Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளை நோர்வே பலவந்தமாக பிடித்து வைத்துள்ளதாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளை நோர்வே பலவந்தமாக பிடித்து வைத்துள்ளதாம்

01 செப்டம்பர் 2012

மீட்பதற்கு அங்கஜன் ஊடாக கோத்தாபயவிடம் கோரிக்கை

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளை நோர்வே அரசாங்கம் பலவந்தமாக பிடித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தச் சிறுவர் சிறுமியரை விடுதலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அங்கஜன் ராமநாதனின் ஊடாக பாதுகாப்புச் செயலாளருக்கு உறவினர்கள் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

60 இலங்கைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களை நோர்வே அரசாங்கம் பலவந்தமாக பிடித்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

போஷாக்கான உணவுகளை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி இவ்வாறு சிறுவர் சிறுமியரை நோர்வே அரசாங்கம் பிடித்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் அங்கஜன் ராமநாதனின் ஊடாக கோதபாய ராஜபக்ஷவிற்கு முதல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், அதன் போது நோர்வே வாழ் தமிழர்களின் இலங்கை உறவினர்கள் மேலுமொரு கடிதத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் பாதுகாப்பு என்ற போர்வையில் நோர்வே அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு சிறுவர் சிறுமியரை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சிறுவர் சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகத் தெரிவித்தும் தமது பிள்ளைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சில பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த இலங்கைச் சிறுவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விடயம் குறித்து தமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த விவகாரம் குறித்து நோர்வே அரசாங்கமோ தூதரகமோ எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

எனினும் இது குறித்து நோர்வேயின் தமிழ்த் தரப்புக்கள் சிலரிடம் வினவிய போது சிறுவர் பராமரிப்புக் குறித்து நோர்வே அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு முரணாக செல்லும் போது இத்தகைய சிக்கல்களை ஏனைய நாட்டு மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82317/language/ta-IN/article.aspx

[size=4]கோத்தா நோர்வேக்கு எதிராக ஏன் ஒரு நாடகம் போடுகின்றார்? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வெளிநாட்டில் வாழ்ந்தாலும்...

அந்த நாடு, உங்கள் பிள்ளைகளை, நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்று கருதினால்...

அரசாங்கமே... பொறுப்பேற்கும். இது, இலங்கை தமிழருக்கு மட்டுமல்ல... நோர்வேஜியப் பிரஜைக்கும் அதுதான்... சட்டம்.

இந்தப் பொதுவான... விதிமுறையை, ஸ்ரீலங்கா ஊத்தைவாளி அரசியல் வாதிகள், பெரிதாக்குவதன் மர்மம் புரியவில்லை.

முதலில் இவர்கள்.... ஊரிலுள்ள சிறுவர்களை கவனமாகப் பார்க்கட்டும். அதன், பின் மற்றவனை... குறை சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]A group of Sri Lankan Tamils living in Norway, whose children were allegedly forcibly taken into Norwegian State custody, have written to Defence Secretary Gotabhaya Rajapaksa, seeking government intervention for the release and return of these minors.

Children from 60 Tamil families have been forcibly taken away for dubious reasons, ranging from unhygienic feeding habits to embraces that are sexual in nature.

“The parents are permitted to see the kids in foster care only three times a year for about two hours. Our children were crying when disclosing the anguish they for forced to undergo, “Mahatmajothi said, asking, “ We respect the rules and regulations of a country, but why must our children should suffer as a result of authorities being insensitive to different cultures?”

He said the children plead for the parents to protect them and claimed that some have even threatened to commit suicide.

According to Selvathurai Mahatmajothi and several others, a 17-year-old child under foster care, had committed suicide last Friday.

http://www.ceylontoday.lk/27-11926-news-detail-norwegian-excess.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.