும் அது எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் சிங்களவர்களுக்கு ஏற்பட்டது. ஈழப் போர்கள் ஆரம்பித்த போது சீனாவின் நட்பிற்கு இலங்கை கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்குச் சலுகை விலையில் பெருந் தொகை ஆயுதங்களை சீனா வழங்கியது. 1993ல் காலி துறைமுகத்திற்குள் சீனாவின் நொறின்கோ (Norinco) ஆயுத உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் பாரிய ஆயதக் களஞ்சியத்தை நிறுவியுள்ளது.

அம்தோட்டையில் ஒரு ஆழ்கடல் துறைமுகத்தை ஒரு பில்லியன் டாலர் செலவில் அமைப்பதற்கு சீனா 2007ல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து அந்தப் பணியை நிறைவேற்றியுள்ளது. 2008ல் ஒரு பில்லியன் டாலர் பொருளாதாரக் கடனுதவியை சீனா வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 34 மைல் தொலைவிலுள்ள மீரிகம நகரில் ஒரு பிரத்தியேக பொருளாதார வலயத்தை (Exclusive Economic Zone) இலங்கை அரசு சீனாவுக்கு வழங்கியுள்ளது. பர்மா, வங்கதேசம், பாக்கிஸ்தான், இலங்கை, செய்ஷெலெஸ் நாடுகளில் துறைமுகங்களைக் சீனா கட்டியுள்ளது. அவை சீனாவின் “முத்து மாலை” என்று (China’s String of Pearls) அழைக்கப்படுகின்றன.

இந்தியாவைப் படிப்படியாகச் சீனா சுற்றி வளைக்கத் தொடங்கியுள்ளது. பாக்கிஸ்தானைப் பலப்படுத்தி இந்தியாவுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்த்திய சீனா இலங்கையின் முதுகெலும்பாகவும் இடம்பெறுகிறது. புத்தளத்திற்கு அருகேயுள்ள நுரைச்சோலையில் 9000 மெகாவாற் அனல் மின் நிலையத்தை அமைக்கும் சீனா அங்கிருந்து இந்தியக் கடற்கரையைக் கண்காணிக்கிறது.

நாச்சிக்குடா கடற்படைத் தள விரிவாக்கத்திற்கும் கச்சதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்கும் சீன அரசு நேரடி உதவிகளை வழங்கியுள்ளது. இவை இந்தியாவை குறிவைத்து நடத்தப்பட்டவை.

முறிகண்டியில் தமிழ் மக்களின் 20,000 எக்கர் நிலத்தில் சிங்கள .இராணுவத்தினரின் வீடமைப்புத் திட்டத்தை சீனா மேற்கொள்கிறது. முள்ளிக்குளத்தில் சிங்கள மீனவர்களுக்கும் அவர்களைப் பாதுகாக்கும் கடற்படைக்கும் சீன அரசு நிரந்தர குடியிருப்புக்களை அமைத்துள்ளது.

அது மாத்திரமல்ல பல பில்லியன் டாலர் பெறுமதியான நிதியை நீண்ட கால சலுகை வட்டி அடிப்படையில் இந்த வருடம் வழங்குகிறது. இலங்கையைத் தனது வணிகப் பங்காளியாகவும் இணைத்துள்ளது.

பூநகரியில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை நிறுவும் பொறுப்பையும் சீனா ஏற்றுள்ளது. இந்த விமான நிலையம் இந்திய வான்பரப்பிற்கு மிகவும் நெருக்கமாக அமையவிருக்கிறது.

இலங்கை அரசின் ஒப்புதலுடன் மிக ஆழமாகச் சீனா இந்தத் தீவில் காலூன்றியுள்ளது. இதற்கு இந்தியா மேற்கொண்ட இலங்கை தொடர்பான தூரநோக்கற்ற வெளியுறவுக் கொள்கை தான் காரணம்.; இது பற்றி அடுத்து வரும் ஆய்வுரைகளில் பார்க்கலாம்.

www.Tamilkathir.com

கயிற்றில் நடக்கும் இந்த இராசதந்திரம் நீடிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே சில நோக்கர்கள் நீடிக்க வாய்ப்பில்லை என்று எச்சரித்துள்ளார்கள்;. அதைக் கருத்தில் எடுத்துள்ள இலங்கை சீனா உறவைப் பலப்படுத்தி வருகிறது. சீனாவுக்கும் இலங்கை நட்பு அவசியம் தேவைப்படுகிறது.

[size=4]இதில் இழப்பில்லாத வெற்றி சீனாவுக்கு மட்டுமே. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.