Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிக்கெற், தண்ணி, சிங்களவன், தமிழன், ஆண், பெண்...நல்லதொரு பொழுதுபோக்கு நாவல்

Featured Replies

கனடா வந்தது முதல் கிறிகெற்றில் அதிகம் ஈடுபாடில்லை. எப்போவாவது சில தடவைகள் விளையாடியும் எப்போதாவது சில தடவை பார்;த்ததோடும் சரி. இந்நிலையில் இரு வாரங்களிற்கு முன்னர் புத்தகக் கடையில் எதேச்சையாக ஒரு நூல் கண்ணில் பட்டது. எழுதியது ஒரு சிங்கள எழுத்தாளன். புத்தகம் கிறிக்கற் சார்ந்தது. என்னிடம் வாசிப்பதற்கு எதுவும் இருக்கவிலலை. கின்டில் வேறு அமசோனின் மாற்றீட்டிற்காய்த் காத்திருந்தது. எனவே என்னதான் எழுதியிருக்கிறார்கள் பார்ப்போம் என்று வாங்கி வந்தேன். வாசித்து முடித்த நிலையில், உண்மையில் பாராட்டிற்குரிய நூல்.

பெரிதாய் ஆழமாக எதையும் பேசவில்லை. சில தரவுகளில் கூட தவறுண்டு (உதாரணம்: 83 கலவரம் புலிகள் ஒரு கடற்படைப் படகைக் கவிழ்;த்ததைத் தொடர்ந்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது). ஆனால் ஆசிரியர் தன்னை அரசியல் நிபுணன் என்றோ வரலாற்றாசிரியன் என்றோ கூறவில்லை. கிறிக்கட் பிடிக்கும் ஒரு குடிகாரனின் பேச்சு என்ற மட்டத்திலேயே பேசியுள்ளார். மிக எளிய நடையில ஆனால் நிறைய கிறியேற்றிவிற்றியோடு ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த உணர்வைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த ஒரு எழுத்தாளனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களுள், என்பை; பொறுத்தவரை இந்நூல் முதலிடம் பெறுகிறது.

குடைசியாக உண்மையில் இரசித்து நான் கிறிக்கெட் பார்த்தது எண்பதுகளின் நடுப்பகுதியில் யாழ் இந்துவில் படிக்கையில். அந்தவகையில் மென்டிஸ், மடுகல்ல, மாஜறினோடு வரும் கிறிக்கெட் ஸ்ரிக்கர், சப்பல், டெனிஸ் லில்லி, பொத்தம் போன்ற பெயர்கள் அக்காலகட்டத்து மச்சுகளோடு விபரிக்கப்படுவது பழைய நினைவுகள் பலவற்றைக் கிழறிப்போட்டது—ஊரில் கிறிக்கெட் விழையாடிய அனைவரும் 'லாஸ்ற் மான் நோ ச்சான்ஸ் அல்லது லாஸ்ற் மான் ஹாவ் ச்சான்ஸ்' என்ற ஒரு பதத்தைக் கேள்விப்பட்டிருப்பர். ஏறத்தாள இருபத்தியிரண்டு வருடங்களின் பின்னர் அந்தப் பதத்தை வாசித்தபோது பழையஞாபங்கள் ஏதேதோ கோணங்களில் இருந்து வந்தன.

கிறிக்கற் மட்டுமன்றி, மதுவிற்கு அடிமையானவனின் மனநிலை, காதல், காமம், கணவன் மனைவி உறவு சண்டை, பெற்றோர் பிள்ளைகள் உறவு, பெற்றோரின் பிள்ளைகள் சார்ந்த குற்ற உணர்வு, இப்படி வாழ்வின் பல விடயங்கள்; மிகச்சிறப்பாகப் பதியப்பட்டுள்ளது. கிறியேற்றிவிற்றிக்கு 99 மார்க் கொடுக்கலாம்.

நீங்கள் தண்ணி அடிச்சுப் party பண்ணுபவராக, இலங்கையில் எண்பதுகளில் கிறிக்கெட் ரசிகராக இருந்தவராயின் நிச்சயம் உங்களிற்கு இந்நூல் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும். எழுத்துமுறை அருமையாக இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலால், தமிழன் பக்க நியாயங்கள் சார்ந்து சிந்திக்கத் தலைப்படும் சிங்களவராக எழுத்தாளர் வெளிப்படுவதும் வாசிப்பனுபவத்திற்கு துணைசேர்க்கிறது.

