Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் ஆப்ரிக்காவும் இலங்கையும் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்ரிக்காவும் இலங்கையும் - யமுனா ராஜேந்திரன்

06 செப்டம்பர் 2012

sri%20south1_CI.jpg

இலங்கை இராணுவத்தினர், இலங்கையிலிருந்து வழிபாட்டுக்கு வந்தவர்கள், விளையாட வந்தவர்கள் என அனைவரும் திருப்பி அனுப்பட்டுள்ளார்கள். வழிபாட்டுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விவாதங்களும் மாறுபட்ட கருத்துக்களும் தமிழகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இராணுப் பயிற்சி உள்பட அனைத்திலும் இந்தியா இலங்கைக்கு இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறது தினமணி தலையங்கம். இலங்கை இராணுவத்தை வெளியேற்றக் கோரியதை வரவேற்ற திமுகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பிற வெகுமக்கள் விiயாட்டுக்காரர்கள் வெளியேற்றப்பட்டதனைக் கண்டித்திருக்கின்றன.

இந்தப் பிரச்சினையில் இலங்கை இராணுவம், வழிபாட்டாளர்கள் வெளியேற்றம், விளையாட்டு வீரர்கள் வெளியேற்றம், வழிபாட்டுக்கு வந்தவர்களின் மீதான தாக்குதல் என மூன்று குறிப்பான பிரச்சினைகள் இருக்கின்றன. முதலில் இலங்கை அரசுக்கு எதிராக எந்தவிதமானதும் பொருளாதார, கலாச்சார, திரைப்பட மற்றும் விளையாட்டுத் தடைகள் சரியானவைதானா என்ற கேள்வியை கேட்டுக் கொள்வோம். நிறவெறி போலவே இனவெறியும் அதன் பேரிலான கொலையும் ஆட்சியதிகாரமும் கண்டிக்கப்பட வேண்டியவைதானா என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்வோம்.

நிச்சயமாக நிறவெறியும் அதன் பேரிலான ஆட்சியும்போலவே இனவெறியும் அதன் பேரிலான ஆட்சியும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து அவசியமில்லை. இனக்கொலை என்பதும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதும் இலங்கை அரசோடு சம்பந்தப்பட்டது எனில், தென் ஆப்ரிக்க நிறவெறி அரசு மீது அறுபதுகளில் உலக நிறுவனங்களும் நாடுகளும் என்ன நடவடிக்கை எடுத்தனவோ அதேபோன்ற நடவடிக்கை இலங்கை அரசுக்கு எதிராகவும் பொருந்தும்.

தென் ஆப்ரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக உலகநாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. விளையாட்டு உறவுகளுக்குத் தடை விதித்தன. திரைப்படம், இலக்கியம், இசை உள்ளிட்ட கலாச்சாரப் பரிவர்த்தனைக்குத் தடை விதித்தன. கல்வி சார்ந்த பரிவர்த்தனைக்கும் தடை விதித்தன. இங்கிலாந்தின் தலைவி மார்கரட் தாட்சரும், அமெரி;க்க தனது வெள்ளைநிற ஆதிக்கத்தின் பொருட்டு ஜனாதிபதி ரீகனும் தென் ஆப்ரிக்க நிறவெறியை ஆதரித்தாலும் அந்த இரு நாடுகளின்; இலக்கியவாதிகளும்; இசைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் திரைப்பட நடிகர்களும் இயக்குனர்களும் தென் ஆப்ரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக கூட்டாகக் கையெழுத்திட்டு அந்த நாட்டோடு உறவு கொள்ள மாட்டோம் என அறிவித்தார்கள்.

திரைப்படங்களை அந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், இலக்கியவாதிகளை அங்கு போகவேண்டாம் எனவும், விளையாட்டு வீரர்கள் போகவேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்கள். இதில் ஹாலிவுட் சினிமாவின் அமர கலைஞன் மார்லன் பிரான்டோ முன்னணியில்; நின்றார். அது போலவோ அந்த தென் ஆப்ரிக்கத் திரைப்படங்களையும் கல்வியாளர்களையும் கிரிக்கெட் விளையாட்டுக் குழுவினரையும் தமது நாடுகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்கள்.

இந்தியாவும் தென் ஆப்ரிக்கா மீதான இந்தத் தடைகளைக் கடைபிடித்தது.

