Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக காங்கிரஸ் கட்சி உடைகிறதா..? பின்னணியில் மு.கருணாநிதி ..?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

தமிழக காங்கிரஸ் கட்சி உடைகிறதா..? பின்னணியில் மு.கருணாநிதி ..?! ஈழதேசம் செய்தி..!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான கட்சி ஒழுங்கு நடவடிக்கை, ப.சிதம்பரம் க்ரூப், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞான தேசிகன் க்ரூப் என்பது போக,யார் யாரெல்லாம் மாவட்ட, ஒன்றிய லெவல் தலைவர்களாக காங்கிரஸ் கட்சியில் உள்ளார்களோ அவர்கள் அனைவருமே வாளியில் கொட்டிய நண்டுகளாகவே இருந்து வருகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் வெளியே தாவி விடும் குணாம்சங்களை கொண்டவர்கள் தான் தமிழக காங்கிரஸ் அரசியல்வாதிகள். இதற்கு உதாரணம் மூப்பனார் தலைமையில் உருவாகிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி,

இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று மதியம் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவத்தினர் திரும்ப அவர்கள் நாட்டுக்கே அனுப்பபடுவார்கள் என்றும் மேலும் இது குறித்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்து, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றார்.

ஆக, டெசோ மாநாடு மூலம் தி.மு.க.,வின் தலைவர் மு.கருணாநிதி, மூன்றாவது அணி அமைப்பதில் தீவிரமாக உள்ளார் என்றே கருதலாம். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாக விமர்சிப்பதின் மூலம் தனது அரசியல் காய் நகர்த்துதல்களை ஆரம்பித்து விட்டார். இனி தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகள் என்றில்லை, யார் யாரெல்லாம் தேர்தல் களத்தில் உள்ளார்களோ, அவர்கள் அனைவரும் மத்திய அரசில் பங்கு பெறுவது ஒன்றே தங்களது உடனடி லட்சியம் என்று செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் சூடு பிடித்துள்ள இலங்கை பிரச்சனையை முன்னிறுத்தி, தமிழக காங்கிரஸ் கட்சியை உடைத்து, மூன்றாவது அணியை உருவாக்குவதில் மு.கருணாநிதி தனது முதல் அடியை வைத்துள்ளார் என்று கருதலாமா..? அதன் விளைவே ஜி.கே.வாசன் இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று பாதுகாப்புத் துறையை வலியுறுத்துவோம் என்று கூறுவது..?

என்று கருதலாம் என கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

[size=4]தமிழகத்தில் காங்கிரஸ் பெயரளவில் மட்டுமே கட்சியாக இருக்கவேண்டும். [/size]

[size=1]

[size=4]அதை யார் செய்தாலும் நல்லது. [/size][/size]

[size=4]இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று மதியம் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவத்தினர் திரும்ப அவர்கள் நாட்டுக்கே அனுப்பபடுவார்கள் என்றும் மேலும் இது குறித்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்து, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றார்.
[/size]

[size=6]Vasan opposes training of Sri Lankan military personnel in India[/size]

[size=5]Union Shipping Minister and Congress strongman in Tamil Nadu G.K. Vasan on Saturday added his voice to the growing clamour against the training of Sri Lankan military personnel in India and demanded that the two officers, now in the country, should be sent back immediately.[/size]

[size=5]Mr. Vasan said his party unit in the State was in full agreement with other political parties on this issue and would soon meet Defence Minister A.K. Antony to press the demand.[/size]

[size=5]“The Congress party in the State is firm that Sri Lankan Army officials should not be given training in the country and the two officials who are already being trained in the Defence Staff Services College, Wellington, should be sent back immediately,” he told reporters in Chennai.[/size]

http://www.thehindu....icle3848191.ece

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றினாலும அரிசியானால் சரி. கருணாநிதி வெட்டுவதில் ஒரு வைரம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.