நூலின் பெயர்: The legend of Pradeep Mathew

எழுத்தாளர்: Shehan Karunatilaka

பதிப்பகம்: Graywolf Press

இந்நாவலின் பேசுபொருளான பிரதீப் மத்தியூ பாத்திரத்தின்; பெயரைத் தவிர மற்றைய அனைத்தும் நிஜமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று ஆசிரியர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நான் யோசித்தவரை வினோதன் ஜோன் தான் அண்ணளவாகக் கிட்டவருகிறது. ஆனால் அவரது பந்துவீச்சுமறை வேறுபடுகிறது. பிரதீப் மத்தியூ பாத்திரம் நிஜத்தில் எந்தக் கிறிக்கெற் ஆட்டக்காரரைக் குறிக்கிறது என்று தெரிந்தால் அறியத்தாருங்கள்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்திற்கு நன்றி இன்னுமொருவன்...இந்த புத்தகம் இலங்கை கிரிக்கட் வீரர்களை பற்றியதா? அல்லது கிரிக்கட்டைப் பற்றியதா?

  • தொடங்கியவர்

...இந்த புத்தகம் இலங்கை கிரிக்கட் வீரர்களை பற்றியதா? அல்லது கிரிக்கட்டைப் பற்றியதா?

நன்றி ரதி, வருகைக்கும் கேள்விக்கும்.

சுருக்கமாகச் சொல்வதாயின், ஒரு அதிசிறந்த கிறிக்கெட்வீரர் இலங்கையில் பிறந்திருந்து, அதுவும் தமிழராகப் பிறந்திருப்பின் இலங்கையின் கிறிக்கெட் இயந்திரத்துள் அந்த வீரனின் திறமைக்கு இடம் கிடைக்குமா என்ற எழுத்தாளரின் கேள்வியில் பிறந்தது தான் புத்தகம். பிரதீப் மத்தியூ என்ற பாத்திரம் அவ்வாறான ஒரு பாத்திரம். சில போட்டிகளில் மட்டும் ஆடி, அதற்குள்ளாகவே மலைப்பேற்றும் புள்ளிவிபரத்தைப் பந்துவீச்சில் சாதித்த ஒரு பாத்திரம். ஆனால், சில போட்டிகளின் பின்னர் அந்தப் பாத்திரம் காணாது போய்விடுகிறது. அப்பாத்திரத்தின் சாதனைகள் எல்லாம் கிரிக்கட் வரலாற்று ஆவணங்களில் அளிக்கப்பட்டுப்போகின்றன. வரலாற்று ஆவணங்கள் பிரதீப்பின் புள்ளிவிபரங்களையும் சாதனைகளையும் அழித்தாலும், பிரதீப் விளையாடிய சில போட்டிகளை நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.

டபிள்யூ.ஜி.கருணாசேன அவ்வாறாறு பிரதீப்பின் திறமையினகை; களத்தில் நேரடியாகப் பார்த்த, இரு தடவை சிறந்த ஊடகவியலாளரிற்கான பரிசினைப் பெற்ற, இப்போது வயதாகிவிட்ட, நன்றாகத் தண்ணியடிக்கும் ஒரு மனிதர். அவரிற்கு அரி என்று ஒரு சிங்கள நண்பன். அரி கணக்கு மட்டும் புள்ளிவிரங்களில் ஒரு புலி. இவர்கள் இருவரிற்கும் கிரிக்கற்றின் அத்தனை அம்சங்களும் அத்துப்படி என்பது மட்டுமன்றி, பிரதீப்பை இவர்கள் இருவருமே இலங்கை வரலாற்றின் அதிசிறந்த திறமை என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். இந்நிலையில், பிரதீப் பல வருடங்களாகக் காணாது போய்விட்ட நிலையில், பிரதீப்பிற்கு என்ன நடந்து, அவர் எங்கே என்று இருவரும் தேடத் தொடங்குகிறார்கள். அந்தத் தேடலின் நகர்ச்சி தான் நாவல்.

ஆனால் அதை அரசியலாகப் பேசாது, ஒரு சாதாரண துப்பறியும் நாவலாகப்பேசாது, இலங்கையின் அரசியல், வாழ்க்கை முறை, துவேசம், கழியாட்டங்கள் என்று இன்னோரன்ன பல விடயங்களை உள்ளடக்கி, கிரிக்கட் பிடிக்காதவர்களும் இரசிக்கக் கூடிய விதத்தில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பிரதீப் மட்டுமன்றி, பிரதீப்பிற்கு அத்தனை வி;த்தையையும் கற்றுக் கொடுத்தவர் கூட ஒரு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து றோயல் கல்லூரியில் படிப்பித்து, பின்னர் திருட்டுக்குற்றச்சாட்டில் வேலைநிறுத்தம் செய்யப்பட்ட கோகுலநாத் என்ற ஒரு மனிதர். பல மனிதர்களின் பலவீனங்கள், அந்தரங்க பக்கங்கள் என்று நாவல் முனைந்துள்ளது. எழுத்து முறை அலுப்புத்தட்டாது நன்றாக இருக்கிறது.

