Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுறுதியை வெளிக்காட்ட அனைவரும் வாக்களியுங்கள்: யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம்

Featured Replies

20120905-113642.jpgகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்டாயமாக சகல தமிழ் மக்களும் வாக்களித்து, தமிழ்த் தேசியம், தமிழர் சுயநிர்ணயம், வடகிழக்கு இணைப்பு என்பவற்றினை வலியுறுத்தி தமிழ்த் தேசியத்தின் மேலான பற்றுறுதியை வெளிக்காட்டுமாறு தமிழ்மக்களிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“திணிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்டாயமாக சகல தமிழ் மக்களும் வாக்களித்து மாகாண சபையில் போட்டியிடும் சரியான தரப்பினரைத் தெரிவுசெய்து அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் நாம் என்றுமே தமிழ்த் தேசியத்தினையும் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தையும் விரும்புகின்றோம் என வலியுறுத்தவேண்டும்.

உரிய காலத்துக்கு முன்னரே கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது இன்று உங்கள் முன்னிலையில் திணிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கானது கடந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அபிவிருத்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரதேசங்களாகும். ஆனால் அரசாங்கமானது தமிழர்களின் கோரிக்கையான இணைந்த வடக்கு, கிழக்கு என்பதை மறுதலித்து வடக்கையும் கிழக்கையும் பிரித்ததுடன் கிழக்கு மாகாணத்துக்கென தனியான தேர்தலையும் நடத்தியது.

அப்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் யாரும் போட்டியிடாத சந்தர்ப்பத்தில் வெற்றி பெற்ற சிலர் கிழக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியத்தை கைவிட்டதாகக் கூறினர்.

ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தமது தேசியத்துக்கான அவாவை வலியுறுத்தினர். அதிலும் கிழக்கு வாழ் எம் உறவுகள் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றை உறுதியாக செயற்படுத்தினர்.

ஆனாலும் இன்று வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்கும் முகமாக அரசாங்கமானது உரிய காலத்துக்கு முன்னரே கிழக்கு மாகாண சபையைக் கலைத்து தான் வெற்றிபெறுவதன் மூலம் மக்கள் தம் கருத்தையே ஏற்றுள்ளனர் எனக் கூறி தமிழ்த் தேசியவாதிகளை நிராகரித்து, அவர்களது கோரிக்கைகளை கவனத்தில் எடுக்கத் தேவையில்லை எனக் கூற ஆயத்தமாகி வருகிறது.

மக்களின் விருப்பமற்றதும் பங்களிப்பற்றதுமான சில உரிமைகளையும் மக்களுக்கு வழங்காமல் நாட்டில் சமாதானம் நிலவுவதாக பொய் கூறி கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் என மக்களை ஏமாற்றி வருவதுடன் அவர்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த தயக்கம் காட்டியும் வருகின்றது.

இது மட்டுமல்லாது வட கிழக்குப் பகுதிகளில் ஆங்காங்கே புத்தர் சிலைகளை துளிர்விடச்செய்து இலங்கைத்தீவானது தனிச் சிங்கள நாடென பறைசாற்ற முயல்கின்றது. இச் செயலுக்கு எம்மவர் சிலரும் துணைபோகின்றமை வருத்தத்திற்குரிய விடயமாகும்.

மாகாண சபை முறைமையானது எவ்வித அதிகாரமற்றதும் தமிழ்மக்களுக்கு பயனற்றதுமான முறைமையாகும். ஆனாலும் அந்த விடயத்தை தீர்வாக ஏற்குமாறு பிற தரப்புக்கள் தமிழர்களை வற்புறுத்தி வருகின்றன.

ஆயினும் இம் மாகாண சபை முறைமையானது எவ்வித அதிகாரமும் அற்றதென்றும் இதைவிட கூடிய அதிகாரமுள்ள நிலையான அரசியல் தீர்வை வழங்கக்கூடிய சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கப்படக்கூடியதொரு தீர்வே தமிழர்களுக்கு அவசியம் எனவும் அத்தரப்புக்களுக்கு விளங்கவைக்க வேண்டிய கடப்பாடும் இன்று காணப்படுகின்றது.

