Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டாரவளையில் காணாமல்போன யாழ்ப்பாணச் சிறுவன் பொலிஸாரால் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவளையில் காணாமல்போன யாழ்ப்பாணச் சிறுவன் பொலிஸாரால் மீட்பு face.jpg By Priyarasa

2012-09-01 17:42:39

\

பண்டாரவளையில் காணாமல் போனதாக கூறப்பட்ட யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் சுரேஸ்குமார் பிரசாத் நுவரேலியாவில் உள்ள கடையொன்றில் இருந்து பொலிசாரினால் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸாருக்கு நுவரேலியாப் பொலிசாரினால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மாணவனின் பெற்பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாக பண்டாரவளை பொலிஸில் ஆசிரியர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸா குறித்த சிறுவனை மீட்டுள்ளார்கள்.

ஏற்கனவே சிறுவன் தன்னை யாரோ கடத்திவிட்டதாக சுன்னாகத்தில் உள்ள தையல் கடை உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும் அதனை பெற்றோர்கள் பொலிஸாருக்ககு தெரிவித்ததாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பிட்ட சிறுவனை இன்று மாலை விசாரனைகளை நிறைவு செய்த பின்னர் ஆசிரியர்களிடம் கையளிக்கவுள்ளதாகவம் மாணவனை அழைத்தக்கொண்டு நாளை ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாகவும் பெற்றொர்கள் தெரிவித்துள்ளார்கள்.

http://www.virakesar...cal.php?vid=400

  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள தொடர்பு பட்ட‌ செய்தியை.. நேற்று வீரகேசரியில் வாசித்த போது...

சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் மேல்... ஆத்திரம் ஏற்பட்டது.

15 வயதுச் சிறுவனை தனியே... ஒரு சிங்களப் பகுதியில் தேநீர் கடைக்குச் செல்ல, அனுமதித்ததன் பொறுப்பற்ற தன்மையை... வன்மையாக கண்டிக்கின்றேன். இனி மேல்.. இது போன்ற, செயல்களில் ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

----------

யாழ். மாணவன் பண்டாரவளையில் மாயம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மலை நாட்டுக்குச் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போன சம்பவம் பண்டாரவளையில் இடம் பெற்றுள்ளது.

யாழ். வலிகாமம் கல்வி வலயத்தினால் கடந்த திங்கட் கிழமை பாடசாலை மாணவர்கள் சிலர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சென்ற மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு பண்டாரவளை முருகன் ஆலயத்தில் தங்கியுள்ளார்கள்.

அடுத்த நாள் காலையில் குறித்த மாணவன் ஆலயத்தின் முன்பாகவுள்ள தேநீர்க்கடைக்குச் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற மாணவர் திரும்பி வரவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களை அழைத்துச்சென்ற ஆசிரியர்கள் மாணவனை அயலில் தேடிய போதிலும் மாணவனைக்காணாத நிலையில் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்துள்ளதுடன் பெற்றோர்களுக்கும் அறிவித்துள்ளார்கள்.

சுன்னாகம் கலைவாணி வாசிகசாலையடியில் வசிக்கும் சுரேஸ்குமார் பிரசாத், வயது 15 என்பவரே காணாமல் போனவராவார். இவர் சுன்னாகம் மயிலணி மகாஜனா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வீர‌கேச‌ரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.