பிரதீப் மத்தியூ மட்டுமன்றி, அவரைத் தேடுகிறது கருணாசேன மற்றும் அரி, அவர்களது குடும்பங்கள், இலங்கையில் வெள்ளைக்காரரின் செயற்பாடு, மர்ம விளையாட்டு மைதானம், தெருச் சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டுக்கள், கொழும்பில் இயங்கும் ஒரு இயக்கப் பெரும்புள்ளி என்பனவற்றினூடாகவும் கதைகள் நகர்கின்றன.

என்னைப் பொறுத்தவரை, அலுப்புத்தட்டாது நல்லதொரு பொழுதுபோக்கு நாவல்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தகம் கடந்த ஆண்டே வந்துவிட்டது....

கருப்பு இனத்தை சேர்ந்த ஒரு நண்பர் தான் வாசித்ததாகவும் என்னை வாசிக்கும் படியும் சொன்னார்.

எனக்கு விளையாட்டில் பிடிக்காத விளையாட்டே இந்த கிரிகேட்தான் அதனால் அதை வாசிக்கவில்லை.

அந்த நண்பர் என்னை வெள்ளைக்காரரின் எடுபிடி என்றுதான் சொல்லுவார். உன்னிடம் உண்மை இல்லை நீ உனது நாட்டிற்கு விசுவாசமில்லை என்று சொல்லுவார். நான் வாசிக்க மாட்டேன் என்று அதன் கருத்துக்களை எனோடு பகிர்ந்தார்.

இப்போது நிறைய எனக்கு ஞாபகம் இல்லை. அதன் கரு பொருள் ரேசிசம் மைநோரட்டி மக்களை முன்னேற ஒருபோதும் விடாது என்பாதாக இருக்கும். அமெரிக்காவில் கறுப்பினத்தவரை வெள்ளைகள் முன்னேற ஒருபோதும் விடமாட்டார்கள் என்பது அவருடைய கருத்து.

என்னுடைய வாதம் கறுப்பினத்தவரின் சோம்பேறி தனம்தான் தடைக்கல்லே தவிரே வெள்ளை காரன் இல்லை என்பதாகும்.

தன்னுடைய பக்கவாதம் உண்மை என்று நிருபிக்க அவர் இப்படியான புத்தகங்கள் கட்டுரைகளை எனக்கு தருவார்.

  • தொடங்கியவர்

இந்த புத்தகம் கடந்த ஆண்டே வந்துவிட்டது....

..

என்னுடைய வாதம் கறுப்பினத்தவரின் சோம்பேறி தனம்தான் தடைக்கல்லே தவிரே வெள்ளை காரன் இல்லை என்பதாகும்.

உண்மைதான் புத்தகம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் எனக்கு இருவாரம் முன்னர் எதேச்சையாய்த் தான் தெரியவந்தது.

முன்னேற்றமின்மைகளை முற்றாக துவேசம் முதலிய காரணிகளின் தலையில் சுமத்திவிடமுடியாது என்ற உங்களின் கருத்தோடு முரண்பாடில்லை. இந்நாவலிலும் துவேசம் என்பனவற்றிற்கப்பால் பிரதீப்பின் குணவியல்புகள் எவ்வாறு அவரைப் பாதித்தன என்றும் நிறையவே பேசப்பட்டுள்ளது.

நான் நினைக்கிறேன், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது, அல்லது உண்மையில் உள்ளுர மட்டமாக இருக்கும் என்று கூட ஒருவேளை நினைத்தபடி வாசித்ததாலோ என்னமோ எனக்கு பிடித்துப்போனது.

மற்றையது, இது மிக இலகுவான வாசிப்பிற்கானது. அதிகம் வரிகளிற்கிடையோ யோசிக்கத் தேவையற்ற, அழகாகச் சித்தரிக்கப்பட்ட, அழகியல் நிறைந்த ஒரு நூல் என்பதும் பிடித்ததற்க ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி இன்னுமொருவன் தங்கள் பதிலுக்கு நேர‌ம் கிடைக்கும் போது வாசித்து விட்டு எனது கருத்தை சொல்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.