அதனால் இன்று உங்கள் முன்னிலையில் திணிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் கட்டாயம் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சரியான தரப்புக்கு வாக்குகளை அளிப்பதன் மூலம் தவறானவர்களின் கையில் ஆட்சி அதிகாரம் செல்வதை தடுத்து அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் நாம் என்றுமே தமிழ்த்தேசியத்தையும் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தையுமே விரும்புகின்றோம் என வெளிக்காட்டும் வண்ணம் தேர்தல் களத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியம், தமிழர் சுயநிர்ணயம், வடக்கு, கிழக்கு இணைப்பு என்பவற்றை வலியுறுத்தும் தரப்புக்கே மக்கள் பேராதரவை வழங்கி மண்ணிற்காக மடிந்த எம் உறவுகளை மனதில் நிறுத்தி பெருவாரியாக வாக்களித்து தமிழ்த் தேசியத்தின் மேலான பற்றுறுதியை வெளிக்காட்டி நிற்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.”

www.irruppu.com

[size=4]தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது போர் குணம் மிக்க ஒரு புரட்சிகர இயக்கம் அல்ல. போர் குணம் மிக்கவர்கள் மிதவாதிகள் மேற்குலக விசுவாசிகள், இந்திய விசுவாசிகள் என்று பலதரப்பட்ட குணாம்சங்களைக் கொண்ட அரசியல் தலைமைகளின் கூட்டணி தான் அது.முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியல் தளத்தில் வாக்குச் சீட்டு அரசியல் மூலம் தமிழர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வது பேச்சுவார்த்தைகள் மூலம் இனப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று நம்புவது சர்வதேசமும் இந்தியாவும் நமக்கு தீர்வை பெற்றத் தரும் என்று கூறுவது என்று கூட்டமைப்பின் அரசியல் பாதை என்பது இவ்வாறு சமரசப் போக்குடையது தான்.[/size]

[size=4]உலகில் விடுதலைப் போராட்டங்கள் மிக மோசமான தோல்வியை தழுவுகிற போது போராடிய இனங்களுக்கு இரண்டு தெரிவுகளைத்தான் எதிரியும் சரி சர்வதேச மேலாதிக்க சக்திகளும் சரி விட்டுவைக்கும்[/size]

[size=4]ஒன்று சரணாகதி அரசியல்[/size]

[size=4]மற்றது சமரச அரசியல்[/size]

[size=4]போராடிய இனம் முற்றுமுழுதாக தனது இலட்சியத்தை கைவிட்டு எதிரியின் அரசியலை நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்டு செயற்படுவது. இதைத்தான் டக்களஸ் கருணா பிள்ளையான் முதலானோர் செய்து வருகின்றனர்[/size]

[size=4]சமரச அரசியல் என்பது தமது இலட்சியத்தை முற்றாக கைவிடாமல் போரால் அழிக்கப்பட்ட தமது நிலப்பரப்பையும் அதிலுள்ள மக்களையும் அந்த விடுதலைப் போரில் ஈடுபட்ட போராளிகள் மற்றும் அந்தப் போராட்டத்துக்கு தூணாக நின்று சொல்லணா இழப்புக்களையும் சந்தித்த மக்களையும் எதிரி மேலும் துடைத்தழித்துவிடாமல் தடுப்பதற்காகவும் உண்மையான எதிர்ப்பரசியல்(போராட்டம்) மீண்டும் மெல்ல மெல்ல மீட்சி பெற்ற ஒரு முழுமையான எதிர்பு அரசியலாக பலம் பெறும் வரை இலட்சிய நெருப்பையும் போர் குணத்தையும் அணையாமல் பாதுகாப்பதற்கும் போர்களத்தை (தாயகத்தை) முற்று முழுதாக இழந்துவிடாமல் தடுப்பதற்கும் இந்த சமரச அரசியல் என்பது பயன்படுகிறது.இதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இபபோது செய்கிறது;[/size]

