Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வருகிறார் ரொபர்ட் பிளெக்

Featured Replies

[size=4]தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் ஜூனியர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். செப்டெம்பர் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர் செப்டெம்பர் 14 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான முன்னாள் தூதுவரான ரொபர்ட் ஓ பிளெக், இறுதியாக 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தார்.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/48190-2012-09-07-12-28-03.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் வருகிறார் போகிறார் காலங்கள்தான் கடந்து போகின்றது ஆனால் தமிழர்களின் நிலையில் மட்டும் மாற்றம் எதுவும் நிகழவில்லை ! :rolleyes:

  • தொடங்கியவர்

[size=4]இந்த வரவானது கிழக்கு தேர்தல் பற்றியும் அடுத்த ஐ.நா. நகர்வுகள் பற்றியும் சில முடிவுகளை ஏற்படுத்தும்.[/size]

[size=4]அகாசியின் பின்னூட்டமும் முக்கியம் பெறும்.[/size]

இவர் அமெரிக்க ராஜாங்க அமைச்சில் பிடிதளர்ந்த ஒரு அதிகாரியாக வந்துவிட்டதாக சில சமிஞ்சைகள் தெரிவிக்கின்றன. தனது முழு அதிகாரபலத்துடன் வந்து போன நாட்களில் கூட இவர் இலங்கையில் சந்தித்தது படுதோல்விகளை. மகிந்த வெளிப்படையாக ராஜாங்க அமைச்சை பாதுகாப்பு அமைச்சு மதித்து நடப்பதில்லை என்றும் தனக்கு பாதுகாப்பு அமைச்சில் தேவையான துணை இருப்பதாகவும் ஒருவருடத்திற்கு முன்னர் கூறியிருக்கிறார். இதனால் பிளேக்கால் ராஜதந்திர ரீதியில் எதிலும் இலங்கையை தன்னுடன் ஒத்து போக வைக்க முடியாது. வழமை போல் பிளேக்தான் இலங்கைக்கு ஆமா போட்டுவிட்டு திரும்பி போக வேண்டும். கடந்த டிசம்பரில் இவர் இலங்கையிடம் 3 நாடகளாக வாதாடி ஐ.நா பிரேரணைக்கு பெற்று சென்ற ஒத்துழைப்பை, மனித உரிமைகள் சபையில், பிரேரணை ஆரம்பமாவதற்கு ஒருநளாக முன்னர் அமெரிக்க அதிகாரிகளால் சகநாடுகளுக்கு அனுப்பிய மின்னல் அஞ்சலை மறுத்ததின் மூலம் இலங்கை அரசு புஸ்வாணமாக்கி இவரை எல்லோரும் பரிகசிக்க வைத்துவிட்டது. அந்த இடத்தில் இவருக்கும் இலங்கைக்கும் இருக்கும் உறவு "இருந்து முகந்திருந்தி" என்ற பாட்டில் வரும் கணவனதும் மனைவியினதும் உறவுக்கு சமமானது.

இவர் இலங்கையிடமும் இந்தியாவிடமும் வெளியில் தெரிய வராத காரணங்களுக்கு நசியல் போக்கை கடைபிடிக்க வேண்டிய நிலையில் மட்டுமே இருக்கிறார். இது அமெரிக்க வல்லரசை இலங்கையின் முன் இரண்டாம் இடத்திற்கு தள்ள வைக்கிறது. இலங்கை, சீனா முதலாவதாக வரும் வரை அமெரிக்காவை பிளேக் போன்றவர்களை வைத்து கடத்தல் போக்குகளை கையாள்கிறது. இப்படி காலம் தள்ளினால் சீனா முதலிற்கு வரும் அன்று, அமெரிக்காவை. மூன்றாம் இடத்தில் வைக்கலாம் என்று எண்ணுகிறது(இதையேதான் இன்றுவரை இஸ்ரேல் அமெரிக்காவை தன் கைக்குள் வைத்துக்கொண்டு செய்துவருவது). சீனா முதலாகவரும் அன்று, இலங்கை சிவனி(சீனாவி)ன் களுத்திலிருந்து கொண்டு, கருடன் கொடியுடன் இருக்கும் அமெரிக்காவைப்பார்த்து கருடா சௌக்கியமா என்று தைரியமாக கேட்கும். மேலும் இதை இந்தியாவுக்கு பலதடவைகள் செய்தும், அமெரிக்க ராஜாங்க அமைச்சுக்கு பாதுகாப்பு அமைச்சை வைத்து கொண்டு டிமிக்கி கொடுத்தும் வெற்றி கண்டு தேவையான தைரியத்தை வளர்த்திருக்கிறது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.