இலங்கை ஈழத் தமிழர்களின் மீது பாரபட்சம் காட்டும் நாடு என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றம் புரிந்தது, மனித உரிமை மீறல் புரிந்தது, 40,000 தமிழ் வெகுமக்களைக் கொன்றது எனும் குற்றச்சாட்டு ஐநா சபையில் இருக்கிறது. இலங்கை சுயாதீன உலக விசாரணையை மறுத்து வருகிறது. இச்சூழலில் போராடக் கூடிய நிலையில் உள்ள தமிழக மக்கள் ஏன் இலங்கை மீது பொருளாதாரத் தடையை, விளையாட்டுத் தடையை, திரைப்படத் தடையை, இலக்கிய பகிஸ்கரிப்பைக் கோரக் கூடாது? இதற்கான எல்லா உரிமைகளும் தமிழக மக்களுக்கும் உலகெங்குமுள்ள மனித உரிமையாளர்களுக்கும் தமிழக அரசுக்கும் உண்டு.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வகையில் தமிழக மக்களின் உணர்வுகளைத்தான் பிரதிபலித்திருக்கிறார்.

பிரச்சினை எங்கே வருகிறதெனில் இந்த பகிஸ்கரிப்பையும், தடைகோரல்களையும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதில்தான் வருகிறது. ஜெயலலிதா தமது அரசு நிர்வாக அளவில் எடுத்த நடவடிக்கைகள் ஆதரிக்கப்பட வேண்டியவை. தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மதிமுக போன்ற கட்சிகள் மேற்கொண்ட வழிபாட்டரளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் நிச்சயமாகவே கண்டிக்கத்தக்கன.

தமிழக மக்களினது ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, அதனோடு காங்கிரஸ் உள்பட தமிழகத்தின் பிற கட்சிகள் ஒன்றினைந்து இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு பதில் சொல்ல வேண்டிய, நிலைபாடு எடுக்க வேண்டிய நெருக்கடியை அது நீண்ட காலத்திற்குத் தவிர்க்க முடியாது. ஈழத் தமிழர்கள் தொடர்பான தமிழகத் தமிழர்களின் மனக்கொந்தளிப்பை அடக்குமுறையினால் ஒடுக்கிவிட முடியாது.

ஈழத் தமிழர்கள் தொடர்பாக தமிழக அரசியலுக்கும் மத்திய அரசின் கொள்கைக்கும் இடையில் இணக்கம் கண்டே தீர வேண்டும். அதனையே இந்த நெருக்கடி கோரி நிற்கிறது.

தென் ஆப்ரிக்கப் பிரச்சினையில் பகிஸ்கரிப்பையும் தடைகளையும் கோரியவர்கள் என்னவிதமாக அதை நடைமுறையில் முன்னெடுத்தார்கள்? தென் ஆப்ரிக்க வெகுமக்களின் மீது எவரும் தாக்குதல் தொடுக்கவில்லை. மாறாக விளையாட்டு, கலாச்சாரம், திரைப்படம், இலக்கியம், கல்வி, இசை என எல்லாத் தளத்திலும் நாட்டு ரீதியாக, அமைப்பு ரீதியாக, நிறுவன ரீதியாக அரசுகள் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். தாமாகவே முன்வந்து அந்த நாட்டைப் பகிஸ்கரிக்கத் தாம் அங்கம் வகிக்கும் அமைப்புக்களில் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

தனிமனிதர்களைத் தாக்குவதை ஒரு போராட்ட முறையாக அவர்கள் கொண்டிருக்கவில்லை. கொண்டிருக்கவும் முடியாது. அவ்வாறு பொதுமக்கள் தாக்கப்படுவதை எவரும் ஆதரிக்கவும் முடியாது.

இந்நிலையில், பொத்தாம் பொதுவாக மனிதாபிமானம் பேசுபவர்கள் பகிஸ்கரிப்பு அரசியலுக்கும், இலங்கை வெகுமக்கள் தாக்குதல் நடவடிக்கைக்கும் இருக்கும் வித்தியாசங்களைத் தெளிவுபடுத்திவிட்டுப் பேசுவதுதான் சரியாக இருக்கும். மனித உரிமை என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி. தமிழக சம்பவங்களை இட்டு துயரமும் கோபமும் வெளியிடுகிற தாராளவாதிகள், தென் ஆப்ரிக்க அனுபவத்துக்கும் இலங்கை அனுபவத்துக்கும் உள்ள முரண்பாடுகள் உடன்பாடுகளைத் தெளிவுபடுத்திவிட்டு அவர்களது மனிதாபிமானத்தை வெளியிடுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

தினமணியின் தலையங்கம் அபத்தமானது. விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பியதற்காக ஜெயலலிதாவைக் கண்டிக்கிற கருணாநிதியின் குரல் அதினிலும் அபத்தமானது.

முத்தமிழறிஞர் கலைஞரும் உலக வரலாற்றைப் படிக்க வேண்டியிருக்கிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82522/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.