[size=4]இது தான் பலஸ்தீனம் தென்சூடான் கிழக்கு தீமோர் எரித்திரியா தென்னாபிரிக்கா என்று ஆயுதப் போராட்டங்கள் நடந்த பல்வேறு நாடகளிலும் நட்திருக்கிறது.[/size]

[size=4]ஒரு விடுதலைப் போராட்டம் தோற்றபின்னர் அதன் இடத்தை நிரப்பும் இந்த சமரச அரசியலில் ஒவ்வாரு நகர்வும் சர்வதேச கவனத்தை பெறுவது வழக்கமாகும்.[/size]

[size=4]விடுதலைக்கு போராடி தோற்ற ஒரு இனம் மறுபடியும் தன்னுடைய பேராட்டத்திற்கான தயார்படுத்தலை செய்யும் வரை போராடும் சக்திகள் மீள் எழுச்சி கொள்ளும் வரை இந்த சமர அரசியலால் தங்களது இலக்கை அடைய முடியாது என்று தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.[/size]

[size=4]சமரச அரசியல் பாதை நிராகரிக்கப்படும் போது எதிரி சரணாகதி அரசியல் வாதிகளைக் கொண்டு அந்த இடத்தை நிரப்பி விடுதலைப் போராட்டத்துக்கு இன்னும் பின்னடைவையும் அதற்கான வளங்களை மேலும் துடைத்தழிக்கும் வேலையையே செய்வான்.[/size]

[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்பு நூற்றுக்கு நூறு விதம் சரியான அமைப்பு புரட்சிகர அமைப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் தாயகத்திலுள்ள மக்களுக்கு அதை ஆதரிப்பதை தவிர வேறு தெரிவுஇல்லை.[/size]

[size=4]இன்றைய சூழலில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கக் கூடாது அவர்கள் பிழையானவர்கள் அதனால் தோற்கடிக்கப்பட வேண்டும் யாராவது கூறினால் நிச்சயமாக அவர்கள் சிறீலங்கா அரசின் நலன் விரும்பிகளாகவே இருக்க முடியும்[/size]

இந்த வகையில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரும் அனைவருடனும் நாங்கள் கைகோர்க்க கடமைப்பட்டிருக்கிறோம்

Edited by navam

[size=4]கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறவேண்டும் என்று கருத்துத் தெரிவித்த பலரில் சிலர்[/size]

[size=4]மரணப்பொறிக்குள் மக்களைச் சிக்கவைக்கும் மஹிந்த அரசுக்கு கிழக்குத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்! - கலாநிதி விக்கிரமபாகு[/size]

[size=4]8 ஆம் திகதி - கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும்: வல்வெட்டித்துறை நகர பிதா[/size]

[size=4]'தமிழருக்கு விடியலை வழங்க இறைவன் வழங்கிய சந்தர்ப்பம்; வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க தமிழர் மகா சபை வேண்டுகோள்[/size]

[size=4]தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் ஏனைய கட்சிகள் எதுவும் குரல் கொடுக்காத நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஜனநாயக பிரதி நிதித்துவத்தை தக்கவைத்துள்ளபடியால் தமிழ் மக்களின் அபிலாசைகளான தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற கொள்கைகளுடன் வழுவாது நிற்கவேண்டும் என்ற கோரிக்கையினை புலம்பெயர் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முன் வைத்து அந்த அடிப்படையில் அவர்களுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குரிமையை பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.'-பிரித்தானிய தமிழர் பேரவை -[/size]

[size=5]கூட்டமைப்புக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று அறிக்கை விடுபவர்களை நீங்களே பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வாக்களிக்க வேண்டியது தமிழர்கள் தாயகம்,தேசியம்,சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை தமது இலட்சியமாகக் கொண்ட கட்சிக்கே.கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று இருந்து நாளை மறைபவர்கள்.ஆனாலும் இலட்சியம் காலம் காலமாக எமது சந்ததிக்குக் கடத்தப்பட வேண்டும்.ஆகவே தனிப்பட்ட சில கூட்டமைப்புத் தலைவர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளுக்காக இந்த வேளையில் தேர்தலைப் புறக்கணிக்காமல் இனத்தின் நன்மை கருதி அனைவரையும் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.